தினம் ஒரு முறை குளிப்பது நமது வழக்கமாக இருக்கிறது. அதிலும் கோடைக்காலத்தில் இரண்டு தடவைகள் குளிப்பதும் கூட அவசியம். மருத்துவ மூலிகை சோப்புகளை உபயோகித்தால் நல்லது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இவை மிகக் குறைவாகவே பலன் தரும். ஏனென்றால் சோப்பில் நுரை வந்தவுடன் நாம் கழுவிக் குளித்து விடுகிறோம்! அதனால் இந்த மூலிகை எண்ணெய் (சிறிதே இருந்தாலும்) சருமத்துக்குள்ளே ஊறிச் சென்று பலன்தர வாய்ப்பில்லை. ஓரளவு சருமம் உலர்ந்து போகவும் வாய்ப்பு உண்டு. அதேபோல மிகவும் வாசனை உள்ள சோப்புக்களை உபயோகிக்காதீர்கள். இவை சருமத்தின் நிறத்தைப் பாதிக்கவும், அலர்ஜியை உண்டாக்கவும் வாய்ப்பு உண்டு.

முதலில் தண்ணீரை நிறைய மேலே ஊற்றித்தடவி ஊறிக்கழுவிய பின் குளிக்கத் தொடங்குங்கள். தொட்டியில் அமர்ந்து குளிப்பதனால் அதிக நேரம் இப்படி ஊறவேண்டாம். அதனால் அழுக்கு நீர் பாதிக்கும் வாய்ப்பு உண்டு. குறிப்பாகப் பெண்களுக்குத் தாடை இடுக்குகளிலும், பிறவி உறுப்பிலும் அரிப்பு ஏற்படலாம். சுடுநீரில் அதிக நேரம் அமிழ்ந்து குளிக்க வேண்டாம். இதனால் ஆண்களின் ஆண்மை சக்தி பாதிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

பிறருடன் சேர்ந்து குளிப்பதனால் அவர்களுடைய சோப்பையோ, டவலையோ உபயோகிக்காதீர்கள். கணவன் - மனைவியர் கூட இப்படிச் செய்யக் கூடாது. இதனால் சருமப் பாதிப்புகள் இருவரிட மிருந்து மற்றவருக்குப் பரவும் வாய்ப்பு உண்டு. கூடியவரை குளித்தபின் குளியலறையைக் கழுவிவிடுங்கள். அங்கே தங்கும் அசுத்தம் மற்றவரைப் பாதிக்கக்கூடும். பாதங்களில் சீக்கிரமாகவே இந்த பாதிப்பு ஏற்படும்.

பொதுவாக நாம் முகத்தைக் கழுவுகிறோமே தவிர, காதின் பின்புறங்களைச் சோப்பு தேய்த்துக் கழுவுவதில்லை. தலையிலிருந்து வெளிப்படும் எண்ணெய்ப் பிசுக்கு, ஷாம்பூ, சீயக்காய் போன்றவை இந்த இடத்தில் தேங்கும். காதை முன்புறம் மடித்து இந்தப் பகுதியைத் தேய்த்துக் கழுவுங்கள். கழுத்தில் இறுக்கமாக ஆடை அணிபவர்களுக்கும், தலையில் குல்லாய் போட்டு கொள்பவர்களுக்கும் இந்த சரும வெடிப்பும் ஏற்படக்கூடும். தொப்புள் பகுதியில் நாம் உபயோகிக்கும் சோப்பு, தேய்த்துக்கொள்ளும் மாவு ஆகியவை அழுக்குடன் சேர வாய்ப்பு உண்டு. நகம் கூர்மையாக இல்லாத விரலால் இந்தப் பகுதியைச் சுழற்றி அழுக்கெடுத்து, சோப்பு தேய்த்துக் கழுவுங்கள்.

தொடையின் இடுக்கிலும், பிறப்பு உறுப்பிலும் பெண்களுக்குக் குறிப்பாக அழுக்கு சேரும். இன்றைய நாகரிகத்தில் உள்ளாடையைக் கழற்றாமல் குளிப்பது வழக்கமாக இருக்கிறது. இந்த இடங்களில் வியர்வை, கோடைகாலத்தில் அதிகமாக இருக்கும். ஆகையால் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால் படை, சொறி போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. விரலை நன்றாக உள் வரையில் செலுத்தியும் சுழற்றியும் நன்றாக சோப்பு நுரைவரத் தேய்த்துச் சுத்தம் செய்யவேண்டும். தம்பதியர் இந்தப் பகுதிகளில் மருந்து, உரை கிரீம் ஆகியவற்றை உபயோகிக்க வாய்ப்பு உண்டு. ஆகையால் குளிக்கும் போது ஆண்களும், பெண் களும் இப்பகுதியை நன்கு சுத்தம் செய்யவேண்டும்.

