(1906-1995)

1984 / 2006

ம.பொ.சி. என்று தமிழ் நெஞ்சங்களால் போற்றிப் புகழப்படும் ம.பொ. சிவஞானம் தமிழக ஆளுமைகளில் ஒருவர். விடுதலைப் போராட்டக் காலத்தில் சிறைத் தண்டனை பெற்றவர். மேடைத் தமிழ் வளர்த்ததில் இவரின் பங்கு முக்கியமானது. இதழாசிரியர்; அரசியல், சமூகம், இலக்கியம், ஆன்மீகம் எனும் நோக்குகளில் 140 நூல்களுக்கு மேல் எழுதியவர். இவர் இந்திய தேசியத்தையும் தமிழ்த் தேசியத்தையும் இரு விழிகளாகக் கொண்டவர். புதிய பார்வையில் இலக்கியங்களை அரசியல், சமூக மாற்றங்களுக்குப் பயன்படுத்தியவர். திராவிட அரசியலுக்கு எதிராகச் செயல்பட்டவர். அரசியலிலும், இலக்கியத்திலும் ஒன்று சேரப் புகழொளி பெற்றவர். சாகித்திய அகாதெமிப் பரிசு பெற்றவர். தமிழகத்தின் எல்லைகளையும், தலைநகரத்தையும் காத்து ‘புதிய தமிழகம்’ படைக்கப் பாடுபட்டவர். 

