அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான் என்பது பழமொழி. உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி 1200 கோடி ரூபாய் செலவில் தனது சிலைகளையும், அவரது தலைவர் சிலைகளையும் மாநிலம் முழுவதும் நிறுவி வருகிறார். அவரது ஆட்சியில் ஊழல் கொடி கட்டிப் பறக்கிறது. 

உ.பி. மாநிலத்தில் தலித் சிறுமிகள், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் மாயாவதி அரசு வழங்கியுள்ளது. பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்களுக்கு ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டுள்ளனர்.

இதற்கெதிராக காங்கிரஸ் கட்சித் தலைவர் ரீட்டா பகுகுணா மாயாவதியைக் கடுமையாய்த் தாக்கிப் பேசியுள்ளார். மேல்சாதி அகம்பாவத்துடன் மாயாவதியை சாதிப் பெயர் சொல்லி தரமற்ற வார்த்தைகளை ரீட்டா பேசியது கண்டிக்கத்தக்கது. அதே நேரம் மாயாவதியின் ஆட்கள் ரீட்டாவின் வீட்டை தீயிட்டு அடியோடு கொளுத்தியுள்ளதும் கண்டனத்திற்குரியதாகும். தலித் தலைவரான மாயாவதி மேல்சாதி பிராமணர்களுடன் கூட்டுச் சேர்ந்துதான் வெற்றி பெற்று உ.பி.யில் ஆட்சி நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Pin It