stalin 600

தி.மு.கழகத்தின் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் தன் இரண்டாம் கட்டப் பயணத்தை நிறைவு செய்யும் தருணத்தில் உள்ளார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. வரப்போகும் மாற்றத்தின் அறிகுறியாகவே இப்பயணம் அமைந்துள்ளது. ஆளும் கட்சியும், பிற கட்சிகளும் இப்பயணத்தின் தாக்கம் குறித்து நன்கு உணர்ந்துள்ள போதிலும், வெளியே வேறு முகம் காட்டுகின்றனர்.

தளபதியின் பயணத்தில் இன்னொரு குறிக்கத்தக்க நிகழ்வும் நடைபெறுகிறது. அவர் போகும் இடமெல்லாம் மக்கள் மனுக்களை அவரிடம் கொடுக்கின்றனர். பொதுவாக, ஆளும்கட்சி அமைச்சர்கள் அல்லது அக்கட்சித் தலைவர்களிடம்தான் மக்கள் மனுக்களைக் கொடுப்பார்கள். ஆனால் இப்போது தளபதியிடம் எல்லோரும் மனுவை அளிப்பதற்கு என்ன காரணம்? அடுத்து வரப்போகும் ஆட்சி தி.மு.க. ஆட்சிதான் என்பதை மறைமுகமாக உணர்த்துகின்றார்கள் என்றே தோன்றுகிறது!

இருளாட்சி முடியட்டும்! அருளாட்சி விடியட்டும்!!

---------------------------

மக்களையும் நீதிமன்றங்களையும் அவமதிக்கும் தமிழக அரசு!

ஜெயலலிதா தலைமையிலான இன்றைய தமிழக அரசு, 110 விதியின் கீழ் ஏராளமான திட்டங்களை அறிவிக்கும். ஆனால் அவற்றிற்கான நிதி ஒதுக்கீடோ, நிறைவேற்றும் திட்டங்களோ எவையும் இருக்காது. இவ்வாறு மக்களைத் தொடர்ந்து அவமதிக்கும் தமிழக அரசு, நீதிமன்றங்களையும் தொடர்ந்து அவமதித்து வருகிறது.

வழக்கறிஞர் கே.கே. ரமேஷ், தகவல் அறியும் ஆணையத்தின் மூலம் பெற்ற சில செய்திகளின் அடிப்படையில், உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்புகளை நிறைவேற்றாமல் தமிழக அரசு அவற்றை அவமதிப்பதாக அந்த வழக்கு தொடரப்பட்டுள்ள்ளது.

2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரையில், தமிழக அரசின் மீது, சென்னை உயர் நீதி மன்றத்தில் 12527 வழக்குகளும், மதுரை உயர் நீதி மன்றத்தில் 8475 வழக்குகளும் அவமதிப்பு வழக்குகளாகத் தொடரப்பட்டுள்ளனவாம். ரமேஷ் தொடுத்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், இந்தியாவிலேயே, நீதிமன்றங்களை இந்த அளவு அவமதிக்கும் அரசு தமிழக அரசாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் தமிழக அரசு முதலிடத்தில் இருக்கலாம் என்று கூறியுள்ள நீதிபதிகள், அரசுக்குத் தங்களின் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். வரும் 23 ஆம் தேதிக்குள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இதற்கான விளக்கத்தைத் தர வேண்டும் என்று பணித்துள்ளனர்.

ஆனால் இதற்கெல்லாம் ஜெயலலிதா அரசு வெட்கப்படக் கூடிய அரசா என்ன? மக்களையே அவமதிக்கும் அரசுக்கு நீதிமன்றம் ஒரு பொருட்டாகுமா?

-----------------

Pin It