sivagnanam_300.பொ.சி. படைத்த நூல்கள்

தன் வரலாறு

1. எனது போராட்டம் 1974

சிறுகதை

வைகுந்தம் பிறந்தது (சிறுகதைத் தொகுப்பு) - 1980

பயண நூல்கள்

1. மலேசியாவில் ஒரு மாதம் - 1965

2. மாஸ்கோவிலிருந்து லண்டன் வரை - 1972

3. மொரிசியஸ் தீவில் ஒரு வாரம் - 1987

4. அமெரிக்காவில் மூன்று வாரம் - 1987

வாழ்க்கை வரலாறுகள்

1. கப்பலோட்டிய தமிழன் - 1944

2. வீரபாண்டிய கட்டபொம்மன் - 1949

3. கயத்தாற்றில் கட்டபொம்மன் - 1950

4. தளபதி சிதம்பரனார் 1950

5. சுதந்திர வீரன் கட்டபொம்மன் - 1950

6. கப்பலோட்டிய சிதம்பரனார் (விரிவானபதிப்பு) - 1972

7. தோழர் சிங்காரவேலர் வீர வாழ்க்கை - 1985

8. நாடகப் பேராசிரியர் - சதாவதானி கிருஷ்ணசாமிப் பாவலர் வாழ்க்கை வரலாறு - 1988

9. முப்பெரும் ஞானியர் - 1989

வள்ளலார் பற்றிய நூல்கள்

1. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - 1963

2. வள்ளலாரும் பாரதியும் - 1965

3. வள்ளலார் வளர்த்த தமிழ் - 1966

4. வள்ளலார் வகுத்த வழி - 1970

5. வள்ளலார் கண்ட சாகாக் கலை - 1970

6. வானொலியில் வள்ளலார் - 1976

7. வள்ளலாரும் காந்தியடிகளும் - 1977

8. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப் பதிப்பு) - 1978

பாரதியார் பற்றிய நூல்கள்

1. எங்கள் கவி பாரதி - 1953

2. பாரதியாரும் ஆங்கிலமும் - 1961

3. பாரதி கண்ட ஒருமைப்பாடு - 1962

4. உலக மகாகவி பாரதி - 1966

5. பாரதியார் பாதையிலே - 1974

6. பாரதியார் போர்க்குரல் - 1979

7. பாரதியார் பற்றிய ம.பொ.சி. பேருரை - 1983

காந்தியடிகள் பற்றிய நூல்கள்

1. தமிழர் கண்ட காந்தி - 1949

2. காந்தியடிகளும் ஆங்கிலமும் - 1961

3. காந்தியடிகளும் சோசலிசமும் - 1971

4. மகாத்மாவும் மதுவிலக்கும் - 1979

5. காந்தியடிகளைச் சந்தித்தேன் - 1979

6. பயங்கரவாதமும் காந்திய சகாப்தமும் - 1994

திருவள்ளுவர் பற்றிய நூல்கள்

1. வள்ளுவர் வகுத்த வழி - 1952

2. திருவள்ளுவரும் கார்ல்மார்க்சும் - 1960

கம்பர் பற்றிய நூல்கள்

1. கம்பர் கவியின்பம் - 1966

2. கம்பரிடம் யான் கற்ற அரசியல் - 1979

3. கம்பரும் காந்தியடிகளும் - 1981

4. கம்பரின் சமயக் கொள்கை - 1983

சிலப்பதிகாரம் பற்றிய நூல்கள்

1. சிலப்பதிகாரமும் தமிழரும் - 1947

2. கண்ணகி வழிபாடு - 1950

3. இளங்கோவின் சிலம்பு - 1953

4. வீரக்கண்ணகி - 1958

5. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (உரை) - 1961

6. மாதவியின் மாண்பு - 1968

7. கோவலன் குற்றவாளியா? - 1971

8. சிலப்பதிகாரத் திறனாய்வு - 1973

9. சிலப்பதிகார யாத்திரை - 1977

10. சிலப்பதிகார ஆய்வுரை - 1979

11. சிலப்பதிகார உரையாசிரியர்கள் உரை - 1980

12. சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும் - 1990

13. சிலம்பில் ஈடுபட்டதெப்படி? - 1994

மாநில சுயாட்சிப் பிரசார நூல்கள்

1. தமிழகத்தில் தமிழரசு - 1946

2. தமிழருக்குச் சுயநிர்ணயம் -1946

3. புதிய தமிழகம் - 1946

4. தமிழரும் பிரிட்டிஷ் திட்டமும் - 1946

5. தமிழரசுக் கழக முதலாவது மாநில மாநாட்டுத் தலைமையுரை - 1947

6. தமிழன் குரல் - 1947

7. சுயாட்சித் தமிழகம் - 1949

8. பிரிவினை வரலாறு - 1950

9. திராவிடத்தாரின் திருவிளையாடல்கள் - 1950

10. திராவிடர் கழகமே, வேங்கடத்திற்கு வெளியே போ - 1951

11. தமிழரசா திராவிடஸ்தானா? - 1952

12. தமிழரசுக் கழக இரண்டாவது மாநில மாநாட்டுத் தலைமை உரை - 1952

13. வடக்கெல்லைப் போர் - 1953

14. முரசு முழங்குகிறது - 1955

15. தி.மு.க.வின் கொள்கை மாற்றம் - 1957

16. சுயாட்சியா, பிரிவினையா? - 1959

17. மொழிச் சிக்கலும் மாநில சுயாட்சியும் - 1968

18. மாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு - 1973

19. சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் - 1974

20. புதிய தமிழகம் படைத்த வரலாறு - 1986

மொழிச் சிந்தனைகள் பற்றிய நூல்கள்

1. தமிழும் கலப்படமும் - 1960

2. தமிழா? ஆங்கிலமா? - 1961

3. இன்பத் தமிழா? இந்தி - ஆங்கிலமா? -1963

4. ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு வரலாறு - 1964

5. தமிழை வளர்க்கக் கோரி ஆளுநர்க்கு விண்ணப்பம் - 1976

6. நாடகத் தமிழ் - 1976

7. கல்வி மொழி தமிழா? ஆங்கிலமா? (ம.இரா. இளங்கோவன் தொகுத்தது) - 1981

8. சென்னை பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாப் பேருரை - 1981

9. ஆங்கிலம் வளர்த்த மூட நம்பிக்கை - 1982

10. தமிழும் சமஸ்கிருதமும் - 1984

11. ஆங்கில ஆதிக்கம் அகல பத்துக் கட்டளைகள் –

விடுதலைப் போராட்டம் பற்றிய நூல்கள்

1. சுதந்திரப் போரில் தமிழகம் - 1948

2. முதல் முழக்கம் - 1968

3. விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு - 1970

4. காந்தியடிகளுக்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப் போர் - 1974

