1. திரு. வைகோ அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்திருக்கிறாரே?   - விசுவநாதன், திண்டுக்கல்

வருத்தமாகத்தான் இருக்கிறது. ஏழாண்டு காலம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு உறு துணையாக நின்றார். அதற்கு அவருக்குக் கிடைத்த பரிசு என்பது அவ மானம். இதைத் திட்டமிட்டு செய்தது அதிமுக தலைமை. வெட்டி எறியவேண்டிய நச்சு மரத்திற்குத் தண்ணீர் ஊற்றி வளர்த்தார். விளைவு கூட்டணியிலிருந்து ஒதுக்கப்பட்டார். இந்த தேர்தல் பேச்சுவார்த்தைகளில் ஆரம்ப நிலையிலேயே அவமானப்படுத்தப்பட்டார். ஆறு தொகுதி என்று ஆரம் பித்து ஏழு எட்டு பிறகு, ஏழு என்றனர். பிறகு அவருக்கு வரவேண்டிய தொகுதிகளையும் சேர்த்து அதிமுக தனக்கான தொகுதிகளாக வெளிப்படையாக அறிவித்தது. கொதித்து எழுந்தனர் மதிமுக தொண்டர்கள். கொதிநிலை உயர் வதற்குள் 12 என்றார்கள். ஏற்றுச் சென்றிருந்தால் 10தான் என்று கூறி அவமானப்பட்டுத் திரும்பியிருக்கக் கூடும். நாடக மாடிகளின் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டார்.

தேர்தலைப் புறக்கணிக்கும் சில அமைப்புகள் இவை குறித்து மகிழ்ச்சி அடையலாம். அவர் சொன்னது இந்த தேர்தலில் மட்டும்தான். அவரே சொன்னார். அம்மா (செயலலிதா) ஆணவம் குறையும் என்று எதிர்பார்த்தேன். அது பொய்த் துப் போனது. ஒரு பொதுக் கூட்டத்தில் அவமானப்படுத்தப் பட்டதாகவும், விருந்துக்கு அழைத்து பாராமுகமாய் இருந்ததாகவும் வெளிப்படுத்தி இருக்கிறார் - இன்னும் வரும் என எதிர் பார்க்கலாம். இவ்வளவும் இவர் ஒரு விடுதலை வேங்கையாக இருந்ததினால் வந்த விளைவு.

வை.கோ. என்ற மனிதன் இந்த இனத்திற்காக பாராளுமன்றத்தில் எடுத்துரைத்த கருத்துகளை ஒருமுறை படித்துப் பார்த்தால் இவர் பணி தமிழினத்திற்கு எவ்வளவு தேவை என்பது புரியும். தமிழீழ மக்களுக்காக தன் குடும்பத்தோடு வாழ்நாள் பணியாக போராடி வந்தவர். உலகம் சுற்றி ஈழ விடுதலைக்காக சூறாவளிப் பயணம் மேற்கொண்டவர். முல்லைப் பெரியாறு முற்றுகைப் போராட் டத்திற்காக கேரளா செல்லும் அனைத்து சாலை களையும் மறித்து அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழக மக்களுக்காக போராடியதை மறக்க முடியுமா? தமிழீழத்தில் இந்தியா அனுப்பிய ராணுவம் செய்த கொடுமைகளை நேரில் சென்று அறிந்து வந்ததற்காக தான் நேசித்து வளர்ந்த இயக்கத்தில் இருந்து வெளியேற்றப் பட்ட பின்பும், வீழ்த்த முடியாத மாமேருவாய் எழுந்து நின்றார்.

