முல்லை பெரியாறு - சில உண்மைகள்
நன்கொடை ரூ.50

"தமிழ் நாட்டில் உள்ள நாம் முல்லைப் பெரியாறு அணை பற்றி, அதன் தற்போதைய நிலை பற்றி எதிர்காலத்தில் அணையும், அணை நீரும் நம்மை விட்டுப் பறிபோய்விடுமோ என்பது பற்றிய சிந்தனை, கவலை ஏதுமின்றி இருக்கின்றோம். கேரளத்தில் ஒவ்வொருவரும் இந்த அணையைப் பற்றி இதன் சிக்கல் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்துள்ளனர். அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக நிலை நிறுத்த விடமாட்டோம் என்னும் ஒரே குரலில். ஏன்? இது குறித்த ஒரு விளக்கக் கையேடுதான் உங்கள் கையில் தவழும் இச்சிறிய கையேடு.''

ஆசிரியர் : ஹாஜி கே.எம். அப்பாஸ்
பக்கங்கள் : 114
வெளியீடு : சோக்கோ அறக்கட்டளை, 143,
ஏரிக்கரை சாலை,
கே.கே. நகர், மதுரை - 20
பேசி : 0452 - 2583962


மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்
விலை ரூ.70

"எண்பது வயதை எட்டிவிட்ட புலவர் கலியபெருமாள், தியாகச் சுடராக இன்று நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மக்களுக்குத் தொண்டாற்ற வருகிறோம் என்று சொல்லி, ஏதேதோ செய்து தங்கள் சொந்த வாழ்வை வளமாக்கிக் கொண்டவர்கள் நடுவில் அவர் ஓர் அபூர்வமான பிறவியாகத் திகழுகிறார். லட்சிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் புலவர் கலியபெருமாள் அவர்களின் இந்த வாழ்க்கை வரலாற்று நூலை, தமிழ் நாட்டு இளைஞர்கள் ஒவ்வொருவரும் படித்துப் புத்துணர்வு பெற வேண்டும்.''

ஆசிரியர் : புலவர் கு. கலியபெருமாள்
பக்கங்கள் : 168
வெளியீடு : செந்தீ பதிப்பகம்,
14/52, பூக்காரத் தெரு,
வடபழனி, சென்னை - 600 026சோதிடப் புரட்டு
விலை ரூ.250

"சோதிடம் கட்டி எழுப்பப்பட்டுள்ள அடித்தளமே தவறானது. பல கோடி கல் தொலைவில் உள்ள கோள்கள், பத்து, நூறு, ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள ராசிகள், நட்சத்திரங்கள் புவியில் பிறக்கும் குழந்தையைப் பாதிக்க வழியேயில்லை! அப்படியிருக்க, அதன் அடிப்படையில் எந்தப் பெரிய கெட்டிக்காரச் சோதிடனும் எவ்வளவு நுட்பமாகக் கணித்துப் பலன் சொன்னாலும், அது பிழையாகவே இருக்கும்! சோதிடம், இல்லாத ஊருக்குப் போகிற வழி சொன்னவன் கதையாகும். மூடநம்பிக்கை நோய் தீர, பகுத்தறிவு மருந்தை உட்கொள்ள வேண்டும்.''

ஆசிரியர் : நக்கீரன்
பக்கங்கள் : 600
வெளியீடு : பெரியார் திராவிடர் கழகம்,
27, கனகராய மலையப்பன் தெரு,
சென்னை - 600 028


மனித உரிமைகள்
விலை ரூ.175

"இந்தப் புத்தகம், மனித உரிமைகள் கோட்பாட்டையும், 1993 ஆம் ஆண்டின் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் விளக்கத்தையும் ஆராய்கிறது. மேலும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளிலிருந்து ஏராளமான குறிப்புகள் கொடுத்து, வாழ்வியல் தொடர்பான அனைத்து உரிமைகளையும் விளக்குகிறது. சுதந்திரம் மற்றும் சமத்துவம் குறித்த உரிமைகள் விளக்கப்பட்டுள்ளன. மாண்பு குறித்த உரிமைகளையும் மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வுகளும் கூறப்பட்டுள்ளன.''

ஆசிரியர் : எஸ். சாந்தகுமார்
பக்கங்கள் : 310
வெளியீடு : மக்கள் கண்காணிப்பகம்,
6, வல்லபாய் சாலை,
சொக்கிகுளம், மதுரை - 2
பேசி : 0452 2531874


இந்தியாவில் நெருக்கடி நிலை
விலை ரூ.85

"இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்ததற்கான சுயநல அரசியல் பின்னணியிலிருந்து, இந்திய அளவிலும் தமிழக அளவிலும் அது மனித உரிமைகள் மீது தொடுத்த தாக்குதல்கள், எடுத்துக் கொண்ட ரத்த பலிகள் ஆகியவற்றை கோர்வையாக எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். இதன் மூலம் மறக்க முடியாத கொடுமைகளை, ஆவணமாக நமக்கு வழங்கியுள்ளார். இக்கொடுமையைச் செய்த காங்கிரசுடன் கொடுமைக்குள்ளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ரத்தத்தின் ரத்தங்கள் "மிசா” கொடுமையானதா? "பொடா” கொடுமையானதா? எனப் பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு சந்தர்ப்பவாத நாடாளுமன்ற அரசியல் சீரழிந்திருப்பதை இந்நூல் சுட்டுகிறது.''

ஆசிரியர் : ரா. சுப்பிரமணி
பக்கங்கள் : 192
வெளியீடு : சாளரம், 348ஏ, டி.டி.கே. சாலை,
சென்னை - 600 014


உதிரும் இலை
விலை ரூ.35

"அழுதழுது முகம் வீங்கி/மூலையில் சுருண்டு கிடப்பான்/வெடி கேட்டு அடி வாங்கிய தம்பி/குடிகாரப் பாவி/ரெண்டு ரூபா பட்டாசு வாங்கியாரக் கூடாதா?/தூங்கிய பிள்ளையை அள்ளி/மடியில் கிடத்திப் புலம்பும் ஆத்தா/அதிரசம் கேட்டழும் சின்ன தம்பிக்கு/நாளைக்கி மாமா எடுத்தாரும்/பேசாமல் இருயெனப் பொய்ப்பாள்/சாணி வாரிக் கொட்டினாலும்/ஊசிப்போன பின்தான் கொடுப்பாள்/ஆண்டச்சி/அடிச்சத்தம் அழுகைச் சத்தம்தான்/இங்கு வெடிச் சத்தம்/எவன் செத்தாலென்ன/வறுமை மட்டும் மார்கண்டேயனாக/இருந்துகொண்டு?''

ஆசிரியர் : ஜெ. முனுசாமி
பக்கங்கள் : 64
வெளியீடு : மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்,
32/9, ஆற்காடு சாலை,
சென்னை - 600 024
பேசி : 044 - 2372 3182
Pin It