ஒரு பெண்ணும், ஆணும் ஈர்ப்பும் அன்பும் கொண்டு பழகிக் களித்திருக்க எந்த சடங்கையும் நியதியையும் இயற்கை இன்று வரை வகுக்கவில்லை. ஆனால் பிறப்பு வழி வருகின்ற இரத்த உறவும் ஆண் பெண் உடலுறவுச் சேர்க்கையும் மனித சமூகத்தின் அமைப்புகளைக் கட்டமைப்பதில் அடிப்படையான பங்கை வகித்து வந்திருக்கின்றன. இதில் பிறப்பு வழி வருகின்ற இரத்த உறவை பின்னுக்குத் தள்ளி, ஆண் பெண் உடலுறவை அடிப்படையாகக் கொண்ட திருமண பந்தங்களை முன்னுக்குக் கொண்டு வந்து நிறுத்திய வரலாறுதான் மனித சமூகத்தில் ஆணாதிக்கம் தோன்றிய, மதம் தோன்றிய, சாதி தோன்றிய வரலாறாக விரிகிறது. இயற்கையில் ஆண், பெண் உடலுறவு என்பது வாழ்வின் ஓர் அம்சமாக இருக்கிறது. ஆனால் நமது சமூகக் கட்டமைப்பில் (சொத்தை நிர்வாகம் செய்து வகைப்படுத்தி ஆள்வ தற்கான ஓர் அமைப்பு) அடிப்படை அலகாகத் திகழும் குடும்ப வாழ்வின் அடிமானமாக அந்த உறவு ஆக்கப்பட்டி ருக்கிறது. இந்த அடிப்படையில் மதங்களை எதிர்த்து நீதி நடத்தும் பெரும் பயணத்தின் இறுதியில், ‘சொத்தின் மீதான வாரிசுரிமை’ என்பதற்கும் ‘ஆண் பெண் சேர்க்கைக்கும்’ கட்டப்பட்டி ருக்கும் இந்தத் தாலி அறுத்தெறியப்பட வேண்டும்.

இந்தத் தொலைநோக்குக் கண் கொண்டு நோக்கும் போது, நீதிபதி கர்ணனின் வார்த்தைகள், ஆண் பெண் சேர்க்கைக்கு அதீத அழுத்தம் கொடுத்து விடுமோ என்று நாம் அஞ்ச வேண்டி யிருக்கிறது. மனித வாழ்க்கை அற்புத மானது. அது வெறும் ஆண் பெண் சேர்க்கை மட்டுமன்று. எல்லா உடலுறவு களும் திருமணமாகுமா என்பதை விட, திருமணமாக வேண்டிய தேவையில்லை என்பதே முக்கியமானது.

பொதுவாக இந்தத் தீர்ப்புகள் இரண்டு தளங்களிலிருந்து வெளிப்படு கின்றன. ஒன்று, பாதிக்கப்பட்ட பெண் ணுக்கு நீதி வழங்கும் வகையில். கர்ணன் தீர்ப்பு கூறியிருக்கும் வழக்கும் அத்தகை யதுதான். மற்றொன்று வாழ்க்கைத் தேர்வு மற்றும் சுதந்திரம் என்ற அடிப்ப டையில். நீதிபதி கர்ணன் இதில் பெண் ணுக்கான பாதுகாப்பு என்ற கோணத்தில் மட்டும் அணுகியிருக்கிறார். அதன் அடுத்த பக்கமான வாழ்க்கைத் தேர்வு, மற்றும் சுதந்திரம் என்ற தளத்தில் அவர் அணுகவில்லை என்பதுடன் அதில் அவருக்கான பார்வை என்ன என்பதும் வெளிப்படவில்லை. வழக்கை தொடர்ந்து தந்திருக்கும் கருத்துக்களில் அவர் பெண்களுக்கான பாதுகாப்பையும் நமது கலாச்சாரத்தையும் காப்பதற்காகவே அந்தத் தீர்ப்பினைத் தந்ததாக தெரிவித்தி ருக்கிறார். இந்த இடம்தான் முற்போக்கா ளர்களையும் இந்தத் தீர்ப்பைக் கொஞ்சம் கவனத்துடன் பார்க்க வைத்திருக்கிறது.

இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பு என்பது சட்டத்தால் உறுதி செய்யப்பட வேண்டிய நிலை அதிகமாக இருக்கிறது. எனவே நீதிபதி கர்ணன் போன்ற நீதிபதிகளும் அவர்களது தீர்ப்புகளும் தேவையாக இருக்கின்றன. அந்த அடிப்படையிலும், மதங்களுக்கு எதிரான தீர்ப்பு என்ற அடிப்படையிலும் இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கின்றது. அதே வேளையில் இந்தநிலை ‘கலாச்சாரக் காவலர்’ என்ற நோக்கில் எடுக்கப்படாமல், மனித வாழ்வின் சுதந்திரம் என்ற நோக்கிலிருந்து எடுக்கப் படும்போது மட்டுமே ‘அந்த மொழி’ புதிய சமூகத்தின் பிறப்பை உச்சரிப்பதாக இருக்கும் என்பதையும் உணர்த்த வேண்டி யிருக்கிறது. இல்லாவிட்டால் இருக்கின்ற ஒரு சிக்கலைத் தீர்த்து இன்னொரு சிக்க லுக்கு வழி சமைப்பதாக இருந்து விடும்.

மனிதர்கள் யார் யாரோடு சேர்ந்து வாழ்வது என்பதை மதங்களும், சாதிகளும், சட்டங்களும் தீர்மானிப்பது மனிதர்களின் பிறப்புரிமைக்கு விரோத மானது. உலகம் இந்த விழிப்புணர்வை மெல்ல மெல்ல பெற்று வருகிறது. இங்கிலாந்தில் கிட்டத்தட்ட முப்பது இலட்சம் மக்கள் திருமண மின்றி இணைந்து வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் நாட்டுச் சட்டம் இன்னும் இதனை அங்கீகரிக் கவில்லை. சுவீடன், கனடா, ஆஸ்தி ரேலியா போன்ற நாடுகள் சட்டப் பூர்வமாக இந்த வாழ்க்கை முறை யை அங்கீகரித்தி ருக்கின்றன. சவுதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இந்த வாழ்க்கை முறையை தடை செய்திருக்கின்றன. 2008 இல் இந்திய சட்ட அமைச்சராக இருந்த பரத்வாஜ், ‘இந்தியாவில் Living Together முறையை அங்கீகரிக்க, தேவைப்படும்போது சட்டம் கொண்டு வரப்படும்’ என்று கூறியிருக்கிறார். இந்தியாவிலும் திருமணமின்றி வாழ்ந்து கொண்டி ருக்கும் நண்பர்கள் என்னவிதமான புதிய சட்ட அமைப்பு தங்களுக்கு தேவைப் படுகிறது என்பதை எடுத்துக் கூறலாம்.

மதத்தை எதிர்த்து நிற்கும் தோழர்கள், மிகத் தெளிவாக ஒன்றை உணர வேண்டும். மதம், சாதி, சொத்து ரிமை என்ற அமைப்புகள் நிலை கொண் டிருப்பது திருமணத்தில்தான். எனவே திருமணத்தை மத, சாதிய அமைப்பு களிடமிருந்து விடுவிப்பதே சம நீதி, சம உடமைச் சமூக அமைப்புக்கு முன் நிபந்த னையாக இருக்கும். ( அரசிடம், அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாங்கித் தரும் தீவிர போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் பொதுஉடமைக் கட்சிகளின் தொழிற்சங்கவாதிகள் கொஞ்சம் கவனிக்கவும்) அந்த அடிப்படையில் அரசியல் மட்டு மன்று திருமணமும் மதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். அதற்கான ஒவ்வொரு அசைவையும் நாம் ஆதரிப்போம்.

Pin It