சுகத்தை அனுபவித்த துரோகிகள் தன்னை விட்டு ஓடிய போது அகத் தூய்மையோடு இயங்கும் அரசியல்வாதி களுக்கு ஒரு வழிகாட்டியாய் நின்றார். இன்றோ சூழ்ச்சி வலை பின்னப்பட்டது. ஆதிக்க வெறி கூட்டமும் பார்ப்பன சூழ்ச்சியும், பெரு முதலாளிய தமிழின எதிரிகளோடு ராசபச் சேவின் சதித் திட்டமும் சேர்ந்து வைகோவை அதிமுக கூட் டணியிலிருந்து விலக வைத்தன. தமிழன் தலைநிமிரக் கூடாது என்பதும் தமிழீழம் விடுதலை அடைந்து விடக் கூடாது என்பதும் இவர்களின் நோக்கம். இதற்குத் தடையாக இருப்பவர் வை.கோ. இதுதான் இவருக்கு நேர்ந்த இழுக்குக் குக் காரணம். இது அவர்களுக்குத் தாற்காலிக வெற்றியைத் தரலாம். ஆனால் இது இறுதி அல்ல. ஆறு ஓடிக்கொண்டே இருக்கலாம். ஆனால் அலை மீண்டும் மீண்டும் சிறி எழும். வைகோ அலை.

2. திமுக, அதிமுக இரண்டு அணிகளுமே தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அள்ளித் தெளிக்கின்றனவே?  - கமலக்கண்ணன், ஆரணி

நிலையான கொள்கை, கோட்பாடுகள் என்று எதையும் மக்களிடம் சொல்லி வாக்கு கேட்க முடியாத அவலம், இப் படி இலவசங்களை வாரிவிட்டு வாக்கு கேட்கத் தூண்டுகின்றன. லேப்டாப், இலவச பேருந்து பயணம், தங்கம், பணம் வைப்புத் தொகை, 20 கிலோ அரிசி, ஆடு, மாடு, வீடு என்று வாரி இறைக்கிறார்கள். இந்த அறிவிப்பு கொள்கை ரீதியில் இவர்கள் திவாலாகிப் போனவர்கள் என் பதைத்தான் காட்டுகிறது. பெரியார், அண்ணா ஆகியோர் கொள்கை களைச் சொன்னார்கள். இவர்கள் வழி வந்தவர் களாகப் பெருமை பேசுபவர்கள் இலவசங்களில் புகலிடம் தேடுகிறார்கள். இந்த இலவசங்கள் என்ன செய்யும்? எந்த ஒரு மனிதனையும் சோம்பேறியாக்கி, உழைக்க வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமலாக்கிவிடும். எதிர்கால நம்பிக்கை என்பது வளர்ச்சியை நோக்கி யதாக இல்லாமல் எதிர் பார்ப்போடு ஏங்குவதாக வைத்து விடும்.

முதல்வர் சொல்கிறார், ‘இந்த நாட்டில் கடைசி ஏழை இருக்கிறவரை இலவசங்கள் தொடரும்’ என்று. ஏழை இருக்கிறவரை இலவசங்கள் தொடரும் சரி, ஏழையை மீட்டெடுத்து அவனுக்கு வளமான வாழ்வைக் காட்டுவதற்கு பதிலாக பிச்சை போடும் திட்டம் இது. நிலங்களைக் கொடுத்து உழு வதற்குக் கற்று கொடு. உணவை அவனே தேடிக் கொள்வான் என்பார்கள். அதைவிட்டு இலவச அரிசி யாரை ஏமாற்றுவதற்கு. ஓட்டாண்டி கையில் ஓட்டு இருக்கிறது. அது இவர்களுக்குத் தேவை. வெற்றி பெற்றால் நாட்டைக் கொள்ளையடிக்கலாம். ஆணையர் தனது டைமையாக்கிக் கொள்ளலாம் என்கிற பேராசைதானே. இன்று தேர்தல் ஆணையர் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார்.

“40 விழுக்காடு வேட்பாளர்கள் குற்றவாளிகள் என்றும் ஒரு கோடி செலவழித்து வெற்றி பெற்று பல கோடி சுருட்டு கிறார்கள்” என்றும். மக்கள் கொடுக்கும் வரிப் பணத்தில் ஒரு கடுகளவுதான் இந்த இலவசங்கள். இப்போது தெரிகிறதா இலவசங்களின் மர்மம். இந்த ஏமாற்று வேலைக்கு ஒரு முடிவுரை எழுதவேண்டும். இதற்கு மக்கள் சக்தி விழிப்படைந்து ஒன்றிணையவேண்டும்.

Pin It