மனிதகுலம் போரிலும் இயற்கைப் பேரழிவிலும் பாதிக்கப்பட்ட போதெல்லாம் தமிழினமும் கண்ணீர் வடித்தது. அந்தத் துயர் துடைக்க இயன்றதனைத்தும் செய்தது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது நம் உயரிய பண்பாடு. சிங்களப் பேரினவாதத்தால் ஈழத்தில் பெரும் இன அழிப்புப் போர் நடத்தப்பட்டது. ஆனால் நம் தொப்ப+ழ்கொடி உறவுகளை நம்மால் காக்க முடியாமல் போனது.

      மழலைகள் முதல் முதியோர் வரை போரில் ஈடுபடவே முடியாதவர்கள்தான் அந்தப் போரினால் இலட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் எனும் சொல்லுக்குப் பின்னால் தொடர்ச்சியான குண்டுச் சத்;தங்களும் தமிழர்களின் சிதறிய சதைத் துண்டுகளும் எத்தனை எத்தனை! உலகம் தடை செய்து வைத்திருக்கிற கொத்துக் குண்டுகளும் பாஸ்பரஸ் குண்டுகளும் தமிழினத்தைப் பதம் பார்த்தன. அப்போதும் உலகம் வேடிக்கை பார்த்தது. இந்தியா? ஆறரைக் கோடித் தமிழர்கள் இந்தியாவின் கீழ் அதன் குடிமக்களாய் இருக்கிறோமே!

      நாம் போராடினோம். தமிழகத்தின் எல்லாத் தரப்பினரும் எல்லா வகைகளிலும்; போரை நிறுத்து எனும் ஒற்றைக் கோரிக்கையைச் சுமந்து போராடினோம். தமிழகச் சட்டமன்றத்தில் அது ஒரு இனப் படுகொலை என்பதை இனம் காட்டி, போரை நிறுத்து என்று தீர்மானம் நிறைவேறியது. இதற்கிடையில் நடந்தவை:

      இந்திய அரசும் சிங்கள அரசும் இராணுவத் துறையில் கூட்டாகச் செயல் பட்டன. தமிழக முதல்வரின் வீட்டு வாயிலில் நின்று சிங்கள இராணுவத்திற்கு இந்தியா போர்ப் பயிற்சி தருவது உண்மைதான் என அறிவித்து விட்டுப் புறப்பட்டார் பிரணாப் முகர்ஜி. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில் சிங்களத்திற்கு ஆயுதம் தருவதை ஒப்புக் கொண்டார். இலங்கை வந்த பிரணாப் முகர்ஜி எங்களிடம் போர்நிறுத்தம் கோரவேயில்லை என்று சிங்கள அரசு அறிவித்தது. கோத்தபய இராசபக்சே போர் பற்றி இந்தியாவிற்கு தினம் தினம் தகவல் தந்து கொண்டிருப்பதாக அறிவித்தார். இந்தியாதான் அந்தப் போரை நடத்தியது.

      இந்தப் பின்னணிதான் முத்துக்குமார் எனும் உன்னத இளைஞனை நமக்கு அறியத்தந்தது. ஈழத்தில் நடக்கும் இனஅழிப்புப் போரை நிறுத்துவதற்கு தமிழகத்தின் எழுச்சி போதவில்லை. இந்திய அரசு எதற்கும் அசையவில்லை. தமிழக அரசு இந்திய அரசுக்கு முட்டுக்கொடுத்து நின்றது. இனி தமிழகம் போர்நிறுத்தக் கோரிக்கையை அடைவதற்கான போராட்டத்தில் அடுத்தக் கட்டப் பாய்ச்சல் தேவை. அதற்குத் தன்னையே கருவியாக்கிக் கொண்டான் முத்துக்குமார்.

