சிலர் நம்மைப் பார்த்து ஹோமியோபதி மருந்துகள் துரிதமாக நிவாரணம் அளிக்கிறதா? என்று நம்மைக் கேட்கின்றனர். வீரியம் படுத்தப்பட்ட ஹோமியோபதி மருந்துகள் நாவில் பட்டபோதே வேலை செய்யத் தொடங்குகின்றன என்பது உண்மை. மேலும் ஹோமியோபதி யிலுள்ள தாய் திரவங்களும், சில குறைந்த மற்றும் உயர்ந்த வீரியங்களும் உடனுக்குடன் நிவாரணம் அளிக்கின்றன. ஹோமியோபதியின் விதியின்படி எந்த மருந்து எப்படி இருந்த போதிலும் தேர்ந்தெடுத்த மருந்துகளுக்கு குறிகள் சரியாக இருந்தால் மருந்துகள் தங்களுடைய வேலை களைச் செய்ய தொடங்குகின்றன. என்னுடைய அனுபவத்தில் மெக்னீஷியா பாஸ்பாரிகம் போன்ற பயோகெமிக் மருந்துகளும், அகோனைட், பிளாட்டா ஓரியண்டாலிஸ் போன்ற ஹோமியோபதி மருந்துகளும் அலோபதி மருந்துகளைவிட துரிதமாக நிவாரணம் அளிக்கிறது.

கேஸ் எண் 1 : பெண் குழந்தை வயது 4 (நான்கு)

இந்தப் பெண் குழந்தைக்கு திடீரென்று மூத்திர அடக்கம் ஏற்பட்டுவிட்டது. பலமணி நேரங்கள் வரை சிறுநீரே கழிக்காமல் குழந்தை வயிற்று வலியினாலும் வீக்கத்தாலும் அவதிப்பட் டது. குழந்தை பயந்த சுபாவத்துடனும் அமைதியில்லாமலும் இருந்தது. இக்குழந்தைக்கு அகோனைட் 6X வீரியத்தில் 4 வேளை மருந்து கொடுத்து அரை மணிக்கு ஒரு பொட்டலம் வீதம் கொடுக்கச் சொன்னேன். முதல் வேளை மருந்து கொடுத்து எட்டே நிமிடங்களில் குழந்தைக்கு தாராளமாக சிறுநீர் பிரிந்தது.

கேஸ் எண் 2 :வாலிபன் வயது 23

இவர் என்னுடைய கல்லூரி நண்பர். விளையாட்டுகளில் ஆர்வம்மிக்கவர். சுறுசுறுப்புடன் இருப்பவர். ஒருநாள் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடினார். இதன் விளைவாக தன்னுடைய கால்களில் கெண்டை வலி எடுத்தது. நன்றாக அழுத்தினால் வலி குறைந்து இருப்பதாகச் சொன்னார். எனவே மெக்பாஸ் 6X வீரியத்தில் வெந்நீரில் கொடுத்த 3 நிமிடங்களில் கெண்டை வலி நீங்கிவிட்டது.

கேஸ் எண் . 3 : டிரைவர் வயது 47

லாரி டிரைவரான இவர் நீண்ட நாட்களாகவே பேதியினால் அவதிபட்டு வந்தார். எப்போதும் பேதி ஆகும். சாப்பாடோ நீரோ குடித்தால் கூட பேதி ஆகும். அடி வயிற்றில் வலியும், உப்பிசமும் இருக்கும். இவர் பல அலோபதி மருந்துகளையும் ஊசிகளையும் போட்டு பலன் கிட்டாத போது என்னைச் சந்தித்து மருந்து ஏதேனும் இருந்தால் உடனே பேதியை நிறுத்தும்படி கொடுங்கள் என்றார். அவர் மிகுந்த பலவீனத்துடனும், காது பஞ்சடைத்தார் போலவும், காட்சி அளித்தார். உடம் பெல்லாம் சில்லிட்டது போல இருப்பதாகவும் கூறினார். சைனா 30 ஆவது வீரியத்தில் 4 வேளை கொடுத்தேன். சைனா 30 சாப்பிட்டதால் பேதி நின்றது. அதன் பிறகு அவருக்கு பேதி ஆவதே இல்லை. பலவீனமும் நீங் கியது.

கேஸ் எண் 4 :பெண்மணி வயது 32

இப்பெண்மணி ஆஸ்த்மா கோளாறினால் வேதனைப்பட்டு வந்தார். அப்போதைக்கு நிவார ணம் கிடைக்க அலோபதி மருந்துகளைச் சாப் பிட்டு வந்த இவருக்கு சிறிது நாட்களாக அலோபதி மருந்து சாப்பிட்டால் இழுப்பு நிற்காத காரணத்தால் ஹோமியோபதி மருந்து எனக்கு கொடுங்கள் என்றார். மூச்சுவிட சிரமப்பட்ட இவருக்கு 1 அவுன்ஸ் தண்ணீரில் பிளாட்டா தாய் திராவகத்தை 8 சொட்டுகள் விட்டு கொடுத்தேன். மருந்து சாப்பிட்ட 5 நிமிடங்களில் இழுப்பின் வேகம் குறையவே அதையே அடிக்கடிச் சாப்பிடச் சொல்லி கொடுத்தனுப்பினேன்.

இதே போல் காலோஸிந்திஸ் வயிற்று வலியை உடனே நீக்கும் சக்தியை உடையது. குறைந்த வீரியம் முக்கியம் வயிற்று உப்பிசம் மூச்சு திணறலுடன் இருக்கும்போது கார்போவெஜி நல்ல பலன் அளிக்கிறது. பாஸ்பரஸ் சில நேரங்களில்பல்லை பிடுங்கும்போது உண்டாகும் இரத்த சேதத்தை தடுக்கிறது. எனவே சிலர் நினைப்பதைப் போல ஹோமியோபதி ஒரு போதும் நீண்ட நாளாக ஆகத்தான் நிவாரணம் அளிக்கும் என்பது தவறான கருத்து. அவசர வியாதிகளில் துரித நிவாரணம் அளிக்கிறது என்பது உண்மை. ஹோமியோபதியின் விதியின் படி குறிகளை மட்டும் நன்கு ஆராய்ந்து மருந்தை கொடுத்தால் தோல்வியே ஏற்படாது.

Dr.V.R. மூர்த்தி, Dr.J.V.மூர்த்தி, Dr.R.ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடத்திய ‘ஹோமியோ’ என்னும் தமிழ் மாதஇதழில் 1975 - நவம்பரில் வெளிவந்த கட்டுரை இது. கட்டுரையாளர் : Dr.K.மணி
Pin It