பெரும்பாலான பெண்கள் கர்பப்பை இரத்த ஒழுக்குத் தொந்தரவுகளுக்கு உள்ளாகி இருக்கின் றனர். சாதாரண மருத்துவர்களும், பெண் பாலுறுப்புச் சிறப்பு வல்லுனர்களும் இந்த இரத்த போக்கை நிறுத்துவதற்கு பல்வேறு வகையான மருந்துகளைப் பயன்படுத்து கின்றனர். ஒழுக்கு நின்று விட்ட பின்னரும் மருந்தை விட்டு விடாமல் தொடர்ந்து உட்கொள்ளச் சொல்லுகின்றனர்.
இந்த மருந்துகளைக் கொடுத்தும் நிறுத்த இயலாமல் போகும் போது, பிறப்புறுப்பின் உள்ளே உட்காயம் இருப்பதாகக் கூறி அதற்காக, நோய் எதிர்ப்புக்காக என்று பாலுறுப்புக்கு உள்ளே செருகக்கூடிய மருந்தையும் கொடுத்து சிகிச்சை செய்கின்றனர்.
ஆனால் இதுவும் பயனளிக்காமல் போய் விடும்போது ஒரு ஊடுகதிர்ச் சிகிச்சை செய்வதற்கு சிபாரிசு செய்து அதன்படி செய்யவும் படுகிறது. இதுவும் பலனளிக்காமல் போய் விடும்போது முடிவாக அறுவை சிகிச்சை செய்து கர்பப்பையை நீக்கிவிட்டு, இனித் தொந்தரவு இருக்காது என்று மகிழ்வுடன் சிரித்துக் கொண்டு சொல்வார்கள் அறுவை மருத்துவர்கள். இதன் மூலம் பெண் தன் பாலுறுப்பை இழந்து விடுகிறாள். இது போன்ற அறுத்து நீக்கும் ஆயுத சிகிச்சையை அனுபவப்பட்ட ஹோமியோ பதி மருத்துவர்கள் கடும் கண்டனம் செய்கிறார்கள்.இந்த இரத்த போக்கை நிறுத்துவதற்கு முறையான சிகிச்சையும், சிறந்த தீர்வும் ஹோமியோபதியில் இருக்கின்றன.
பெரும்பாலும் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப் பையை நீக்காமலேயே நலம் செய்விக்க முடியும். வீர்யப் படுத்தப்பட்ட, செயலாற்றல் மிக்க ஹோமியோபதி மருந்துகள் கொடுக்கப் படும் போது, அம்மருந்து மிக எளிதாகவும், மிகவிரைவாகவும் தன்னுடைய கடமையயை நிச்சயமாகச் செய்யும்.
சிறந்த சில ஹோமியோபதி மருந்துகள்:
இபிகாக்;
கர்பப்பையிலிருந்து தொடர்ந்து ஒழுக்கு இருக்கும், ஆனால் கொஞ்ச நேரத்திற்கு ஒரு முறை அதிகமாகப் பாய்ந்து வரும், அப்படி வரும்போது பிரகாசமான சிவப்பு இரத்தம் வெளி வரும். துயரர் தனக்கு உணர்விழப்பு ஏற்படுமோ என்று நினைப்பார், அல்லது மூச்சுத் திணறல் இருந்தால் மற்றும் இரத்தப் போக்கின் அளவு நெடுங் கிடையாக இருப்பதற்குத் தேவையான அளவு இல்லாதிருந்தால் குமட்டல் உணர்ச்சி, இரத்த அழுத்தக் குறைவினால் வரும் உணர்விழப்பு, வெளிறிய தோற்றம் இவற்றிற்கு சிறந்தது இபிகாக் மருந்து ஆகும்.
அகோனைட்;
பிரகாசமான சிவப்புஇரத்தம் பாய்ந்து வெளியேறி இதன் கூடவே மரண பயமும் இருந்தால் நல்ல பயன்தரும்.
பாஸ்பரஸ்;
கிட்டத் தட்ட எப்போதும் இரத்த போக்கிற்கு உதவும் மருந்தாகும் இது. வாடி வதங்கி இருக்கும் பெண் துயரர், மெலிந்து ஒல்லியாகி எப்போதும் வெப்பம் காரணமாக துன்பப் பட்டுக் கொண்டிருந்தால், போர்வையைப் போர்த்தாமல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்க விரும்பினால், கர்பப் பையிலிருந்து அடிக்கடி இரத்தப்போக்கு இருந்தால் சிறந்த முறையில் பயனளிக்கும் மருந்து பாஸ்பரஸ் ஆகும்.
இரத்தம் உறைந்து இருந்தால் அல்லது இரத்தப் போக்கு கறுப்பாக நீராக இருந்தால் சீகேல் கார்னூட்டம் நலமளிக்கும்.
நோயின் பெயருக்கு மருந்து என்கிற இயந்திரத்தனம் இல்லா மல், துயரரின் தொந்தரவுக்கான காரணம் என்ன என்றும், துயரரின் உடல்வாகு பற்றியும், மனப்பாங்கு பற்றியும், இரத்த ஒழுக்கானது என்ன நிறத்தையும், என்ன தன்மையையும். என்ன வகையையும் கொண்டுள்ளது என்றும் அத்துடன் கூடவே மாறுமைக் குறிகளையும் கணக்கில் கொண்டு அதே போன்ற முழுமைக் குறிகளை செயற்கையாகத் தோற்றுவித்த மருந்துப் பொருள் எது என்று தேடுகிறார் ஹோமியோபதி மருத்துவர்.
அவருக்கு நோயின் பெயர் பற்றி கவலை ஏதுமில்லை. அதற்கு அவசியமுமில்லை. வீர்யப்படுத்தப் பட்ட மருந்தை துயரரின் இயங்கும், தாங்கும் திறனுக்கேற்ப வழங்கும் போது கர்பப்பை இரத்த ஒழுக்கு நிறுத்தப்பட்டு நலமாக்கல் நிகழ்கிறது என்கிறார் மரு. ஜே.டி.கெண்ட்.
இது எப்படி செயல்படுகிறது என்பதை விட இந்த நுண்ணிய ஹோமியோ மருந்து உயிர் ஆற்றலில் வேலை செய்கிறது என்பது மட்டும் உண்மை!
- அ.அப்துல் அஜிஸ்