முதுகுப்பகுதி பெரும்பாலும் தேய்த்துக் கழுவப்படுவதே இல்லை. மெல்லிய கயிறு அல்லது துண்டை முதுகுப்புறம் உபயோகித்து அழுத்தத் தேய்த்து கழுவுங்கள். முதுகு தேய்ப்பான்களை உபயோகிக்கலாம். ஒருவருக்கு மற்றவர் முதுகு தேய்த்துவிடுவது கிராமங்களில் கணவன் மனைவியரிடையே உள்ள ஒரு பழக்கம். இந்த ஒரு நல்ல நடைமுறை. இளந்தம்பதியருக்கு இதில் உல்லாசம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு!

கால்கள் நாள் முழுவதும் நடந்து அழுக்கைச் சேகரிக்கின்றன. ஆனால் குளிக்கும் போது நாம் உள்பாதத்தையோ, கால்விரல் இடுக்குகளையோ தேய்த்துக் கழுவுவதே இல்லை. இங்கேதான் உடலில் மிக அதிகமான அழுக்கு சேர வாய்ப்பு உண்டு. இவற்றை ஒவ்வொரு விரலாகப் பிரித்து நன்கு தேய்த்துக் கழுவவேண்டும். இல்லாவிடில் வெடிப்பு, சொறி, புண் ஆகியவையும் ஏற்படக் கூடும்.

கழுத்துப்புறம் முகத்தை நிமிர்த்தி நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். அதே போலப் பின்கழுத்து, பிடரி ஆகிய பகுதிகளை நன்றாகச் சுழற்றி தேய்த்துக் கழுவுங்கள். வெய்யிலில் இப்பகுதிகளில் வியர்வையால் நிறைய அழுக்கு சேரக்கூடும். ஆகையால் கையைக் கழுத்தைச் சுற்றித் தடவித் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

தினந்தோறும் தலைக்குக் குளிப்பது ஆற்றிலும், குளத்திலும் குளிப்பவர்களுக்கு சகஜம். ஆனால் பெரும்பாலும் நகரங்களில் உள்ளவர்கள், ‘ஷவர்பாத்’ எடுத்துக் கொண்டாலொழிய தலைக்குத் தேய்த்துக் குளிப்பதில்லை. வாரம் இருமுறையேனும் தலைக்கு ஷாம்பூ போட்டு தேய்த்துக் குளிக்கவேண்டும். பிறருடைய சீப்புகளை உபயோகிக்காதீர்கள். கூந்தலில் சிக்கு, பேன், அரிப்பு போன்ற உபாதை உள்ளவர்களிடமிருந்து உங்களுக்கு இது பரவி விடக்கூடும்.

கண்களைக் கழுவும்போது இமைகளை மூடி, தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவுங்கள். கண்ணிற்குள் அழுக்கோ, சோப்பு நுரையோ பட்டால் எரிச்சல் உண்டாகும். ஆகையால் கூடியவரை மூடிக்கொண்டு குளிப்பதே நல்லது. சுத்தமான குளிர்ந்த நீரைத்தவிர வேறு எதுவும் விழிகளில் படக்கூடாது. காதுகளை விரலால் மேலாகத் தடவி சோப்பு தேய்த்துக் குளித்தால் போதும். காதின் உட்பகுதி களை இயற் கை தானா கவே சுத் தம் செய்து கொண்டு விடுகிறது. காதில் சேரும் அழுக்கு, மெழுகு வடிவில்தானே வெளிவந்து விடுகிறது. காதை உட்பகுதியில் எந்தத் துரும்பு வைத்து சுத்தம் செய்ய முயலாதீர்கள். வலியோ அரிப்போ இருந்தால் காதில் மருந்துத் துளி விட்டுக் கொள்ள லாம். இதை டாக்டரின் ஆலோசனையுடன் செய்ய வேண்டும். காதுக்குள் தண்ணீரை விடக் கூடாது. இங்கே கூறியவை அனைத்தும் மூக்கிற்கும் பொருந்தும்.

