Bookவண்ணப்படங்கள் நிறைந்ததாய்
நினைத்து வாங்கிய புத்தகம்
கனக்கத் தொடங்கியது
கைகளில்...

சுவாரசியத்தின் நச்சரிப்பு தாளாமல்
பிரிக்கத் தொடங்கினாள்

பக்கங்கள் நீல நிறமாயும்
சில ரத்த நிறத்திலுமாய்
எழுதப்பட்டிருந்தன
வேறு சில வெற்றுத்தாள்களாகவும்..

சலிப்பின் இறுதியில்
கிழித்தெறியத் தொடங்கினாள்
அந்தப் புத்தகத்தையும்
அவளையும்.

சகாரா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.