இந்த உலகில் (பூமியில்) பெரும்பான்மையாக வாழும் உழைக்கும் மக்களின் நிலை என்ன?  உழைக்கும் மக்களுக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கிறதா? உழைப்பாளிகளுக்கு உரிய ஊதியம் கிடைக்கிறதா? உழைப்பாளிகள் மதிக்கப்படுகிறார்களா? இந்த உலகம் இன்று நாம் காணும் நவீனத்துவம், நாம் அனைவரும் நமது  உள்ளங்கையில் உலகத்தை வைத்துள்ளதற்குக் காரணம். உழைப்பு, உழைப்பாளிகள். அந்த உழைப்பாளிகளின் நிலை என்ன? சொல்லிக்கொள்ளும் படியான நிலை உள்ளதா? இரவு, பகல் பாராமல் காலமெல்லாம் உழைக்கும் மக்கள் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும்கூட இவர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் நிகழ்வதேயில்லை. ஆனால் என்றாவது ஒருநாளில் நம் வாழ்க்கையிலும் மாற்றம் வரும். நாமும் ஏற்றம் பெறுவோம் என்ற நம்பிக்கையில் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்த அப்பாவி மக்கள் தங்களுக்கு வேலை கொடுக்கும் ஒவ்வொரு முதலாளிகளும், நல்லவர்கள், தங்களுக்கு வாழ்வு அளிப்பவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள்தான் இவர்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருப்பவர்கள் என்கின்ற உண்மை இந்த மக்களுக்கு புரிவதே இல்லை. (சிறு, குறுதொழில் செய்யும் நமது மக்களில் ஒருவரான முதலாளிகள் அல்ல) வேலை கொடுப்பவர்கள் பெரிய மனிதர்கள், இவர்கள் எல்லோரும் கொடுத்தே பழக்கப்பட்டவர்கள், கடவுளுக்கு நிகரானவர்கள், நல்லவர்களாகத்தான் இருப்பார்கள் என்பது  இந்த அப்பாவி மக்களின் நம்பிக்கை. இதுபோன்ற முதலாளிகள் மட்டுமல்ல, இவர்கள் நம்பும் கடவுளும், மோசடி கும்பல்களின், சுரண்டல்வாதிகளின் கைக்கூலி போலத்தான் என்பதும், இதுபோன்ற கும்பல்களால் அவர்களின் நலன்களுக்காக அவர்களால்  படைக்கப் பட்டதுதான் இந்த கடவுள் என்பதும்  இந்த மக்களுக்கு புரிவதேயில்லை.

இந்த நாட்டில் உள்ள சட்டத்தை பின்பற்றாதவர்களை, மீறுபவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறையும், தண்டிக்க நீதித்துறையும், சட்டத்தின் பெயரால் நடைபெறும் ஆட்சியும், ஆட்சியாளர்களும், இருக்கின்றபோது நம்போன்ற உழைக்கும், அப்பாவி பொதுமக்கள் எவரேனும் பாதிக்கப்பட்டால்,  இவைகளும், இவர்களும் நம்மை, நம்போன்ற  மக்களைக் காப்பாற்றுவார்கள் என்கின்ற பெரும் நம்பிக்கையில் இந்த மக்கள் உள்ளார்கள். ஆனால் இவர்களின் இந்த ஏழ்மை, வறுமை என்றென்றும் வேலைகொடுக்கும் முத(லாளி)லைகளையும், ஆட்சியாளர்களையும் நம்பிக் கையேந்தும் நிலை மாறாமல், இவை ஆண்டாண்டு காலமாய் தொடர்வதற்கு இவர்கள் யாரை பெரும் நம்பிக்கையோடு, நம்பிக் காத்திருக்கிறார்களோ அந்த உத்தமர்கள்தான் காரணம் என்பதை உணராதவர்கள் இந்த பாவப்பட்ட அப்பாவி மக்கள்.  இந்த மக்களின் ‘’வறுமை,’’ மற்றவைகளைப்பற்றிச் சிந்திக்க விடாமல் செய்து விடுகிறது. காரணம், இருக்க இடம் இல்லாவிட்டாலும் உடுத்தக் கந்தலும், உயிர்வாழ உணவென்று கஞ்சியாவது வேண்டுமல்லவா? அதற்காகவாவது உழைக்க வேண்டும், அதற்கொரு வேலை வேண்டும் அந்த வேலையை கொடுப்பவர்களை கடவுளாக நினைக்கும் பரந்த உள்ளம் படைத்த சோற்றுக்கே வழியில்லாத இந்த அப்பாவி மக்கள். இவர்கள் எங்கே மற்றதைப்பற்றி யோசிக்க? இதுபோன்ற நிலையே காலமெல்லாம் நீடிக்க வேண்டுமென்பதும், இதை இன்று வரை நீடிக்க வைத்திருப்பதும்தான் இந்த மோசடிக் கும்பல், சுரண்டல் வாதிகளான, அடுத்தவன் உழைப்பில் வயிறு வளர்க்கும் இந்த யோக்கியர்களின் வெற்றி.

