1.

நகரின் மைய பகுதியில்
புதிதாக கட்டப்பட்ட அப்பார்ட்மென்டில்
ஒரு வீடு வாங்கியாச்சு
குளிர்சாதனப் பெட்டியும் துணி துவைக்கும்
இயந்திரம் புதியதாய் வாங்கி மாட்டியாச்சு
பாலுக்கும் தண்ணீருக்கும் கூட சொல்லியாச்சு
குழந்தைகளுக்கு பள்ளி வேன் வீட்டுக்கே வந்து விடும்
ஆனால் ஒரு ரோஜா செடி வளர்க்கத் தான் வழியில்லை

2. 

கிட்னி பெயிலராகி இறந்து போன
பொன்னுச்சாமி அண்ணனின்
இறுதி ஊர்வலத்தில் அவரது
கால்விரல்களைத் தொட்டதாக அம்மாவிடம் சொன்னேன்

ஏன் அப்படி பண்னினே
இன்னைக்கு நைட்டு புடிச்சுக்குவாரு பாரு பயங்காட்டினாள்

அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியாது

புருஷன் செத்ததுக்கு கூட வராம
மச்சினன் வீட்டுல தங்கிட்ட பொண்டாட்டிய
விட்டுட்டு என்னையவா வந்து புடிப்பாரு??


- கார்த்திக் பிரபு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It