அண்மையில் தில்லி சென்றிருந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பத்திரிகை நிருபர்களிடம் பேசும்போது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ப. சிதம்பரம் வெற்றி பெறவில்லை. அவர் அடைந்தது தோல்வியே. தேசீய மோசடியைப் புரிந்திருக்கிறார் (He has played fraud on nation) என்று கூறியிருக்கிறார் (இந்தியன் எக்ஸ்பிரஸ்-15.06.2011-மதுரைப் பதிப்பு). சிவகங்கைத் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவு குறித்த வழக்கு, சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு அங்கேயிருக்க, தீர்ப்பை இங்கே இவர் கூறுவது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா? இதையயல்லாம் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளாதா? மேலும், இந்தியாவின் உள்துறை அமைச்சர் குறித்து ஒரு மாநில முதலமைச்சர் பேசும்போது சொற்களில் எவ்வளவு கவனமும், கண்ணியமும் இருக்க வேண்டும் என்பதை, நம் முதலமைச்சருக்கு அவர் அருகில் உள்ள மேதாவிகள் எடுத்துச் சொல்லக்கூடாதா?

Pin It