2009-10ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட் உரையில் உணவுக்கான உரிமைச் சட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ஏழை மக்களின் வாழ்க்கையின் மீது மிகுந்த கவலை கொண்ட அரசு போல் சித்தரித்திடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. உலக அளவில் ஊட்டச்சத்து நிறைந்த மக்கள் பற்றிய கணக்கெடுப்பில் மிகவும் பின் தங்கிய இடத்திலேயே நமது நாடு உள்ளது.

இடதுசாரிகளின் ஆதரவோடு நடைபெற்ற கடந்த ஹிறிகி ஆட்சியில் நடைமுறைப்படுத்திட வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் அமலாக்கிட குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் ழிஸிநிணிகி (தேசிய கிராமப்புற வேலை உத்திரவாத சட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்ட தன் அடிப்படையில் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வில் சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியது. தற்போதைய மத்திய அரசின் பட்ஜெட்டில் முன்வைக்கப்பட்டுள்ள உணவுக்கான உரிமைச் சட்டம்  எவ்விதமான விரிவாக்கம் இல்லாமல் செயல்படுத்தப்படுமேயானால் அது சர்க்கரை என பேப்பரில் எழுதி இனித்ததா என்று கேள்வி கேட்பதற்கான நிலையே ஏற்படும். விரிவாக்கத்திற்கான ஏற்பாடு களோடு சட்டம் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே பற்றி எரியும் நெருப்பாய் இருக்கும் மக்களின் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடலாம்.

நமது தேசத்தில் பசி, ஊட்டச்சத்து குறைவு போன்ற மக்களை பாதித்துள்ள பிரச்சனைகளுக்கு பல ஆழமான காரணங்கள் உண்டு. பொருளாதார பாதுகாப்பின்மை, கல்வியின்மை, சமூக குற்றச்செயல்கள், பாலின வேறுபாடு, நேர்மையற்ற சொத்து குவிப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதிகளற்ற நிலை ஆகிய காரணங்கள் பிரதானமானவையாக உள்ளன. மேற்கூறிய எல்லா அம்சங்களையும் களைந்து முன்னேற்றம் காண வகை செய்யாமல், உணவுக்கான உரிமை மக்களுக்கு கிடைத்திட வாய்ப் பில்லை. விரிவாக்கமற்ற உணவுக்கான உரிமை பட்ஜெட்டில் முன்வைக்கப்பட்டுள்ள நடை முறையில் பின்பற்றப்படுமேயானால் மக்களுக்கு பலனளிக்காத வகையிலேயே அமையும்.

மாதம் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை ரூ.3/ விலையில் வழங்குவதால் மட்டுமே மக்களின் வாழ்நிலையை தற்போதைய சூழலில் எதிர்கொள்ள இயலாது. இதுபோன்ற அறிவிப்புகள் தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகள் விலைபேச மட்டுமே உதவும். மக்களின் இன்றைய அத்தியாவசியத் தேவையான உயர்வான ஊட்டச்சத்து என்பது குறைந்த விலையில் விநியோகிக்கப்படும் அரிசி அல்லது கோதுமையால் மட்டுமே உருவாக்கிட இயலாது. மாறாக, தரமான உணவு, குழந்தை நலன் பேணி பாதுகாத்தல், இதன் மூலம் சுகாதாரமான வாழ்நிலை, சுத்தமான குடிதண்ணீர், உயர்வான தாய்பால் கிடைக்கச் செய்வது என்பதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.

தேசிய ஊரக வேலை உத்திரவாதச்சட்டம் உணவுக்கான உரிமையினை மக்கள் பெற்றிட துவக்கப் படிக்கட்டாக அமைந்தது. இந்தச் சட்டம் முழுமையாக மக்கள் சென்றடைந்ததன் மூலம் (பல்வேறு தடைகள் குறிப்பாக நிர்ணயிக்கப்பட்ட கூலி, பணிக்கான அளவு, பணிகளை தேர்வு செய்திடும் முறை போன்ற பலவிதமான இடர்பாடுகளை சந்தித்தாலும்) மக்கள் வாழ்க்கைத் தேவையின் பெயரில் வேலை என்கிற மகத்தான புரிதலை உருவாக்கிட முயன்றதில் இச்சட்டமும் அதற்கான ஆலோசனையினை முன்மொழிந்த இடதுசாரிகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