மக்களின் உழைப்பைச் சுரண்டும் சுயநலவாதிகளும், அவர்களுக்கு உதவி செய்வது அல்லது அந்தச் சுரண்டலுக்கு, சுரண்டல்வாதிகளுக்கு துணைபோவது. இது ஆட்சியில், அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளின் நிலை. இதற்கிடையில் வாழும் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் பொதுவாக நமது மக்களின் அறியாமை, ஆற்றாமை, போன்றவைகளால் அவர்கள் அடிமையாய், அடியாளாய் ஒற்றுமையின்றி தனித்தனியாய் பிரிந்து அனாதைகளாய் உள்ள நிலையை உணர வேண்டும் இந்த நிலை ஏன் வந்தது? யார் காரணம்? இந்த நிலை மாறுமா? என்றென்றும் இதே நிலை தொடருமா? தொடரும் எனில் ஏன்? எதனால்? யாரால்? இந்த நிலை மாறுவதற்கு என்ன செய்யவேண்டும் யார் செய்வது? என்பதுபோன்ற சிந்தனையற்று உள்ள பெரும்பான்மையான மக்கள் அவர்களின் உண்மை நிலையை உணர்ந்துவிட்டால், போராட வீதிக்கு வந்துவிடுவார்கள்.

அதற்காக அறிவார்ந்தவர்கள், மக்களின் நலனில் உண்மையான அக்கறையுள்ள சமூக ஆர்வலர்கள், போராளிகள், நல்லமைப்புகள் போராடுகின்றன. இனி, அதை இன்னும் வேகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நெருக்கடியில் இன்றையச் சூழ்நிலை உள்ளது. பொதுவாகவே அடுத்தவர்களின் நலனிலும் சிறிய அளவிற்காவது அக்கறை கொள்ளும் சிந்தனையுள்ள மனிதர்கள் என்கின்ற நிலையிலிருந்து, இந்த மக்களை மானுடப்பற்று முற்றிலும் இல்லாத  மனிதர்களாய், செயற்கைத்தனம் கொண்ட, வாழ்க்கையில் தவறியும், அறம் அற்று வாழும் வாழ்க்கை முறையை கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றன இன்றைய முதலாளிகளின், வியாபாரிகளின் உலகம்.

மக்கள் தங்களுக்குத் தெரிந்த, அல்லது கிடைத்ததை வைத்துக்கொண்டு தன் விருப்பப்படி, ஆசைப்படி ஏதோ ஒரு வாழ்க்கை முறையில் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் உலகில் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை, அந்த இடத்தை விட்டு அந்த வாழ்க்கையை விட்டு துரத்துகிறது இந்த வியாபாரிகளின் கூட்டம். மக்கள் வாழும், வாழ்க்கைக்கு ஆதாரமான நிலம், கடல், ஆறு, காடு, மலைகள் என இவைகளில் உள்ள இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க வளர்ச்சி என்கின்ற பெயரில் அவர்கள் வாழ நம் வாழ்க்கையை  அழிக்கின்ற வேலையை உலகம் முழுக்க செய்து கொண்டிருக்கிறது இந்த வியாபாரக் கும்பல்கள்.

