இது இருபத்தோராம் நூற்றாண்டு, கணினியுகம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனாலும் மனிதர்களின் எண்ணமும் நடத்தையும் கற்காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருப் பது போலவே தெரிகிறது. அதனால் தான் சமீப ஆண்டு களில் உத்தப்பு ரம் என்ற ஊரைப் பற்றி உலகமே பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமூகம் சாதி ரீதியாகப் பிளவு பட்டுக் கிடக்கிறது. பத்தாம் பசலித்தனமான கருத்துக்களைப் பிடித்துக் கொண்டு விடாமல் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய் நினைக்காமல் பிறப்பால் உயர்வு, தாழ்வு சொல்லி தன்னையும் பிறரையும் கேவலப்படுத்திக் கொண்டிருக் கிறார்கள்.

வடக்குத் தெரு, தெற்குத் தெரு என்பது ஊரின் இரு பகுதியாக இல்லாமல் சாதிக்கு ஒரு பகுதி என அடையாளப்படுத்துகிறது. மக்களின் வாழ்நிலையோ ஏறத்தாழ ஒரே மாதிரியாக இருந்தபோதும் மேல்சாதி, கீழ் சாதி என பேதம் பேசி அவமானப்படுத்துகிறது உத்தப்புரம். முன்பு ஒண்ணுமண்ணாய் சாமி கும்பிட்ட முத்தாலம்மன் கோவிலும் அரசமரமும் இன்று ஆதிக்க சாதியாருக்கு மட்டும் உரியது என்று திட்டமிட்ட சதியால் ஏற் படுத்தப்பட்ட கட்டப் பஞ்சா யத்து “ஒப்பந்தத் தின் பேரில்” கட்டாயப்படுத்தப் படுகிறது.

தலித் மக்கள் அதை ஏற்க மறுத்து உரிமை கோருவதால் சீனப் பெருஞ்சுவர் போல் உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் எழுகிறது. மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டத்தால் அந்தச் சுவரின் சிறு பகுதி அரசாலே உடைக்கப்படுகிறது.

அதை எதிர்த்து ஆதிக்க சாதி யினர் “மலையேறும் போராட் டம் (?)” நடத்தி தலித் மக்களின் விவசாயம், இதர உடைமை களை சேதப்படுத்தி வன்மம் தீர்த்துக் கொண்டனர். ஆயினும் அந்தப் பாதையில் போக வர தலித்துகளுக்கு அனுமதி இன் னும் மறுக்கப்படுகிறது. பள்ளிக் குழந்தைகளோ முதியவர்களோ பஸ்சுக்கு காத்திருக்கும் போது அமர நிழற்குடை அமைக்க ரூ.3.75 லட்சம் நிதி ஒதுக்கியும் கூட அதைக் கட்ட மறுக்கிறது அரசாங்கம். வடக்குத் தெரு மக்களின் சாக்கடைக் கழிவுகளை வேறு பகுதிக்கு திருப்பிவிடவும் நடவடிக்கை எடுக்கவேயில்லை. இதற்கு காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும்கூட உடந் தையாக உள்ளது. இதை எதிர்த்து போராட்டமோ, கேள்வியோ எழுந்தால் வித்தார மாகப் பேசி விஷயத்தை மழுப் புகிறது; மறுக்கிறது என்ற நிலை யே இருக்கிறது.

தலித் மக்கள் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவு களில் வழக்குத் தொடுத்து ‘உள்ளே’ போடுகிறது. ஆனால் அதற்குக் காரணமானவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் வழக்குப்போடுவதே யில்லை. என்றாலும் அந்த நிலை யை மாற்ற தலித் மக்களும், மார்க்சிஸ்ட் கட்சியும், தீண்டா மை ஒழிப்பு முன்னணியும், இதர ஜனநாயக அமைப்புகளும் தொடர்ந்து போராடிக் கொண் டிருக்கின்றனர்.

இந்த நிலைமைகள் ஏற்படக் காரணமாக இருந்த கட்டப் பஞ்சாயத்து முதல் இன்றைய கட்டம் வரையிலான உண்மை நிலவரங்களை ஆதியோடு அந்த மாக எழுத நூறுக்கும் மேலான பக்கங்கள் தேவைப்படும். ஆனால் கவிஞர் ப.கவிதா குமார் 56 பக்கங்கள் கொண்ட சிறு நூலி லேயே அதைச் சாதித் திருக் கிறார். தீக்கதிர் நாளிதழில், கீற்று இணைய இதழில் எழுதிய கட்டுரைகள் புத்தகமாக உருவா கியிருக்கின்றன. அவை அனைத் துமே சிறப்பாக அமைந் துள்ளன.

1939ல் மீனாட்சியம்மன் கோவில் ஆலயப் பிரவேசத் தின்போது வருணா சிரமவாதி களால் விடப் பட்ட அறைகூவல் போலவே, இப்போது அரசு அதிகாரி விடுத்த உத்தரவு ஒத்திருப்பதை எடுத்துக்காட்டு வது; தலித் மக்களின் போராட் டத்தை, அவர்களின் பாதிப்பை ஒளிபரப்பாத தொலைக்காட்சி ஊடகம் ஆதிக்க சாதியினரின் போராட் டத்தை ஒளிபரப்புவது ஆகிய வற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகிற கட்டுரை களின் வாதம் மிகவும் நேர்த்தி யாக இருக்கிறது. தலித் மக்க ளுக்கு எதிராக இதர பிற்படுத் தப்பட்ட மக்களைத் திரட்டு வதற்கு ஆதிக்க சாதியினர் எடுத்துக் கொண்ட முயற்சியை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்த மற்றொரு கட்டுரை பாராட்டுக்குரியது. அதற்குப் பதிலடிபோல ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைப் போராட்டத் தின் வெற்றி அனைத்து ஜன நாயக சக்திகளின் ஒன்றிணைவில் தான் கிடைக்கும் எனும் மார்க் சிஸ்ட் கட்சியின் நடைமுறையை எடுத்துரைப் பதை சரியாகவே செய்துள்ளார்.

நூலை அழகாக வடிவமைத்து வெளியிட்டிருக்கும் கயல் வெளி யீட்டகம், ஓவியக் கவிஞர் ஸ்ரீரசா, அட்டைப்படத்தின் புகைப்படத்தை வழங்கிய நல் லேந்திரன் என அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். சிற்சில எழுத்துப் பிழைகள் அடுத்த பதிப் பில் அவசியம் சரி செய்யப்பட வேண்டும்; சமூகத்தில் மலிந் திருக்கும் பிழைகளை திருத்த முயற்சிக்கும் இத்தகைய நூலுக்கு அவை அவசியம். சமூக மாற்றத்துக்குப் போராடுபவர் கள் கைகளில் இருக்க வேண்டிய நூல்களில் ஒன்று இந்த புத்தகம்.

-

வெளியீடு: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மதுரை மாவட்டம்.

கிடைக்குமிடம்: கயல் வெளியீட்டகம், டி-1, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியி ருப்பு, சொக்கிகுளம், மதுரை - 625002.

விலை ரூ.20.

Pin It