      சென்னை சாஸ்திரி பவனைக் கடக்கிற போதெல்லாம் மனம் கனத்துப் போவதைத் தவிர்க்க முடியவில்லை. அதற்கப்பாலும்  அங்கே அந்த நொடியும் ஒருவர் எரிந்துகொண்டிருக்கிற நினைப்பு வந்து போகிறது. தன்னைத்தான் எரித்துக் கொள்வதற்கு முன்னால் அவன் இறுதி உயிலான எட்டுப்; பக்கக் கடிதத்தைத் தன்னைச் சுற்றியிருந்த மக்களிடம் சேர்ப்பித்தான். தன் உடலைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திப் போராட்டத்தை கூர்மைப்படுத்த வேண்டிக் கொண்டான். தமிழகத்தின் விடிவுக்கும் இத்தருணமே நல்ல வாய்ப்பு எனும் நம்பிக்கை அவனுள் நிறைந்திருந்தது. அவன் விருப்பம் ஈடேறவில்லை.

      “முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன் ” நூலில் தோழர் ஆ. கலைச்செல்வன் முத்துக்குமாரின் வாழ்வை எழுதியுள்ளார். இளமைக் காலத்திலேயே தமிழுணர்வால் உந்தப்பட்டு, புலவர் தமிழ்மாறனால் வார்க்கப்பட்ட நெருப்பு நெஞ்சம் முத்துக்குமாரு டையது. தமிழ்ச் சமூகம் அவனைத் தெரிந்து வைத்திருப்பது சொற்பமே. நெருப்பாய் உருமாறிய அந்த இளைஞனின் வாழ்க்கைத் தடங்கள் எங்கும் தமிழ்த் தேசியம் கொடி பிடித்து நின்றது.

      அ. இராமசாமி எழுதிய “என்று முடியும் இந்த மொழிப் போர்” நூல் படித்து முத்துக்குமார் எழுதியக் குறிப்புகள் :

  •     இது ஒரு வரலாற்று ஆவணம்
  •   அரசியல் பலனடைந்தது திமுக
  •   தேசிய இனப் பிரச்சனை குறித்த சரியானப் பார்வை கிடையாது.
  •   மொழியுரிமைப் போராட்டம் பதவி வேட்டையாகச் சீரழிந்தது.

      புலவர் தமிழ்மாறன் முத்துக்குமாரை வடித்த சிற்பி. தமிழும் தமிழ்த் தேசியமும் அவரின் உயிர் கலந்த உணர்வுகள். ஆழமான தத்துவங்களை, கருத்துகளை மிக எளிமையாகவும், ரசனையாகவும், அதேபோது அதன் கனம் இழக்காமலும் அவரால் இயல்பாக முன்வைக்க முடியும்.

      ஈழம் குறித்து குரும்ப+ரில் நடந்த பொதுக் கூட்டத்தில் புலவர் பேசினார். அதுவே முத்துக்குமார் கலந்து கொண்ட முதல் அரசியல் நிகழ்வு. தநாமாலெக “ஸ்டெர்லைட் எதிர்ப்பியக்க”த்தை ஒருங்கிணைத்துப் பொதுக்கூட்டம் ஒன்றை 15.07.1996இல் நடத்தியது. மேடை அமைப்பதிலும் கொடிகள் கட்டுவதிலும் சுற்றிச் சுற்றி செயல்படுகிறான் முத்துக்குமார். தேனிசை செல்லப்பா குரல் அந்தப் பகுதியெங்கும் ஒலிக்கிறது. புலவர் தமிழ்மாறன் உரையைக் கேட்பதற்கு புதுபொம்மை கிடைத்;த பிள்ளைபோல் முன்வரிசையில் அமர்ந்து கொள்கிறான் முத்துக்குமார்.

      ஐயா பழ.நெடுமாறன் தலைமையிலான தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு ராஜீவ் கொலை வழக்கில் 26பேர் உயிர்காப்பு நிதிக்கு இயக்கம் நடத்திய போது அதற்காக நிதி திரட்டித்தருகிறான் முத்துக்குமார்.

      பாவலர் காசி ஆனந்தனின் திருச்செந்தூர் உரை தோழர் தியாகுவின் அந்திய+ர் உரை – முத்துக்குமார் திரும்பத் திரும்பக் கேட்ட உரைகள்.

“தமிழ்நாட்டிற்கு ஆட்சி உரிமை இல்லை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் குடியுரிமை இல்லை.

இந்தியச் சிறைக்குப் பொன்விழா”

எனும் வாசகம் அடங்கிய சுவரொட்டிகளை ஆகஸ்ட் 15ஆம் நாளையொட்டி முத்துக்குமாரும் தோழர்களும் ஒட்டியிருக்கின்றனர்.

