தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை தொடர்ந்து நீடிப்பார். - செய்தி

‘மேடம்’ பா.ஜ.க. தலைவராகக் கூட முடியும். ஆனால், அதன் தந்தை அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.சில் ஒரு உறுப்பினராகக்கூட முடியாது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஊழல் புகாரில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி வீட்டில் போலீசார் சோதனை. - செய்தி

இதுவே எங்க தமிழ்நாடாக இருந்திருக்குமானால் ‘ஏழுமலையானிடம்’ முன் அனுமதி பெறாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்று சட்டம போட்டு தடுத்திருப்பாங்கய்யயா....

சீதையை காட்டிலேயே தங்குமாறு காரணமின்றி தண்டித்த இராமன், இலட்சுமணன் மீது நடவடிக்கைக் கோரி பீகார் நீதிமன்றத்தில் சந்தன்குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. - செய்தி

‘இராமனு’க்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்காமலே தள்ளுபடி செய்யறது எந்த ஊரு நியாயங்க... ‘இராம’ பகவானை இப்படியெல்லாம் அவமரியாதை செய்யாதீங்க...

அந்த காலத்து ‘அக்கிரகாரங்களை’ ‘தொல் பெருமை’ப் பகுதிகளாக அறிவித்து புதுப்பிக்கிறது கேரள அரசு. - ‘இந்து’ செய்தி

ஆனா,சேரிகள் மட்டும் காலாகாலத்துக்கும் ஒதுங்கியே கிடக்கும்! அப்படித் தானே?

கருத்து சுதந்திரத்தில் ஆட்சி அதிகாரங்கள் தலையிடக் கூடாது. - அமெரிக்காவில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு

இதைப் பேசுவதற்கு இங்கேயிருந்து அமெரிக்கா வரை போக வேண்டியிருக்கு, பாருங்க...

பா.ஜ.க. ஆதரிக்கும் அணியே ஆட்சி அமைக்க முடியும். - தமிழக பா.ஜ.க.

தேர்தல் முடிந்து, ஆட்சி அமைக்கும் கட்சிக்கு அந்த நேரத்தில் பா.ஜ.க. ஆதரவு தரும்னு அறிவிப்பாங்க போலிருக்கு!

Pin It