பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக ஹினா ரப்பானி என்ற பெண்மணி பொறுப்பேற்று இரண்டு வார காலமாகிறது. அவர் பொறுப்பேற்ற சில தினங்களுக்குள் உலக நாடுகளின் கவனத்தை வெகுவாகவே ஈர்த்திருக்கி றார்.

ஹினாவின் போட்டோக்களை பிரசுரிப்பதிலும், அவரது வீடியோ கிளிப்புகளை, நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதிலும், அவரி டம் நேர்காணல் நடத்தவதிலும் போட்டி போடுகின்றன சர்வதேச ஊடகங்கள்.

பயங்கரவாதத்திற்கும் பாகிஸ் தானுக்கும் முடிச்சுப் போட்டு பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தான்; தாலிபான்களின் புகலிடம் பாகிஸ்தான் என்றெல் லாம் பாகிஸ்தானுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வந்த சர்வதேச பிரபல ஊடகங்கள் எல் லாம் தற்போது பாகிஸ்தானை புகழ்ந்து தள்ளுகின்றன. உபயம் ஹினா ரப்பானிதான்.

வசீகரத் தோற்றம் கொண்ட இளம் பெண்ணை பாகிஸ்தா னின் வெளியுறவு அமைச்சராக பாக் நியமித்திருப்பதை ஏதோ கொண்டாட்டமாக எடுத்துக் கொண்டு குதூகலிக்கின்றன ஊடகங்கள்.

பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநில முல்தான் நகரைச் சேர்ந் தவர் ஹினா ரப்பானி. ஹினா வின் தந்தை குலாம் ரப்பானி பஞ் சாப் மாநிலத்தின் புகழ்பெற்ற அரசியல் தலைவர். ஹினாவின் தாய் மாமன் பஞ்சாப் மாநில முதல்வர். ஆக அரசியல் குடும்பத் தைச் சேர்ந்தவர்தான் ஹினா.

ஹினா அமெரிக்கப் பல்க லைக் கழகத்தில் பயின்றவர். அத னால் அமெரிக்க அரசியல் சிந்த னைகளில் ஈர்க்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. பாக் பிரதமர் கிலானி தலைமையி லான அமைச்சரவையில் பொரு ளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் இணையமைச்சராக ஹினா பணியாற்றியுள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ஷா முஹ்மது குரைஷி பதவி நீக்கம் செய்யப் பட்டவுடன் தற்காலிக வெளியுற வுத்துறைச் செயலாளராக கந்த பிப்ரவரி மாதத்திலேயே நியமிக் கப்பட்டவர் ஹினா. ஆனால் அப்பொழுதெல்லாம் மீடியா ஃபிகராக ஹினா மிளிரவில்லை. ஆனால் கடந்த 20ம் தேதி அதி காரப்பூர்வ வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும் தான் சர்வதேச கவனத்தை ஈர்த் துள்ளார்.

ஹினாவின் நியமனத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பங்கிருப்பதாக கூறப்படுகிறது. பயங்கரவாதிக ளின் புகலிடமாக பாகிஸ்தான் இருந்து வருகிறது என்கிற சர்வ தேச நாடுகளின் குற்றச்சாட்டும், பாக்கில் தொடர்ந்து அரங்கே றும் பயங்கரவாதத் தாக்குதல்க ளும் பாகிஸ்தானை ஏறக்குறைய பயங்கரவாதிகளின் பயிற்சிப் பாசறையாகவே உருவாக்கி விட் டன.

இந்நிலையில் உஸôமா பின் லேடன் பாக் மண்ணிலேயே ஆண்டுக் கணக்கில் பதுங்கியிருந் தார் என்றும், பாக்கின் பாதுகாப் பில்தான் அவர் இருந்தார் என் றும் நம்பிய அமெரிக்கா... உஸôமா வேட்டைக்குப் பின் பாக்குடன் மெல்லிய மோதல் போக்கை கடை பிடித்து வருகிறது.

ஐ.எஸ்.ஐ.யிலும் தீவிரவாதிக ளுக்கு ஆதரவான சக்திகள் ஊடு றுவியுளள்தாக அமெரிக்க சிஐஏ வெள்ளை மாளிகையில் கொளுத் திப் போட்டது. இந்தச் சந்தர்ப் பத்தில் மும்பைத் தாக்குதலும் சமீபத்தில் நிகழ்ந்தவுடன் பாகிஸ் தான் மீது பழி விழுந்தது. தொடர் அவஸ்தைக்குள்ளாகி சர் வதேச அரங்கில் அவமானத்தை பாகிஸ்தான் சந்திக்க இதற்கான பொறுப்பை ஐஎஸ்ஐ சுமக்க நேர்ந்தது.

சர்வதேச அரங்கில் சரிந்து போயிருக்கும் செல்வாக்கை சரிகட்ட அழகும், வசீகரமும், புத்திசாலித்தனமும் கொண்ட ஹினா ரப்பானியை வெளியுறவு அமைச்சராக ஆக்கினால் வெளி நாட்டுப் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையின்போது எதிர் தரப்பினரின் கடுமையை குறைக்க முடியும்; தங்கள் மீதான பழியையும் சர்வதேச அரங்கில் துடைக்க ஹினாவின் கெஞ்சல் மொழிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றெல்லாம் கணக்குப் போட்டது ஐஎஸ்ஐ தான் என்று சொல்லப்படுகிறது.

எப்படியிருப்பினும் சரிந்து போன பாக்கின் செல்வாக்கை தன் வசீகர அழகால் ஓரளவிற்கு தூக்கி நிறுத்தியுள்ளார் ஹினா என்றே சொல்ல வேண்டும். புத்தி சாலித்தனம் கொண்ட பெண் என்று ஹினாவைப் பற்றி கூறப்ப டுவதால் - இனி அரவது அய லுறவு நடவடிக்கையை வைத்துத் தான் அதனை தீர்மானிக்க முடி யும்.

மீடியாக்கள் தன் அழகைப் போற்றிப் புகழ்வதால் அதனை அலட்சியப்படுத்திவிட்டு - தனது துறை நடவடிக்கைகளில் புத்திசா லித்தனத்துடன் நடந்து பாகிஸ்தானுக்கு உலக அரங்கில் நற்பெ யரை வாங்கித் தருவாரா? அல் லது அலங்காரப் பதுமையாகவே பவனி வருவாரா? என்பதை ஹினாவின் எதிர்கால நடவடிக் கைகள்தான் தீர்மானிக்கும்.

- ஹிதாயா