துகள்களாய் துளிர்த்தப்
பச்சைக் கிளையில்
துகள்களாய்
அமர்ந்திருக்கிறது பறவை
பாதைச் சாரிகளோ
சற்றழுத்தக் காற்றோ
வாய்த்தால் பெய்யக் கூடிய
மழையவன்றி
பறக்கப் போவதில்லை
சற்று முன்
கிண்ணத்திலிருந்து உயிர்ப்பித்த
அக்கைகளுக்காய்
முழு இரவை ஒற்றைக் காலூன்றி
தவத்தில் கழிக்கும் அப்பறவை.
- பிரபாவரசன்