குளிக்கும் போது நன்றாகக் கொப்பளித்து, பற்களை விரலால் தேய்த்துச்சுத்தம் செய்யுங்கள். அடிக்கடி ‘மவுத்வாஷ்’ போன்ற திரவங்களைப் போட்டுக் கழுவாதீர்கள். வாயின் உட்பகுதியில் நல்லது செய்யும் பாக்டீரியாக்களும் உள்ளன. இவற்றை இவ்வாறு அடிக்கடி கழுவுவது நாசம் செய்துவிடும். பொய்ப்பல் வைத்து கொள்பவர்கள் அதைத் தனியாகக் கையில் எடுத்துச் சுத்தம் செய்ய வேண்டும். குளிப்பதற்குமுன் ‘ஷேவ்’ செய்து கொண்டு விடவேண்டும். இந்த சோப்பு மிச்சம் இல்லாமல் நன்கு கழுவிடப்பட்ட பின்பே குளிக்க வேண்டும். இந்த சோப்பின் நுரை கண்ணின் பகுதிகளில் படக்கூடும். முக க்ஷவரம் செய்துகொள்ள வென்னீர் தேவைப்படும். குளிக்கும்போது மற்ற பகுதிகளுக்கு இது தேவை இல்லை.

கை, கால் பகுதிகளில் அக்குள் பகுதிகளை நன்கு தேய்த்துக் கழுவவேண்டும். பொதுவாக நாம் இதைச் செய்வதில்லை. வேனிற்காலத்தில் இந்தப்பகுதிகளில்தான் அதிகமாக வியர்வையும், அழுக்கும் சேரும். சோப்பு போட்டு நன்றாகத் தேய்த்துக் குளிப்பதுடன், வியர்வை நாற்றத்தை விலக்க மருந்து தெளிப்பும், பவுடரும் உபயோகிக் கலாம். இவை அளவாக, குளித்தபின் செய்யப்பட வேண்டும். அலர்ஜி உள்ளவர்கள் உபயோகிக்கக் கூடாது. வியர்வை, வியர்க்குரு இவற்றுக்கென்றே தனி பவுடர்கள் உண்டு. இவற்றைப் பயன்படுத்தலாம்.

நகங்களில் நிறைய அழுக்குசேரும்.  இதை ஒவ்வொரு விரலாக எடுத்து, நகங்களின் இடுக்கில் சோப்பு சேரவிட்டு, தேய்த்துக் கழுவ வேண்டும். நகங்களை வளராமல் அவ்வப்போது கத்தரித்து விட வேண்டும். கை உறைகளைப் போட்டு வேலை செய்பவர்களும், கைகளில் ரசாயனப் பொருட்கள் படும்படி வேலை செய்பவர்களும் இதை முக்கியமாகக் கவனிக்கவேண்டும். அழுக்கு சேர்ந்த நகங்கள், நாம் உணவருந்தும்போது, உணவின் சுத்தத்தைக் கெடுத்துவிடும். பொதுவாகக் குளிக்கும்போது பின்புறம் (புட்டம்) ஆசனவாய் ஆகியவற்றை நாம் நன்கு தேய்த்துக் கழுவுவதில்லை. மலம் கழித்தபின் கழுவுவதோடு சரி. குளிக்கும்போது இப்பகுதிகளில் சோப்பு நுரை நன்கு படும்படி தேய்க்கவேண்டும். இல்லாவிட்டால் அரிப்பு, சொறி, படை ஆகியவை பரவிப் பீடிக்க வாய்ப்பு உண்டு.

பொதுவாகக் குளிர்ந்தநீரில் குளிப்பதே நல்லது. ஆனால் வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், சைனஸ் பாதிப்புள்ளவர்கள் குளிர்ந்த நீரல் குளிப்பது நல்லதல்ல. மேலும் இரத்த அழுத்தம் கூடுதலாக இருப்பவர்கள் குளிர்ந்த நீரில் குளித்தால் அழுத்தம் திடீரென்று கூடிவிடும். சிலருக்கு இருதய வலி கூடத் தோன்ற லாம். பொதுவாக உடற்சூடு அளவே கொதிப் புள்ள நீரில் குளிப்பது நல்லது. எண்ணெய் குளியல் செய்பவர்களும், ஒத்தடம் போல நீரை விட்டுக் கொள்பவர்களும், முடக்கு வாதம் போன்ற பாதிப்பு உள்ளவர்களும் வெந்நீரில் தவறாமல் குளிப்பதுதான் நல்லது. ஜலதோஷம் உள்ளவர்கள் வெந்நீரில் சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெய் விட்டுக் குளிக்க வேண்டும்.

