இரைதேடி தரை கிளறும்
கோழியைப் போல்
கவிழ்ந்து கிடக்கிறது தலை
வறண்ட நிலத்தின் வெடிப்புகளென
பயனற்றதாய் போய்விட்டது
மனிதர்களின் மானமும் சுயமரியாதையும்
மவுனத்தின் கரைகள்மேல் நின்று
மக்கள் பார்க்கின்றனர் கூத்துகளை
அவமானம் குறித்தோ
அடிமைத்தனம் குறித்தோ
கவலைகள் ஏதுமற்றவர்கள்
மதிநலம் மிக்க மந்திரிகள்
முன்னாள் முதல்வரெனினும்
டயரடி மண்போற்றும் தகுதிபோதும்
வீரத்தமிழக அரசியலுக்கு
கானல் நீர் பாய்ந்த
கண்ணுக்குத் தெரியாத புற்களை
மானங்கெட்டு மேயப்போயிருக்கின்றன
மயிர்நீப்பின் உயிர்நீக்கும் கவரிமான்கள்
-யாழன் ஆதி