24 மாணவர்கள் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட செய்தி இந்தியாவெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் வி.என்.ஆர். ஜோதி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவர்கள் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குல்லு, மணாலிப் பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள பியாஸ் நதியில் குன்றுகளின் மீது ஏறி நின்று படம் எடுத்துக் கொண்டிருந்தபோது வந்த திடீர் வெள்ளம் 24 மாணவர்களை இழுத்துச் சென்றுள்ளது. எவராலும் காப்பாற்ற முடியவில்லை.

எப்படி வந்தது திடீர் வெள்ளம்? செய்தித் தாள்கள் தரும் செய்தி நம்மை நிலைகுலைய வைக்கிறது. அங் கு நடைபெற்ற மணல் கொள்ளையை மறைப்பதற்காக லார்ஜி அணைக்கட்டு திறந்து விடப்பட்டுள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி திறந்துவிடப்பட்ட தண்ணீரே வெள்ளமாய் வந்து 24 இளம் உயிர்களைக் குடித்திருக்கிறது.

யாரோ அடித்த கொள்ளையை மறைக்க, யாரோ செய்த தவற்றுக்கு 24 மாணவர்கள் பலியாகி உள்ளனர். அவை நீர் குடித்த உயிர்கள் இல்லை, மணல் குடித்த உயிர்கள்!

Pin It