ஆசப்பட்ட எல்லாத்தையும்
காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா? - யாரும்
அம்மாவ வாங்க முடியுமா?

இது பலருமே காதில்கேட்ட
பாசமிக்கப் பாட்டுப் பல்லவி.

ஆசப்பட்டா அம்மாவையும்
அன்பிருந்தா வாங்கலாம்
தங்கத்த வாங்க முடியுமா?- ஏழை
தங்கத்த வாங்க முடியுமா?
இது யாருமே கேட்டிராத
ஏழை மனப்பாட்டுப் பல்லவி!

- சோலை கண்ணன்

Pin It