5. வந்தேமாதரம் வரலாறு - 1977

6. விடுதலைக்குப் பின் தமிழ் வளர்ந்த வரலாறு - 1978

7. சுதந்திரப் போர்க்களம் - 1980

8. விடுதலைப் போரில் தமிழகம் (2 தொகுதிகள்) - 1982

9. இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது - 1986

10. வேதாரணியத்திலிருந்து டில்லி ராஜ்காட்வரை - 1988

இனவழி ஆராய்ச்சி நூல்கள்

1. கலிங்கத்துப் பரணி திறனாய்வு - 1975

2. தமிழகத்தில் பிறமொழியினர் - 1976

3. இலக்கியங்களில் இன வளர்ச்சி - 1978

4. வில்லிபாரதத்தில் தமிழுணர்ச்சி - 1981

5. இலக்கியங்களில் இனவுணர்ச்சி - 1985

பேச்சுக்கலை பற்றிய நூல்கள்

1. பேச்சுக்கலை - 1950

2. மேடைப் பேச்சும் பொதுக்கூட்டமும் - 1951

கட்டுரை நூல்கள்

1. ஏன் வேண்டும் எதிரணி - 1946

2. ஆத்திரப் பொங்கல் - 1947

3. கம்யூனிஸ்டுகள் முடிவை மாற்ற முயல்வார்களா? - 1947

4. வானொலியில் ம.பொ.சி. - 1947

5. மே தினப்புரட்சி - 1949

6. சீர்திருத்தப் போலிகள் - 1950

7. தமிழர் திருநாள் - 1951

8. இலக்கியத்தின் எதிரிகள் - 1953

9. இலக்கியச் செல்வம் - 1955

10. ம.பொ.சி. கூறுகிறார் - 1955

11. பொம்மன் புகழிலும் போட்டியா? - 1956

12. கட்டுரைக் களஞ்சியம் - 1956

13. இன்பத்தமிழகம் - 1956

14. ம.பொ.சி. பேசுகிறார் (பர்மா சொற்பொழிவு) - 1956

15. சிந்தனை அலைகள் - 1964

16. இலக்கியத்தில் சோசலிசம் - 1965

17. தமிழிசை வரலாறு - 1966

18. ஒளவை - யார்? - 1967

19. சான்றோரின் சாதனைகள் - 1970

20. ஆன்ம நேய ஒருமைப்பாடு - 1970

21. திருக்குறளில் கலைபற்றிக் கூறாததேன்? - 1974

22. தமிழிசை வாழ்க - 1978

23. கல்வி நெறிக் காவலர் (திரு.நெ.து. சுந்தர வடிவேலு மணிவிழாச் சொற்பொழிவு) -1974

24. தொல்காப்பியரிலிருந்து பாரதியார் வரை - 1979

25. ஆன்மீகமும் அரசியலும் - 1980

26. நவபாரதத்தை நோக்கி - 1982

27. சிலம்புச் செல்வரின் பல்கலைப் பேருரை -1984

28. இலக்கியங்களில் புத்திர சோகம் - 1986

29. நானறிந்த ராஜாஜி - 1987

30. இராமன் சீதாபிராட்டி வாக்குவாதம் - 1989

31. எனது பார்வையில் நாமக்கல் கவிஞர் - 1989

32. நேருஜி என் ஆசான் - 1989

33. தமிழர் திருமணம் - 1990

34. எனது பார்வையில் பாவேந்தர் - 1991

35. ஈழத் தமிழரும் நானும் - 1992

36. எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு - 1995

37. எழுத்துச் சீர்திருத்தம் - 1995

பதிப்பித்த நூல்

1. ஒளவையார் அருளிச்செய்த கல்வியழுக்கம் மூலமும் திரு.ஜே.எஸ். அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பும் - 1980

Pin It