“உலகத் தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம். இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது. காங்கிரசைவிட, இந்த மந்திரிசபை தேவலாம் என்கிறார்கள். இந்த நேரத்தில் ஏன் இந்த கூத்து? கனம் அண்ணாதுரை 1972 இல் பதவிக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிடட்டும்? உலகத் தமிழ்மாநாடு கூடிக் கலைந்த பின் சூத்திரன், சூத்திரனாகத் தானே இருக்கப் போகிறான்? இழிவு ஒழியப் போகிறதா? கண்ணகி சிலையும் கம்பன் சிலையும் எதற்கு? இவர்கள் நமது இனப் பெருமையை ஒழித்தவர்கள் அல்லவா?

- பெரியார் ‘விடுதலை’ 15.12.1967

இது அண்ணாவை ஆதரித்த போதே உலகத் தமிழ் மாநாடு பற்றி பெரியார் கூறிய கருத்து. பெரியார் தனக்கு மட்டுமே சொந்தம் என்றும், மற்றவர்கள் பெரியார் கொள்கையைத் திரித்து விடுவார்கள் என்றும் கூறும் வீரமணி, இப்போது செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்துப் பாடிக் கொண்டிருக்கிறார். இவர்தான் பெரியார் கொள்கையை திரிபுவாதிகளிடமிருந்து காப்பவராம்!

- பெரியார் முழக்கம் செய்தியாளர்

Pin It