முதலாளிகளின் லாபத்திற்காக அமைக்கப்பட்ட தொழிற்பேட்டைகளானது நம் மண்ணையும் மக்களையும் அழித்தொழிக்கும் மரணக்கூடாரமே என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது பெருந்துறை விபத்து. ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொழிற்பேட்டையில் உள்ள கே.பி.ஆர். ஆலையின் சாயக்கழிவுநீர்த் தொட்டி யில் ஏற்பட்ட சிக்கலைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகளை மீத்தேன் வாயு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே 7 தொழிலாளர்கள் பலியானர்கள். மேலும் எட்டு தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னதாக 17.03.2014 அன்று நெய்வேலி சுரங்க நுழைவாயிலில் ஒப்பந்தத் தொழிலாளர் ராசா சுட்டுக்கொல்லப்பட்ட வடு மறைவதற்கு முன்பாக கொங்கு மண்டலத்தில் ஏழு தொழிலாளர்கள் நிர்வாக அசிரத்தையின் காரணமாகப் பலியானது தொழிலாளர் பாதுகாப்பு குறித்த ஆளும் அதிகார அடுக்கு மற்றும் முதலாளித்துவ சமூகத்தின் அலட்சியப் போக்கை மீண்டுமொருமுறை மக்கள் மன்றத்தில் நிர்வாணப்படுத்தி யுள்ளது. மேலும், எவ்வாறு நெய்வேலி தொழிலாளர் கொலைக்கான நீதியானது பொருளாயத நிவாரணக் கோரிக்கைகளின் வாயிலாக கட்சிகளாலும் தொழிற் சங்கங்களாலும் சமரசத்திற்கு உட்படுத்தப்பட்டதோ அதே தொனியில் கே.பி.ஆர். ஆலையில் மரணமடைந்த (கொலை செய்யப்பட்ட!) ஏழு தொழிலாளருக்கான நீதியும் சமரசப்படுத்தப்பட்டதுதான் வேதனை.

Perunthurai-workersஇப்பயங்கர சம்பவங்கள் அனைத்தும் தேர்தல் பிரச்சார அவசர கதியில் வேக வேகமாக மடைமாற்றம் செய்யப்பட்ட வேலையில் தமிழகத்தின் தொழிலாளர் வர்க்க நலன்கள் குறித்த வாதங்களும் போராட்ட முன் னெடுப்புகளும் பிள்ளைப் பிராயத்திலேயே இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் தொழிற்சாலை விபத்துக்களால் பலியாகிற தொழிலாளிகளுக்கும் அதனால் பாதிக்கப் பட்ட குடும் பத்தார்க்கும் அரசு இயந்திரம் மற்றும் தொடர்புள்ள நிறுவனங்களானது அடிப்படை அற நெறியற்ற பதில்களையே காலங்காலமாக வழங்கி வருகிறது. அதாவது நடைமுறையில் உள்ள பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைபிடிக்காத தனிப்பட்ட தொழி லாளியின் கவனக்குறைவே இவ்விபத்திற்குக் காரணமா கிறது என்ற நூற்றாண்டுப் பழைமையான முதலாளித்து வத்திற்கே உரித்தான வழமையான பதிலே குற்றத்திலிருந்து தப்ப மீண்டும் மீண்டும் அவர்களால் பயன்படுத்தப்படு கிறது. தொழிற்சாலையில் ஏற்படுகிற விபத்துக்களால் நிகழ்கிற தொழிலாளர் மரணங்கள் தொழிற்சாலையின் அம்சங்களின் ஒன்றாகவே மாறிய நிலைமை இன்று உச்சத்தைத் தொட்டு நிற்கின்றன.

அரசு ஆவணங்களின்படி தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 1500 விபத்துகள் நடப்பதாகவும் மற்ற மாநி லங்களைக் காட்டிலும் தமிழகத்தில் விபத்து எண் ணிக்கைக் குறைவு என்றும் வாதிடுகின்றன. ஆனால் அரசின் ஆவணங்கள் எந்தளவிற்கு நம்பகத்தன்மைக் கொண்டது என்பதைப் பெரும்பாலானோர் அறிவர். உதாரணமாக 1901இல் செங்கற்பட்டு மாவட்டத்தில் இயங்கிய தொழிற்சாலைகளில் “பதிவு” செய்யப்பட்ட விபத்துகள் மட்டும் 144ஆக இருந்தது. பின்னர் 1929இல் இந்நிலைமை 800ஐத் தொட்டது. இதில் விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளி தொடர்ச்சியாக இரு நாட்கள் பணிக்கு வரமால் இருந் தால் மட்டுமே அது விபத்தாகப் பதிவு செய்யப்பட்டது.ஏனைய விபத்துக்கள் பெரும்பாலும் பதிவுசெய்யப்படுவ தில்லை. 85 ஆண்டுகளுக்கு முன்பாக எவ்வாறு தொழிலாளர் விபத்துக்கள் நிர்வாக சார்பாக “பதிவு” செய்யப்பட்டனவோ அதில் அக்கம் பக்கமாக சிறிது சரத்துக்கள் சேர்க்கப்பட்டு அதே நெகிழ்வுத்தன்மையுடன் நிலவுகிற தொழிலாளர் விபத்துக்கள் பதிவு செய்யப்படு கின்றன என்றே கூறலாம். ஒட்டுமொத்த தமிழகம் எங்கிலும் தொழிலாளர் சந்திக்கின்ற விபத்துக்கள், பலி எண்ணிக்கைகள் குறித்த ஆவணங்கள் இல்லை! மேலும் தொழிற்சாலையைக் காட்டிலும் இன்று அதிகம் விபத்துக்களைச் சந்திக்கின்ற துறையாக கட்டுமானத்துறை விளங்குகிறது.