      தோழர் ஒருவருக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது எனக் கேள்வியுறும் போது தாணுவின் பெயரையே வழிமொழிகிறான். தாணு என எழுதி புரட்சிகர வாழ்த்துகள் என்றும் குறிப்பெழுதுகிறான்.

      இந்தியா ஒரு துணைக்கண்டம்: தமிழர்கள் ஒரு தேசிய இனம் எனும் பார்வை அவர் அரசியலின் அடிப்படை.

 

      முத்துக்குமார் தன்னை எரித்து இந்திய அரசின் தமிழினப் பகையை வெளிச்சப் படுத்தினான். கருணாநிதியின் துரோக அரசியலை ப+சிமெழுகாது இனங்காட்டினான். குறிப்பாக அவன் தந்த இந்த இரு ஒளிகளும் நாம் கலங்கரை விளக்கமாய் கொள்ளத் தக்கவை.

      “இலங்கை அரசு தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்காவிட்டால் திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இங்குள்ள திமுகழக அரசின் சார்பில் இந்தியப் பேரரசை வலியுறுத்தி ஆவன செய்யத் தயங்காது” என 14.02.2010 செய்தித்தாள்களில் கேள்வி – பதில் அறிக்கை தந்திருக்கிறார் கருணாநிதி.

      தமிழர்கள் சிறுபான்மை இனம் என்பதை ஏற்க முடியாது. அவர்களும் இலங்கையர்களே என்று தேர்தலுக்கு முன்பு சொன்னார் ராஜபக்சே. அது குறித்து கருணாநிதி எந்தப் பதிலும் தரவில்லை. இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்று  சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியது. அந்த இனப்படுகொலை நிகழ்ந்து மனிதப் பேரழிவுக்குச் சாட்சியாய் தமிழர்கள் இலட்சக்கணக்கில் முள்வேலிச் சிறை முகாமுள் கிடக்கிறார்கள். சட்டசபைத் தீர்மானத்தின் பார்வையில் திமுகழகம் இராசபட்சேவின் கருத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கவில்லையே ஏன்?

      அதிகாரப் பகிர்வு என்றால் யாருக்கு? அங்கே தமிழர்கள் யாருமில்லை இலங்கையர் மட்டும் எனில் யாருக்கு அந்தப் பகிர்வு?

      வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என அனைத்துப் போராளிக் குழுக்களும் ஒன்றிணைந்து திம்புவில் அறுதியிட்டு உரைத்தார்களே? அந்த தமிழீழ மக்களின் நிலை குறித்து கருணாநிதி என்ன சொல்கிறார்?

      தமிழர்கள் ஓர் இனம் என்றோ, அங்கே தமிழ்ப்பகுதி உண்டு என்றோ கூட ஏற்றுக் கொள்ள வழியில்லாத ஒற்றையாட்சித் தன்மை கொண்ட இலங்கை அரசமைப்பு குறித்து கருணாநிதியின் பார்வை என்ன? அதன் மீது குற்றாய்வு செய்யவாவது திராணி உண்டா?

      தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் மக்கள் பிரதிநிதிகளைத் தாண்டி தமிழீழத் தனியரசு என்பது இன்று அம்மக்கள் உயிர்வாழ்வுக்கே அடிப்படைத் தேவை என்பதை திமுகழகம் இப்போதாவது ஏற்றுக் கொள்கிறதா?

      இந்தக் கேள்விகளுக்கு விடை வேண்டும். வேடிக்கை பார்க்காது – வேறு என்ன செய்யுமாம் கழகம்? - இந்திய அரசை வலியுறுத்தும்… முத்துக்குமார் சொன்தைப் போல் புறங்கையை ரொம்பவே நக்கியிருப்பது மட்டுமல்ல, அதனால் அதன் ரேகைகளே அழிந்திருக்கும் போல.

      முத்துக்குமார் கருணாநிதியை ஒரு குறியீடாகவே காட்டியிருக்கிறார்.    நேர்மையி லிருந்து நழுவி துரோக அரசியல் செய்யும் அனைவர் குறித்தும் நமக்கு எச்சரிக்கை தந்துள்ளதாகக் கொள்ளவேண்டும்.

