02.02.2013, திராவிட இயக்க நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழாவில்

umapathiஇந்த திராவிட மூவ்மென்டோட வியாசங்கள் அடங்கிய இந்த பொஸ்தகத்த வெளியிடுறதுக்கு வந்து, இந்த வைபவத்திற்குத் தலைமை தாங்கிய, அக்கிராசனாதிபதி கணம் கயல்.தினகரன்ஜி அவர்களே, இந்த வியாசங்கள் அடங்கிய பொஸ்தகத்த வெளியிட்டு, அதைப் பிரஸ்தாபித்துப் பேச வந்திருக்கும் தி.மு.க. ஸ்தாபனத்தின் இன்றைய பொக்கி­தாரர், வருங்கால அக்கிராசனாதிபதி, சேனாதிபதி மகா மகா கணம் பொருந்திய, மகா ஸ்ரீ ஸ்ரீ ஸ்டாலின்ஜி அவர்களே, மலரைப் பெற்றுக்கொண்டு, பெருந்தொகை வழங்கி கெளரவித்த, திருவண்ணாமலை ஜில்லா கமிட்டியின் காரியதரிசி, மாஜி மந்திரி மகாகணம் பொருந்திய எ.வ.வேலு அவர்களே, இங்கே பிரஸ்தாபிக்கப்பட்ட இந்த பொஸ்தகம் வெளிவருவதற்குப் பெரும்பொறுப்பு எடுத்துக்கிட்ட, திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஸ்தாபனத்தின் காரியதரிசி சுப.வீரபாண்டியன் அவர்களே, இங்கு பொஸ்தகம் குறித்து வியாக்கியானங்களை வழங்கியிருக்கும், கணம் ஜட்ஜய்யா அவர்களே, மகாவித்துவான் மேத்தா அவர்களே, வக்கீல்தாரர் அருள்மொழி அவர்களே, வந்திருக்கக்கூடிய மகாஜனங்களே, எல்லாருக்கும் நமஸ்காரம்!

தெளிவா தெரிஞ்சிதான் பேசறேன். இந்த அரங்கத்துக்குள்ள எங்கயும் கல்லு இல்லன்னு தெரிஞ்சிக்கிட்டுதான் பேசறேன். திராவிட இயக்கம்னு ஒன்னு இல்லாமப் போயிருந்திச்சின்னா, இங்க மேடைகள் எல்லாம் இப்படித்தான் இருந்திருக்கும்.

Pin It