தமிழகத்தில் மட்டும் சராசரியாக மாதத்திற்கு பத்து முதல் பதினைந்து கட்டடத் தொழிலாளிகள் பலியாகி றார்கள். பெரும்பாலும் ஒப்பந்தக்காரர்களால் வெளிமாநிலத்திலிருந்து அழைத்துவரப்பட்ட தொழிலாளர்கள் குறைவான கூலிக்கு நாள் முழுக்கவே வேலை செய்கின்றனர். பணியிடங்களில் உயிர்ப்பாதுகாப்பு சாதனம் ஏதுமின்றி நிர்வாகத்தின் லாபத்திற்காக உழைக்கும் இப்புலம் பெயர்ந்த வெளிமாநிலத் தொழிலாளிகளின் பணியிட மரணங்கள் காதும் காதும் வைத்தவாறு கமுக்கமாக முடிக்கப்படுகிறது. பெருந்துறை விபத்தில் மரணமடைந்த ஏழு தொழிலாளிகளின் இருவர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. கட்டுமானத் துறையாகட்டும், பட்டாசு ஆலையாகட்டும் இதர ஆலைகள் அனைத்துமாகட்டும் பணியிடங்களில் ஏற்படுகிற தொழிலாளர் பலிக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது லாப வெறிபிடித்த நிர்வாகத்தின் செயல்பாடாகும். ஆலை முதலாளிகளின் நிர்வாக ஏற்பாட்டின்படி செயல்படுகிற நிறுவன அதிகாரிகள் தங்களிடம் சிக்குகிற தொழிலாளியின் வேலை நேரம் முழுவதையும் நொடிப் பொழுது ஓய்வு ஒழிச்சல் இன்றி கசக்கிப்பிழிந்திடவே அக்கரை செலுத்துபவர்களாக உள்ளனர். அதற்கு அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. முன்னதாக குறைவான கூலியால் அரை வயிறும் கால் வயிறும் சாப்பிடும் தொழிலாளி வெகு நேரம் தொடர்ச்சியாக வேலையில் ஈடுபடுத்தப்படுவதால் அயர்ச்சியடைகிறான். பாதுகாப்பு ஏற்பாடுகளில் செலவிடப்படும் மூலதனத்தை தேவையற்ற செலவாகக் கருதுகிற ஆலை நிர்வாகத்தின் அசிரத்தையோடு தொழிலாளிகளின் பணிச்சுமையும் சேர்ந்து கொள்ள விபத்துகள் தவிர்க்க முடியாதவையாக மாறுகின்றன.

விபத்துகள் நேரிட்ட பிற்பாடு சமூகத்திற்கு கையளிக்கப்படும் செய்திகள் அனைத்தும் அரசு மற்றும் நிறுவனச் சார்பாகவும் இருப்பதால் இச்சிக்கலின் பல்வேறு பரிமாணங்கள் பெரும்பாலும் மக்கள் கவனத்திற்கு வராமல் போகின்றன. நிலவுகிற தாராளமய பொருளாதார ஏற்பாட்டில், உலகமயமாக்கப்பட்ட மூலதனத்தின் விளைவாகக் குறைந்த கூலி, நீடிக்கப்பட்ட வேலை நேரம், பாதுகாப்பற்ற பணிச்சூழல், வேலை உத்தரவாதமின்மை போன்ற இடர்களை தங்கள் பணியிடங்களில் சந்திக்கின்ற தொழிலாளி, ஆலைக்கு வெளியே தன் குடும்பத்தைப் பேணுகிற கடமையில், பொருளியில் சிக்கல்களில் உழல்கிறான். முன்னெப் போதும் இல்லாத அளவிலான மூலதனத்தின் எழுச்சி யால் நேரடியாகப் பாதிக்கப்படுகிற வர்க்கமாக தொழி லாளர் வர்க்கம்தான் இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான இடதுசாரி இயக்கங்கள் தொழி லாளர் எழுச்சியை அரவணைத்துச் சென்று அதை அரசியல் போராட்ட வடிவமாக மாற்ற வேண்டிய தன் வரலாற்றுக் கடமையிலிருந்து அந்நியப்பட்டே இயங்குகின்றன என்பதுதான் இதில் வேதனை.

Pin It