நெஞ்சில் நெருப்பேந்தி

நெடுகப் போராடி

வஞ்சகர் போர்க்களத்தில்

வாழ்வைப் பலியிட்டு

எரிந்து போனார்கள்

எங்கள் மாவீரர்

 

களத்தில் போராடிக்

காற்றில் கலந்தார்கள்

 

மண்ணின் விடுதலைக்காய்

மண்ணில் புதைந்தார்கள்

களத்தை இழந்தாலும்

கனவை மறக்கவில்லை

காலம் விடைசொல்லும்

கனியும் தமிழீழம்!!

-------------------

1957 நவம்பர் 26 - சாதியைக் காப்பாற்றும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எரித்துவிட்டுத் தந்தை பெரியார் 4 ஆயிரம் தெண்டர்களுடன் சிறை புகுந்த நாள்.

“நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்

 நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்

 நம் சட்டம் சாதி காப்பாற்றும் சட்டம்

 நம் இலக்கியம் சாதி காப்பாற்றும் இலக்கியம்”

- என்றார் பெரியார்.

Pin It