(1912-1966)

-2007

பதிப்புலகின் தந்தை எனப் போற்றப்படும் வை.கோ. என்ற சக்தி வை.கோவிந்தன் புதுக்கோட்டை மாவட்டம் ராயவரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் சுவிகாரப் புத்திரனாக வளர்ந்தவர். இவருடைய தந்தையின் தொழிலைக் கவனிக்க பர்மா சென்றார். அப்போது பர்மாவில் வெளிவந்து கொண்டிருந்த தன வணிகன் என்ற இதழில் சுவாமி சுத்தானந்த பாரதியார் எழுதிய ஏழைபடும்பாடு என்ற நூலின் பகுதிகளை ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வந்தது. இதை தொடர்ந்து படித்த பிறகு, அதைத் தொகுத்து சில நண்பர்களோடு சேர்ந்து அன்பு நிலையம் என்ற பெயரில் வெளியிட்டார். ஏழைபடும்பாடு என்ற நூலில் தொடங்கும் இவரது பதிப்புலகப் பயணம் சக்தி காரியாலயம் என்ற நிறுவனத்தை 1939ல் தொடங்கி அதன் வழியாக சுமார் இருநூற்றி ஐம்பது நூல்கள் வரை தொடர்ந்தது. தமிழ் புத்தகங்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் தமது வெளியீட்டு நிறுவனமான சக்தி காரியலாயத்தை விற்பனைக் கூடமாகவும் மாற்றினார். இவர் ஐநூறு பக்கங்கள் கொண்ட பாரதியாரின் கவிதைகளை ஒன்றரை ரூபாய் விலைக்கும். ஐநூற்றி ஐம்பது பக்கங்கள் கொண்ட திருக்குறள் பரிமேலழகர் உரையை ஒன்றறை ரூபாய்க்கும் விற்றார்.

தினமணி ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம் மொழி பெயர்த்த போரும் அமைதியும் என்ற புதினத்திற்கு பைண்டிங் செய்வதற்குத் தேவைப்படும் துணியைக் தனியாக ஆர்டர் கொடுத்து நெய்தார். ஒவ்வொரு புத்தகத் தயாரிப்பையும் குழந்தையை வளர்ப்பது போல் செயல்பட்டார். பெண்குயின் நிறுவனம் புத்தகங்களை வெளியிடுவது போல் தமிழ் புத்தகங்களும் வரவேண்டும் என்று செயல்பட்டவர். வெளிநாட்டிலிருந்து வெளிவந்த டைம் போன்ற பத்திரிகைகளின் தரத்திற்கு ஏற்ப இங்கு சக்தி என்ற இதழையும், பெண்களுக்காக மங்கை என்ற இதழையும் குழந்தைகளுக்காக அணில், பாப்பா, குழந்தைகள் செய்தி, ஆகிய இதழ்களையும் கதைக் கடல் என்ற இதழையும் நடத்தியவர். இன்றைக்கு சென்னையில் இருக்கும் மியூசிக் அகாடமி இருக்கும் இடம்தான் அன்றைக்கு சக்தி காரியாலயக் கட்டிடம் இருந்தது. அந்தக் கட்டிடத்தில் பல எழுத்தாளர்கள் இரவு பகலாக விவாதித்து உள்ளனர். காகிதத் தட்டுப்பாட்டு காரணமாகவும், புத்தக விற்பனைகளும் எதிர்பார்த்த மாதிரி இல்லாததாலும் நஷ்டம் ஏற்பட்டு சக்தி காரியாலயம் மூடப்பட்டது. தம்முடைய கடைசிக் காலத்தில் வறுமையால் உடல் நலத்திற்குக் கூட சரியாகச் சிகிச்சை செய்ய முடியாமல் இறந்துபோனார்.

வை. கோவிந்தன் நூல்கள்

01. வை. கோ.வின் குழந்தைக் கதைகள்

(நியு செஞ்சுரி புக் ஹவுஸ்)

02. பாப்பாவுக்குக் கதைகள் (நியு செஞ்சுரி புக் ஹவுஸ்)

03. மரம் பறந்தது (நியு செஞ்சுரி புக் ஹவுஸ்)

04. அணில் அண்ணன் கதைகள் (நியு செஞ்சுரி புக் ஹவுஸ்)

05. நான்கு முட்டாள்கள் (நியு செஞ்சுரி புக் ஹவுஸ்)

06. அலாவுதீனும் அற்புத விளக்கும் (கண்ணப்பன் பதிப்பகம்)

07. வை. கோ.வின் ஈ.சாப் குட்டிக் கதைகள் (கண்ணப்பன் பதிப்பகம்)

08. தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள் (கண்ணப்பன் பதிப்பகம்)

09. தவளைக் குளம் (கண்ணப்பன் பதிப்பகம்)

10. நச்சு மரம் (கண்ணப்பன் பதிப்பகம்)

11. கடலோடியின் கதை (கண்ணப்பன் பதிப்பகம்)

12. கூனன் கதை (கண்ணப்பன் பதிப்பகம்)

Pin It