உன் நீள்கூந்தலின்
இரட்டைச்சடைப் பின்னலில்
முடிச்செனக் கட்டியிருக்கும்
ஓரங்குல அகல நீளத்துண்டுகள்
தன் நிறத்தால் உன்னையொரு
மஞ்சள்குருவியெனக் காட்டுகிறது
வெட்கத்தில் தலைசாய்த்து
ஓரக்கண்ணில் பார்த்து
விழிகளால் இதழ்களால்
நீ சிரிக்கையில்
குருவிகளும் சிரிக்குமென
பழுதாகிட முடியா வரிகளில்
புத்தகமே எழுதிடலாம்

உன்னுடனான
இப்படிப்பட்ட அதிசய
நிகழ்வுகளையெல்லாம்
பல தொகுப்புகளாக
என்னை எழுதவைக்கவேனும்
என்னருகிலேயே குடியிருக்க
இப்பொழுதே வா சகியே

- எம்.ரிஷான் ஷெரீப் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It