எருக்கு (Calotropis gigantea)

erukkuஎருக்கின் பழுப்பிலைகளை அனலில் வாட்டிச் சாறு பிழிந்து அதனுடன் சிறிது சுண்ணாம்பும் தேனும் கலந்து குழைத்து விடக்கடிகளின் கடிவாயில் தடவிவர ஆரம்ப நிலையிலுள்ள விடம் இறங்கும்; கட்டிகளின் மீது பூசிவரக் கட்டிகள் உடையும்; எருக்கின் பழுப்பிலையைச் சுட்ட செங்கல்லின் மீது வைத்து அதன்மீது குதிகாலைச் சூடு பொறுக்குமளவு வைக்கக் குதிகால்வாதம் (Calcaneous spur) தீரும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

Pin It