கிராமப்புற பகுதிகளில் சில குடும்பங்கள் வயது முதிர்வின் காரணத்தாலும், நோய் வாய்ப்பட்டுள்ள நிலையிலும் தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டத் தின் கீழ் பணியாற்றிட வாய்ப்பற்ற நிலையினைக் காண முடிகிறது. எனவே மத்திய அரசின் பட்ஜெட்டில் 25 கிலோ கோதுமை அல்லது அரிசி ரூ.3/க்கு வழங்குவதன் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள போலியான அறிவிப்புகளுக்கு மாறாக மாநில அரசுகளுக்கு உணவு தானிய ஒதுக்கீடு வெட்டிச் சுருக்கிடும் நடைமுறை மத்திய அரசால் கடைபிடிக்கப்படுகிறது. இது பொது வினியோக திட்டம் தன்னைத் தானே பலவீனப்படுத்திக் கொள்ளும் சூழலுக்கு இட்டுச் செல்லும். எனவே உணவுக்கான உரிமையை பொது வினியோக திட்டத்தினை பலப்படுத்தி அதன்மூலம் உத்திரவாதப்படுத்திடவேண்டும்.

25 கிலோ (உணவு தானியம்) என்பது தற்போது நடைமுறையில் உள்ள மாதம் 35 கிலோ என்கிற அளவினை வெட்டிக் குறைக்கும் முயற்சியாகவே உள்ளது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் தொகையின் கணக்கெடுப்பு வெறும் கண்துடைப்பாக இல்லாமல், (கிராமப்புறத்தில் 1 நாளைக்கு ரூ.12க்கும் குறைவான ஊதியம், நகர்ப்புறத்தில் 1 நாளைக்கு ரூ.17க்கும் குறைவான ஊதியம் பெறுபவர்கள் வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ளவர்கள் என்கிற வேலையாகவே கருத இயலும்) வெளிப்படையான தன்மை உடையதாகவும், சோதித்துக் கொள்ளும் வகையிலும் அமைந்திட வேண்டும். அதே சமயம் 70% மக்கள் ஒரு நாளைக்கு 20/ ரூபாய் மட்டுமே ஊதியம் பெறும் நிலை உள்ளதாக அரசால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆய்வினை கவனத்தில் கொண்டு குறைந்த பட்சம் 50% சதவிகித மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ்வாழ்பவர்கள் என இலக்கை மாற்றி அமைத்திட வேண்டும். கிராமப்புறத்தில் உள்ள தலித் மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகளாக உணவுக்கான உரிமை என்பது மாற்றப்பட்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக பணிகளுக்கு செல்ல இயலாத உடல் நோய்வாய்ப்பட்டு உள்ள குடும்பங்களுக்கு சிறப்பு பொது விநியோகத் திட்டம் அமல்படுத்தப்பட்டு அவர்தம் வாழ்க்கையை நடத்திடும் உரிமைகளாக நடைமுறை படுத்திட வேண்டும். அந்தோதயா அன்ன யோஜனா திட்டம் மூலம் சிறு எண்ணிக்கையிலான குடும்பங்கள் மட்டுமே கணக்கிலெடுக்கப்பட்டு உள்ள நிலையில், உணவுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் விரிவாக்கப்பட்டு செயல்படுத்திட அரசு முன் வரவேண்டும். சமூக நலன் சார்ந்த அரசாக செயல்படுகிறோம் என அறிக்கை அளித்திடும் ஆட்சியாளர்கள் முதியோர் பென்சன், விதவை பென்சன் இவை முழுமையாக எவ்வித தடங்களும், பாரபட்சமுமின்றி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வது அவசியமாகிறது. இதுவே, முழுமையான உணவுக் கான உரிமைச் சட்டத்தின் தூணாக விளங்கும்.

