கடந்த 19-06-2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

கோவை மாநகராட்சிக்கான மொத்த நீர்த் தேவை 265 மில்லியன் லிட்டர். சிறுவாணி அணையில் இருந்து 1.30 டி.எம்.சி குடிநீர் வழங்க தமிழக அரசும், கேரள அரசும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளன.

mk stalin and binarayi vijayan 650ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் கேரள அரசு 0.484 டி.எம்.சியில் இருந்து 1.128 டி.எம்.சி அளவுக்குத்தான் நீர் வழங்குகிறது.

காரணம் கேரள நீர்ப்பாசனத்துறை சிறுவாணி அணையின் முழு நீர் தேக்க மட்டம் 878.50 மீட்டர் வரை நீரைத் தேக்காமல் குறைவாகத் தேக்கி வருகிறது.

இதனைச் சுட்டிக்காட்டி 878.50 மீட்டர் வரை நீரைத் தேக்கத் தமிழ் நாடு முதல்வரின் வேண்டுகோளை ஏற்று அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். அது மட்டுமன்று. சிறுவாணி அணை குறித்துப் பேச கேரள முதல்வர் வைத்த வேண்டுகோளைத் தமிழக முதல்வர் ஏற்றுக் கொண்டார்.

இரு மாநில நதி நீர்ப் பிரச்சனையை எப்படிச் சரி செய்ய வேண்டும், எப்படிப்பட்ட அணுகுமுறை இருக்க வேண்டும் என்பதற்கு இந்த முதல்வர்கள் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.

அண்டை மாநிலமான கர்நாடகம் பொறுப்பற்று, அணை கட்டுவோம், இவ்வளவுதான் நீர் கொடுப்போம், என்று வீம்பு பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது.

சிறுவாணி குறித்து, தமிழக முதல்வர், கேரள முதல்வர்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், கர்நாடகம்.

Pin It