இதில், நம்மை பெரிதும் வருத்தம் அடையும் செயல் இதுபோன்ற செயல்களிலிருந்து நம்மைக் காக்கவேண்டிய, ஆட்சி அதிகாரத்தில் ஆட்சியாளர்களாய் உள்ள அரசியல்வாதிகளே அதற்குத் துணைபோவது மட்டுமின்றி, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாய் உள்ளது, அவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு, சுரண்டலுக்கு உறுதுணையாய் நின்று எதிர்க்கும், மக்களை கொன்றுக் குவிக்கவும் தயாராக உள்ளார்கள் என்றால் இந்த அரசும், அதிகாரத்தில்  உள்ளவர்களும் மக்களுக்கானவர்களா இல்லை, இல்லவே இல்லை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் உலகில் உள்ள இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க விரும்புகிறவர்கள், அது எந்த நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் சரி, அதை எடுக்கும்போது, அதாவது கொள்ளையடிக்க நினைக்கும்போது (திருட நினைக்கும்போது,) எந்தவிதமானதொரு எதிர்ப்பும், தடையும் இருக்கக்கூடாதென்று நினைக்கிறார்கள். அதற்கேற்றவாறுதான் ஆட்சியாளர்கள் திட்டங்களையும், சட்டங்களையும் தீட்டுகிறார்கள். அதையும் மீறி மக்கள் கேள்வி கேட்கும்போது அல்லது எதிர்க்கும்போது இவர்களால் அந்த மக்களை சகித்துக்கொள்ள முடியாமல், பொறுத்துக்கொள்ள முடியாமல், வளர்ச்சிக்கு எதிரானவர்கள், சமூக விரோதிகள், தேசவிரோதிகள், தீவிரவாதிகள் என அப்பாவி மக்களைப் பற்றி வசைப்பாடுகிறார்கள்.

பொதுவாக இதுபோன்ற கொள்ளைக் கும்பல்களின் ஆதரவானவர்கள், கட்சியில் சில பதவியில் உள்ள எடுப்புகள் சிலபேர் செய்யும் அழிச்சாட்டியத்தைப் பார்த்தால் நாமே பொறுமையின் எல்லைக்கே சென்றுவிடுவோம் அவ்வளவு தரம் தாழ்ந்து இருக்கும் அந்த உத்தமர்களின், தேசாபிமானிகளின் செயல்பாடுகள். இந்த திருட்டுக் கூட்டத்தார்களின் எண்ணமே மக்கள் என்று எவருமே இருக்கக்கூடாது. மீறி இருந்தாலும், இவர்கள் செய்யும் செயலுக்கு எந்தவிதமானதொரு எதிர்ப்பும் தெரிவிக்கக்கூடாது. இல்லையேல் அந்த மக்கள் அனைவரும் கைகட்டி, தை அந்த அரசாங்கத்தை உருவாக்கும் தகுதி, சக்திப் படைத்த சாதாரண வாக்காளர்களான பொதுமக்கள் உணராவிட்டால் நம்மை காக்க எவராலும் முடியாது.

காரணம் வானளாவிய அதிகாரத்தை ஆட்சியாளர்களின் கையில் கொடுத்துவிட்டு, நாம் அவர்களிடம் பிச்சை கேட்பதுபோல் கையேந்தி நிற்கின்றோம். அவர்கள் தான்தோன்றித்தனமாக நினைத்ததை, மக்களுக்கு எதிரானவற்றை நிறைவேற்ற  இந்த மக்களையே எதிரிகள் போல கொன்றுக் குவித்துவிட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் எதிர்ப்பது, எதிர்க்க வேண்டியது தனிப்பட்ட எந்த முத(லை)லாளிகளையும் அல்ல. காரணம், நமது ஆட்சியாளர்களின் அனுமதியில்லாமல் இவர்களால் எதையும் செய்ய முடியாது. அதற்குத்தான் நமது ஆட்சியாளர்கள் முதலாளிகளின் நிறுவனத்தில் முக்கிய தொழிலாளிகளைப்போல் நமது ஆட்சியாளர்களே அப்பணியை திறம்படச் செய்கிறார்கள், செய்து முடித்துவிடுகிறார்கள்.

