anna university 532பாசிச பாஜகவின் மத்திய அரசிடமிருந்து நீதி, நேர்மை, நாணயம் போன்றவைகளை எதிர்பார்ப்பது தவறுதான். என்றாலும் அரசு என்பது மக்களுக்கானது என்பதால் நீதி கேட்டு மக்களின் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

மத்திய பாசிக - பாஜக அரசு மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதிலும், குறிப்பாகத் தமிழ் மொழியை, தமிழக வளத்தை அழிப்பதிலும் மிகக் குறியாக இருக்கிறது. ஆனால், பார்ப்பன நலத்திற்கு எந்த ஊறும் செய்வதில்லை.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்சாதிக்கான (பார்ப்பனர்)  10% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் அதே வேளையில் பிற்படுத்தப்பட்டோருக்கான 69 % இடஒதுக்கீட்டை நிறுத்திவிட்டது. இது சூத்திரர்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாகக் கருத வேண்டியிருக்கிறது.

அதே பல்கலைக்கழகம் எம்.டெக் போன்ற உயர் கல்வியையும் ரத்து செய்திருக்கிறது. இந்த நடைமுறை மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக் கழகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.

ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற்று விடக்கூடாது, அதாவது பார்ப்பனர்களைப் போல அல்லது அவர்களுக்கு இணையாக இவர்கள் உயர்ந்து விடக்கூடாது என்பதை இது உணர்த்துகிறது.

தமிழ்நாட்டில், தமிழக மண்ணில், தமிழ்மக்களின் வரிப்பணத்தால் கட்டப்பட்ட பல்கலைக்கழகங்களின் மாநில உரிமையை மத்திய அரசு வலுக் கட்டாயமாகப் பறிக்கிறது.

இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

- சுப.வீரபாண்டியன்

Pin It