agitation against modi

காவிரி நீர்ச் சிக்கலில் தமிழகமே கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில், தன் இறுதித் தீர்ப்பை இந்திய உச்ச நீதி மன்றம், 16.02.2018 அன்று வழங்கியது. தமிழகத்திற்கு 192 டி.எம்.சி தண்ணீருக்குப் பதிலாக, 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்கினால் போதும் என்பதும், அதனை ஒழுங்குபடுத்த ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதும் அத்தீர்ப்பின் சாரம்.

ஆனால் ஆறு வாரங்கள் கழியும்வரை அமைதியாக இருந்த மத்திய அரசு, கடந்த 30 ஆம் தேதி உச்ச நீதி மன்றத்தை அணுகி, ஸ்கீம் என்றால் என்ன என்று கேட்டுள்ளதோடு, கர்நாடகத் தேர்தலை ஒட்டி, அந்த வாரியம் அமைக்க மூன்று மாத கால அவகாசமும் கேட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு செய்துள்ள பச்சைத் துரோகம் ஆகும்.

இதனை எதிர்த்து, கடந்த 12 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வந்தபோது தமிழகமே அவருக்குக் கறுப்புக் கொடி காட்டியது. அதனை எதிர்கொள்ள அஞ்சிய பிரதமர், தரையில் கால் வைக்காமல், வானிலே ஹெலிகாப்டரில் பறந்தார், பயந்து ஓடினார் என்று சொல்லக் கேட்டுள்ளோம். முதன் முதலில் பயந்து பறந்த பிரதமரைத் தமிழகம் கண்டது.

காவிரி நீர் வந்து சேரும் வரை தமிழகம் ஓயாது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டிய நேரம் இது! தமிழக மக்களே ஒன்றிணைவோம், போராடுவோம்!!

Pin It