      தாயை இழந்தவன்; உயிருக்கு உயிரான தம்பியை சாலை விபத்தில் பலி கொடுத்தவன்; இளமையில் வறுமை சுமந்தவன்; குடும்பப் பொறுப்பை தலைமேற்கொண்டவன்; ஏழ்மையே வாழ்வாய்ப் பெற்றவன்; பணம் ஈட்ட உழைப்பு, உழைப்பு என்று தன்னையே உருக்கிக் கொண்டவன்! முத்துக்குமார் அன்றாடங் காய்ச்சி;!

      இந்த நிலையிலும் அவர் தமிழ்;ச் சமூகத்திற்காகவே நின்றான். கொண்ட கொள்கையின் வடிவமானான். படைப்பைப் பார்த்தாலும் படித்தாலும் அதில் வருகிறவர்கள் படுகிற வலியை இவன் உணர்ந்தான். ஈழத்தில் கொல்லப்படும் நம் இனம் கண்டு கண்ணீர் வடித்தான், வதைபட்டான். மக்களின் வலியோடு தன்னைக் கரைத்துக் கொள்பவனால் மட்டும்தான் புரட்சியாளனாய்ப் பரிணமிக்க முடியும். முத்துக்குமார் அந்த இயல்பினன் ஆதலால் அவனால் முடிந்தது.

      கவிஞர், இணை இயக்குநர் என்கிற அடையாளங்களும் அவனுக்கு உள்ளன. சினிமா மீது அவனுக்கு வந்த ஆர்வம் வாடிக்கையான இளைஞர்கள் கொண்டிருப்பது அல்ல. இலட்சிய இளைஞனுக்குரியது! உலகப் புகழத்; திரைப்படங்கள், அவற்றின் இயக்குநர்களைத் தேடிப் படிக்கிறான். நிழல் திருநாவுக்கரசைச் சந்தித்துப் பேசுகிறான். தான் கட்டவேண்டிய கடன் தொகையைக் கட்டாது, சினிமா பற்றிய புத்தகம் வாங்கப் பயன்படுத்துகிறான்; பனைமரம் பற்றிக் குறும்படம் எடுக்க முயற்சி மேற்கொள்கிறான். இவை அனைத்திலும் அவனுக்கு ஒரே நோக்கம் - தமிழ் சினிமாவை மக்கள் வாழ்வோடு பிணைப்பதே. இப்படி மக்களுக்காக அயர்வின்றி உழைத்தவன் முத்துக்குமார்!

      தமிழ்த்தேசம் சாதி ஒழிந்து தேசிய விடுதலை பெற வேண்டும் என்பதே முத்துக்குமார் அரசியல். ஆனால் அவனின் இறுதி உயிலில் அதனைப் படம் பிடிக்கவில்லை. இன்று தமிழீழச் சூழலினால் தமிழகத்தின் எழுச்சி எத்தகையது? அது தந்த மாற்றங்கள் எவ்வகையில் உதவின? சட்டக்கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் பங்கு என்ன? இனி தமிழக மக்கள் செய்ய வேண்டியது என்ன? இந்தக் கேள்விகளின் விடையாகவே கடிதம் அமைந்துள்ளது. உலகத்திடம் நாம் எதிர்பார்ப்பது, இந்திய அரசைப் பணிய வைப்பது, தமிழக அரசின் நிலை காட்டுவது என்கிற நோக்கத்தைக் கொண்டிருக்கிறது அது. மக்களின் நிலையறிந்து அரசியலை முன்னெடுக்கிற தெளிவு முத்துக்குமாரிடம் வெளிப்படுகிறது.

புலிகள் ஆதரவு முழங்குகிற கட்சித் தலைவர்கள் சிலரைக் கூட நம்பி அவன் இறுதி உயிலில் ஒரு வரி இல்லை. தமிழக மக்களை மட்டுமே நம்புகிறான். அவர்களைச் சார்ந்து மட்டுமே அரசியலை முன்வைக்கிறான். முத்துக்குமார் வீரன் என்பதால் மட்டுமே நாம் போற்றவில்லை; முதிர்ந்த அரசியலாளன்!; நேர்மையிலிருந்து இம்மி விலகியும் அரசியல் செய்வோரை இளைஞர்கள வெறுத்தொதுக்க வேண்டும். புரட்சிகரப் பாதையை அரசியல் வழியாய் ஏற்க வேண்டும் என்பதே அந்த நெருப்புக்கு நாம் செய்கிற மெய்யான அஞ்சலி!

