வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.

குறள் - 931

தூண்டில்முள் இரையினைத் துள்ளுமீன் கவ்வியே
 துடிதுடித் திடுதல் போல
சூதினால் வருபொருள் பெரிதெனக் கொள்ளுவான்
 சூதிலே அழிந்து போவான்
பொருள்வந்து சேர்வது போலவே தெரியினும்
 பொல்லாத சூது தன்னைப்
பொருந்தாமல் வாழ்வதே புரிந்தவர் செயலெனப்
 பொன்வரி சொன்ன குறளே!

- கவிஞர் மானம்பாடி புண்ணியமூர்த்தி

Pin It