கோயில்களில் பாலுறவு தொடர்பான சிற்பங்கள் இருப்பது குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அண்மையில் பேசியிருந்தார்.

 உடனே காயத்ரி ரகுராம் என்ற நடிகை நாவடக்கம் மீறித் தோழர் திருமாவைப் பேசியது இன்று சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

temple statue 390கோயில் என்பது கருவூலமாகவும், நீதி பரிபாலன இடமாகவும் இருந்தது. அன்று மக்களின் வாழ்வியலை ஒட்டி அக்கோயில்களில் பாலுறவுச் சிற்பங்கள் இடம் பெற்றன. ஆனால், கோயில்களில் இத்தகைய சிற்பங்கள் இல்லை என்று சொல்ல முடியாது.

இந்தப் பொருளில் தோழர் திருமா பேசிய ஒரு வரியை வைத்துக் கொண்டு இந்துக் கோயில்களுக்கு எதிராக அவர் பேசினார் என்று ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் பின்புலத்தில் இருந்துகொண்டு காயத்ரி ரகுராம் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் ஆபாசச் சிலைகள் இல்லை என்று இதுவரை அவர் சொல்லவில்லை.

தோழர் திருமாவளவன் தனிமனிதன் இல்லை. அவரின் பின்னால் இலட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் அணிவகுத்து நிற்கிறார்கள்.

இந்நிலையில், பார்ப்பனிய ஆணவத்தோடு தோழர் திருமாவுக்கு மடிசார் சேலை அனுப்புங்கள், பார்த்த இடத்தில் அடியுங்கள், கடற்கரையில் இருக்கிறேன் வா பார்க்கலாம் என்றெல்லாம் அந்தப் பெண் அத்துமீறிப் பேசியது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

திருமாவை வம்புக்கு இழுத்த அந்தப் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். பின்புல நடிகை, எச்.ராஜா, எஸ்.வீ.சேகர் போன்றவர்களைத் துணைக்கு அழைக்கவில்லை.

மாறாக, பா.ம.க.வின் நிறுவனர் மருத்துவர் ராமதாசைத் தோழர் திருமாவுக்கு எதிராகத் துணைக்கு அழைத்திருக்கிறார்.

இங்கேதான் பார்ப்பனியம் அதன் வேலையைக் காட்டுகிறது. ராமதாஸ், திருமாவளவன் இவர்களை வைத்து இரு சமூகங்களுக்கிடையே கலவரத்தை உருவாக்கும் வேலையை இந்த நடிகை மூலம் உருவாக்க முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது. நல்ல வேளை, மருத்துவர் அந்தக் களத்தில் இருந்து ஒதுங்கி விட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் மீது இழிவு சுமத்தும் சொற்களைப் பயன்படுத்தியுள்ள காயத்ரி ரகுராமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

Pin It