பறக்கும் தட்டுகள் (Flying saucers) பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். வானிலிருந்து மனிதர்கள் பூமிக்கு வருவதாக புரட்டுகளை பரப்புகிறார்கள். அது மிகவும் அதிசய மானது என்றும் அதைப் பற்றி நம்ப முடியாத கட்டுக் கதைகளையும் இது வரையிலும் கூறி வந்தனர். இப்பொழுது ஆராய்ச்சியாளர்கள் குறிப்பாகக் கணித ஆராய்ச்சியாளர்கள் பறக்கும் தட்டு உருவாகும் விதத்தைக் கணிதத்தின் புதிய பிரிவான catastrophe Theory  மூலம் விளக்கியுள்ளனர். அதாவது ஒளி அலைக்கற்றையானது ஒரு நீள்வட்ட ஊடகத்தில் பாயும் பொழுது ஒரு வகையான ஒளிக்கூடு ஏற்படுகிறது. இதை காஸ்டிக் (caustic) என்பர்.

அது லேசான காற்றில் ஒரு வகையான மாற்றத்தால் புதிய காஸ்டிக்காக உருவாகிறது. இது தட்டுப் போன்ற அமைப்புக் கொண்டது. பனி மூட்டத்தின் மீதோ அல்லது தூசு மண்ட லத்தின் மீதோ பாயும் பொழுது இது போன்ற காஸ்டிக்குகள் உருவாகும். பனிப் படலமும் தூசு மண்டலமும் நகரும் பொழுது இந்த காஸ்டிக்குகளும் நகரும். இதையே பறக்கும் தட்டுகள் என்று கூறு கின்றனர்.

ஆதாரம் : V.I. Arnold, catastrophe Theory  spring, Berlin 1984.

Pin It