முன்பு
சின்னதாய் தான் இருந்தது.
வளர, வளர
வெட்ட வேண்டும் என்ற
எண்ணமற்று போனதால்
அதுவே,
1.72 லட்சம் கோடி ரூபாய் வரை போய்விட்டது.

தொலைத்தொடர்பு
கோபுரங்கள் போல
உயர்ந்து தான் நிற்கிறது
2 ஜி ஊழல் .

தனியாக செய்திருக்க முடியாது தான்.
சேர்ந்து செய்தவர்களின்
பெயர்கள் தெரியுமா உங்களுக்கு?

காற்றின் திசைகளில்
கரன்சியின் வாசம்.
கத்தை, கத்தையாக
அலைக்கற்றை பணம்.

துண்டு போட்டு
மாடு பிடித்தது அந்தக்காலம்.
தொலைபேசி மூலம்
தூண்டில் போட்டு
மந்திரி பதவிகளைப்
பிடிப்பது இந்தக்காலம்.

மார்கழி மாதம்
பஜனை கேசட்டுகளுக்குப் போட்டியாக
பதவி கேட்கும் பரபரப்பு
ஆடியோ கேசட்டுகள் ரிலீஸ்!

இந்தியத் தலைநகர் முதல்
தமிழகத் தலைநகர் வரை
தொடர்கிறது ஊழல் விசாரணை...
கனெக்டிங் இந்தியா!

முன்னால் வந்தவருக்கு
முன்னுரிமை
ஏலம் போகிறது
இந்திய மானம்!

Pin It