குழந்தை நலன் என்பது மிகப் பிரதான பாத்திரத்தை வகிக்கிறது. நேரடி முழு ஊட்டச் சத்துடன் கூடிய பாதுகாப்பு உத்திரவாதப்படுத்திட வேண்டும். மதிய உணவு திட்டம் மூலம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு உணவுக்கான உரிமை அமல்படுத்தப்பட்டாலும், ஊட்டச்சத்து பாதுகாத்திடும் தன்மை, சுகாதாரம் மேம்படுத்தப்படுவதில் கவனம் இல்லாத நிலையே தொடர்கிறது. 6 வயதுக்குட்பட்ட இளம் குழந்தைகளுக்கு அடிப்படை உரிமையாக ஊட்டச்சத்து, சுகாதாரம் மேம்பாடு மற்றும் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் (ICDS) 35 ஆண்டுகளாக பூர்த்தி செய்திட இயலாத நிலையில் மாவட்டங்களில் பணியாற்றிடும் (ICDS) அதிகாரிகள் குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட அதிகாரிகளாகவும் பணியாற்றிட பல மாநில அரசுகளால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, குழந்தை நலன் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டு பணிகள் பலவீனப்படுத்தும் நடவடிக்கையாகவே கருதவேண்டியுள்ளது. 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குழந்தை நலன் உறுதி செய்யப்பட அரசை வலியுறுத்தியும், மத்திய நிதி அமைச்சர் 2012க்குள் உறுதி செய்யப்படும் என அறிவித் துள்ளார் ஆனால் மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் குழந்தை நலனுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு குறைந்து வருகிறது. 2007_08ல் 4.93%, 2008_09ல் 4.13%, 2009_10ல் 4.15% என்பது குழந்தை நலனில் மத்திய அரசின் ஆட்சியாளர்களின் பார்வையை தெளிவுபடுத்தியுள்ளது.

விவசாயத் துறையில் பொது முதலீட்டை நிராகரித்திடும் பணிகளில் மத்திய அரசு ஈடுபடாமல் விவசாயத்தை பாதுகாத்திடும் வகையில் உணவு தானியங்கள், பருப்பு வகைகள், கரும்பு, எண்ணெய் வித்துக்கள், உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் வகையில் பொது முதலீட்டை, மக்களின் தேவையை அதிகரிப்பது, அவர்களது வாங்கும் சக்தியை பெருக் குவது அத்தியாவசியப் பொருட்களை முன்பேர வர்த்தகத்திலிருந்து தடை செய்வது, உணவு தானிய கொள்முதலை அரசே நேரடியாக நடத்துவது, விரிவு படுத்துவது மற்றும் நிலச்சீர்திருத்த நடவடிக்கையை உடனடியாக அமலாக்குவது என்கிற நடவடிக்கைகளின் மூலமே சமூகக் கண்ணோட்டத்துடன் கூடிய கிராமப்புற மேம்பாடு என்பதை உறுதி செய்திட இயலும்.

மேற்சொல்லப்பட்டவையே முறையான தலையீடாக உணவுக்கான உரிமைச் சட்டம் அமலாக்கப்படுவதற்கான கூர்மையான தாக்கத்தையும், இந்தியாவில் எழுந்துள்ள அவசரத் தேவையான ஊட்டச்சத்து மேம்பாடு உருவாக்கிட வழி வகுக்கும். மேலும், சுகாதாரமான மகப்பேறு உரிமை, தாய்ப்பால், ஊட்டச்சத்து அற்ற குழந்தைகள் புனரமைப்பு என்ற வகையில் நகர்ப்புற மேம்பாட்டு பணிகளிலும் கவனம் செலுத்தப்பட வேண்டி யுள்ளது. இந்த உரிமைகளை பாதுகாத்திட தேவையான போதுமான நிதி ஒதுக்கீடு, எந்தவித சூழலிலும் தட்டுப்பாடு இல்லாமல் முறைப்படுத்தப்ப டுவதன் மூலமே அமலாக்கிட இயலும் இது இடதுசாரிகளின் ஆலோசனையின் பெயரால் கடந்த ஆட்சியில் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட் டுள்ள தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தினை உதாரணமாகக் கொண்டு அமுல்படுத்திட அரசு முன்வர வேண்டும். இல்லையேல் உணவுக்கான உரிமைச் சட்டம் என்பது கானல் நீராய் அமைந்துவிடும்.

Pin It