ஆகவே நாம் விழிப்போடு இருக்கவேண்டியது எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் நல்லாட்சி தருகிறோம், வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிறோம், மணலைக் கயிறாகத் திரிக்கிறோம், வானவில்லை வில்லாகச் செய்வோம், வளர்ச்சி, முன்னேற்றம் என்றெல்லாம் சொல்லி அவர்கள் செய்யும் தகிடுதத்தங்களை இனியும் நம்பி ஏமாந்தால் நம் கதி அதோகதிதான். நாம் இவர்களின் கோரமுகத்தை இனியும் கவனிக்கத் தவறினால் நம்மை நாமே படுகுழியில் புதைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டதைப்போல் ஆகும். நமது ஒரு ‘‘ஓட்டில்’’ என்ன பெரிய மாற்றம் வந்துவிடப்போகிறது என்று, ஒற்றுமையற்ற இந்த மக்கள் நினைத்து வாக்களி(த்த)ப்பதின் விளைவுதான்! நம்மோட இந்த நிலைக்குக் காரணம்  என்பதை உணர்ந்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஒற்றுமையாய் இருக்க வேண்டும். தங்களின் உரிமை என்ன? அதிகாரம் என்ன? என்பதை மக்கள் அனைவரும் உணர்ந்துவிட்டால்! அன்றே ஒழியும் அடிமைமுறை அது அவ்வளவு எளிதில் நடந்துவிடாது நடக்கவும் விடமாட்டார்கள், இங்கே உள்ள அடுத்தவனின் உழைப்பில் வயிறு வளர்க்கும் கூட்டத்தார். ஆனாலும் மக்கள் அனைவரும், அனைத்திலும் ஒன்றிணைந்து, ஒன்றாகப் போராடினால் அனைத்தும் மக்களுக்கானதாக மாறும். அதற்கு மக்கள் அனைவரும் அனைத்திலும் வேற்றுமை களைந்து ஒன்றிணைவோம்! இந்த பூமி நமக்கானது. நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிர்களுக்கானது. இது நமது மண், இங்கே உள்ள காடு, மலை, கடல், ஆறுகள் இயற்கை வளங்கள் என அனைத்தும் நம்முடையது. இவைகளை யாருக்காகவும், எதற்காகவும் எந்தச் சூழ்நிலையிலும் இழக்க மாட்டோம், என்கின்ற மன உறுதியோடுப் போராடுவோம் வெற்றி பெறும்வரை. மக்களின் ஒற்றுமையே தன்னிகரில்லாத பலம். அதை நாம் பெற்றுவிட்டால் இந்த பூமி உழைக்கும் மக்களுடையதே. அதற்கு உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றாய் அணிதிரள்வோம், போராடுவோம். போராடுவோம்.

வாய்பொத்தி அமைதியாக, அடிமையாக இருக்க வேண்டும். அதாவது மக்கள் அனைவரும் இவர்களின் காலுக்கு அடியில் மிதிபடும் புழுக்களைப்போல இருக்க வேண்டுமென்பது இவர்களின் பெருங்கனவு. இங்கே நாம் கவனிக்க வேண்டியது நமது ஆட்சியாளர்களைப் பற்றித்தான். காரணம், இவர்கள் யாருக்கானவர்கள்? உண்மையிலேயே மக்களுக்காகத்தான் இவர்கள் செயல்படுகிறார்களா? இவர்களின் எந்தச் செயலும் நமக்கு அந்த நம்பிக்கையை அளிக்க மறுக்கிறது. இன்றையச் சூழலில் இங்கே அரசாங்கம் என்பதெல்லாம் மக்களுக்கானதாக இல்லை. 

Pin It