      தமிழ்த் தேசிய இயக்கங்கள், அறமறவன் திலீபன் மன்றம் போன்றவற்றின் தொடர்ச் சியான அரசியல் பணிகள் முத்துக்குமாரை உருவாக்கியவற்றில் முக்கியப் பங்கு வகிக் கின்றன. நம்மைப் போன்ற இயக்கங்களும் மன்றங்களும் கூட தொடர்ந்து கொள்கை காத்து இயங்குவது, உண்மை மனிதர்களுள் அதிர்வை ஏற்படுத்துகிறது. அது முத்துக் குமாராகவும் உருவெடுக்கிறது என்றால் ஆடம்பரமின்றி சோர்வின்றி நம்பிக்கையோடு  நாம் இயங்க வேண்டும் என்பதற்கு இது சிறந்த பாடம். அதேபோது புரட்சிகரத் தமிழ்த் தேசியம்; வெகுமக்கள் இயக்கமாக உருவெடுத்தால் ஆயிரமாயிரம் முத்துக்குமார்களைப் பெற முடியும்.

      முத்துக்குமாரின் இழப்புக்குக் கணக்குத் தீர்க்க இந்தியத்தை வேரறுக்க வேண்டும். அதற்குத் தமிழ்த் தேசியமே உரிய ஒற்றை ஆயுதம். தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுக் கொண்டு உணர்வோடு செயல்படுவது மட்டும் நம் நோக்கம் ஈடேறப் போதாது. ஒடுக்குண்ட உழைக்கும் மக்களும் தமிழ்த் தேசியமும் இரு துருவங்களாய் விலகி நிற்கக் காண்கிறோம். தமிழ்த் தேசியம் என்கிற உயரிய தீர்வு கண்ணில் தெரிந்தாலும், அது நோக்கித் தொடர் பயணம் செய்தாலும், அது தொலைவுக்கே சென்று கொண்டிருப்பதாய் தோன்றலாம். ஈழப் போராட்டத்தின் மூலம் கண்ட மோசமான விளைவினால் கூட மக்களின்; இந்தியம் குறித்த மயக்கத்தில் பெரிய மாற்றம் வந்துவிடவில்லை. அதன் காரணம் கண்டறிய வேண்டும். நம் பாதை குறித்த ஆய்வு தேவைப்படுகிற காலம் இது.

      நாம் மக்களோடு அமர்ந்து பேச வேண்டும்;; வாழ வேண்டும்; கலந்து கரைய வேண்டும்; அவர்கள் நிலைக்கு இறங்கி நம் இடத்திற்கு ஏற்ற வேண்டும்; நாம் அம்மக்களுக்கான எந்த ஈகத்திற்கும் தயார் என்பதை அவர்கள் கண்முன் நிறுவ வேண்டும்! இதற்குப் பெரும் பொறுமை தேவை. ஆனால் வேகச் செயல்பாடும் தேவை. மக்கள் இருக்கும் இடம் நோக்கிச் செல்வோம். பொறுமையோடு, தெளிவோடு, நெஞ்சுரத்தோடு, அங்குலம் அங்குலமாகக் காலடி வைத்துப் பயணம் தொடர்வோம். தமிழ்த் தேசியச் சமூகநீதிக் குடியரசு படைப்போம்! தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் இவை நோக்கித்தான்!

      முத்துக்குமார்: புகழ் வெறுத்தான்; எளிமை உடுத்தினான் ; சமரசம் மிதித்தான்; நெஞ்சில் எரிமலை சுமந்தான்; வறுமை கொண்டாடினான்; நேர்மை பிடித்தான்! இளைஞர்கள் இந்தப் பாட்டாளிக் குணத்தை வார்த்துக் கொண்டு பயணம் தொடர்வோம்.

முத்துக்குமாருக்குச் செவ்வணக்கம்!

Pin It