குளித்து முடித்த பிறகு அதிக மொர மொரப்பு இல்லாத துணியால் (துண்டு) உடல் முழுவதையும் அழுத்தித் துடைக்கவேண்டும். கடுங்கோடையில் இதற்குப் பின் வேர்க்குரு பவுடர் போட்டுக் கொள்வது நல்லது. இவ்வாறு சுத்தமான உடம்பில் மீண்டும் அழுக்கை ஏற்றிக்கொள்ளக் கூடாது. ஏற்கனவே அணிந்த பழைய உடைகளைக் கூடுமானவரை மீண்டும் அணியாதீர்கள். இரவு உபயோகித்த உள்ளாடைகளை மீண்டும் உபயோகிக்காதீர்கள். துவைக்காத ஜீன்ஸ் உடைகளை மீண்டும் மீண்டும் அணிவது இன்றைய நாகரீகமாக இருக்கிறது. இது நல்லதல்ல. இதனால் அழுக்கு ஏறி சரும நோய் பரவும்.

இறுக்கமான உள்ளாடைகளையோ, உடைகளையோ அணியாதீர்கள். இவற்றில் வியர் வையும், அழுக்கும் சேரும். சருமத்தை அரித்து தேய்க்கும்; சொறி, வெடிப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகும். நல்ல வேனிற்காலத்தில் வேஷ்டி, தொள தொளவென்ற கதர், கைத்தறி, பஞ்சு சட்டை ஆகியவையே உகந்தது. வீட்டில் பனிய னும் வேஷ்டியும் போதும். பெண்கள் நூல் புடவையை அணிவதும், நூலால் செய்த உள்ளா டைகளை அணிவதும் உசிதம். இறுக அணியும் ஆடைகள் சருமத்தில் உள்ள நுட்பமான மயிர் களையும் குலைக்கும்.

குழந்தைகளைக் குளிப்பாட்டும்போது பொறுமையாக, மெதுவாகக் குளிப்பாட்டுங்கள். குழந்தைகளின் நாப்பி, கால்சட்டை, உள் பனியன் போன்றவற்றை எடுத்து நன்கு சோப்புத்துணியால் துடைத்து விட்டுக் குளிப்பாட்டுங்கள். டிடர்ஜன்டுகள் கெடுதலை விளைவிக்கின்றன. எண்ணெய்க் குளியலும், சூடான வெந்நீரும் அவசியம் அல்ல. லேசாக எண்ணெய் தடவி ஊற்றி, மிதமான சூடுள்ள வெந்நீரில் குளிக்கச் செய்தால் போதும். காது, மூக்கு ஆகியவற்றில் எண்ணெயை விடாதீர்கள். குழந்தைகளுக்கென்று மென்மையான சோப்பு உள்ளது. அதையே உபயோகியுங்கள். குழந்தையின் கையை, கைவிரல்களை நன்றாகத் தேய்த்துக் குளிப்பாட்டுங்கள். அவை சுத்தமாக இல்லாவிட்டால், குழந்தை விளையாடும்போதும், சாப்பிடும்போதும் விரல் சூப்பும் போதும் பாதிப்பு ஏற்படும். குழந்தையின் கை நகங்களை நன்றாகக் கத்தரித்து விட்டுச் சுத்தம் செய்யுங்கள்.

குளிக்கும்போது சோப்பு உபயோகிப்பது இன்று நம்மிடையே நன்கு பழகிவிட்டது. ஆனால் பயற்றுமாவு, மஞ்சள் பொடி, கடலை மாவு போன்றவை சருமத்துக்கு நன்மை தரக்கூடியவை. அதேபோலத் தலைக்குச் செம்பருத்தி, நெல்லித் தைலம், சந்தனாதித் தைலம் ஆகியவற்றை உபயோகிப்பது வெய்யில் காலத்தில் குளுமை சேர்க்கும். அவ்வப்போது இவற்றை உபயோகிப்பது நல்லது. நல்ல குளியல் உடம்பின் சருமத்தைப் பாதுகாக்கும். நம்மைச் சுறுசுறுப்பாக்கும். உடம் பிற்குப் புத்துணர்வு தரும். நாள் முழுவதும் வேலை செய்தபிறகு, நன்றாகக் குளித்தால் சோர்வும் அயர்ச்சியும் தீரும். நம்முடைய அன் றாட வாழ்க்கையில் ஒரு முக்கியமான தேவை நல்ல குளியல்.

- Dr.V.ஆவுடேஸ்வரி

Pin It