கடந்த அக்டோபர் 25ம்தேதி இந்திய விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் குழு, தங்களின் ’கிஸான் ஸ்வராஜ் யாத்ரா’(www.kisanswaraj.in)-எனும் தொடர் பயணத்தின் அங்க மாக தமிழகத்திற்கு வருகை தந்தனர். 4 நாட்கள் தமிழகப் பயணத்தை நிறைவு செய்து ஆந்திரா வழியாகத் தில்லிக்கு வருகிற டிசம்பர் 11-அன்று திரும்புகின்றனர். இந்தியாவின் முது கெலும்பான விவசாயம் இன்று மரபணு மாற்றப்பயிர்கள், விவசாய விளைநிலங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆக்கப்படுதல், என பல தொடர் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி  வருகிறது. இதன் தாக்கங்களை விளக்கும் விதமாக, சமூக அக்கறையுடன் பயணித்து வரும் விவசாய நண்பர்களை பூவுலகின் நண்பர்கள் அங்கம் வகிக்கும் பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு தமிழகத் தலைநகரில் வரவேற்று, வாழ்த்தி கருத்துப் பகிர்வு நடத்தியது.

இந்த விழாவிற்கு தமிழக விவசாயச் சங்க தலைவர் தோழர் டாக்டர். துரை மாணிக்கம் தலைமை ஏற்க டாக்டர்.ஜி. நம்மாழ்வார் விவசாயிகளுக்கான அச்சுறுத்தல்களும் பெருகும் சவால்களும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். கல்வியாளர் டாக்டர்.வசந்தி தேவி, சூழலியலாளர் டாக்டர். சுல்தான் இஸ்மாயில், பேரா.மரு.செ. நெ.தெய்வநாயகம், திரைப்பட நடிகை திருமதி.ரேவதி மற்றும் இயற்கை வேளாண் ஆர்வலர் ’மரம்’ பொன்னுசாமி கலந்து கருத்துரை ஆற்றினார்கள். ஹரியானா, பஞ்சாப், ஆந்திரா, சட்டீஸ்கர், ஒரிஸா, கர்நாடாகாவைச் சேர்ந்த விவசாயிகள் தத்தம் மாநிலத்தில் சந்திக்கும் சவால்களையும், பன்னாட்டு மயமாக்குவதனால் ஒட்டுமொத்த விவசாய குடும்பங்களும், மாநிலத்தின் மண்நலமும், மக்களின் உடல் நலமும் கேடுற்று வருவதை வருத்தமுடன் கூறியது, நாம் எங்கே செல்கிறோம் என்று பதைபதைக்க வைத்தது.

விவசாயிகளின் விடுதலை பயணம் - அரசுக்கு முன் வைக்கும் கோரிக்கைகள்

1. விதை, நிலம் மற்றும் தண்ணீர் போன்ற வேளாண்மை வளங்களை வணிக நிறுவனங்களின் ஆதாயத்திற்கான சரக்குப் பொருட்களாக நடத்துவதை நிறுத்துங்கள். மாறாக, நாட்டு மக்களின் அடிப்படை வாழ்வாதரங்களாக அவற்றை பாதுகாத்திடுங்கள். ஏனெனில் இது அவர்களின் உரிமை சம்பந்தப்பட்ட விஷயம். வேளாண்மைச் சமூகத்திற்கு உடைமையான விதை மற்றும் அது பற்றிய அறிவு போன்ற வேளாண்மை வளங்கள் மீதாக எந்த காப்புரிமையும் அனுமதிக் கப்படக்கூடாது.

2. மழைவளம் கொண்ட நிலங்களையும் பண்படுத்தப்பட்ட நிலங்களையும்வேளாண்மையல்லாத,உணவல்லாத தேவைகளுக்குப் பயன்படுத்தும் மாறாட்டத்தைத் தடுத்து நிறுத்துங்கள்.

3. பல்லுயிர் வளம், இயற்கை வேளாண்மையின் தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றைச் செயல்படுத்தும், ஆதரவளிக்கும் நீடித்த வேளாண்மைக்கான அமைப்புகளான விநிழிஸிணிநிஷி உள்ளிட்ட அது போன்ற அனைத்து நிகழ்ச்சி நிரலுக்கும் ஊக்கத்தொகையினை உயர்த்தி வழங்குங்கள்.

4. இரசாயன பூச்சிக்கொல்லிகள், செயற்கை உரங்கள் உள்ளிட்ட நஞ்சூட்டப்பட்ட மற்றும் நிலையில்லாத அனைத்து தொழில்நுட்பங்களையும் வேறுபடுத்திப்பார்ப்பதுடன், மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்திய வேளாண்மைக்குள் நுழை வதைத் தடுத்து நிறுத்துங்கள்.

5.எல்லாபயிர்களுக்கும் சீரான பயன்தருகிற விலையை உறுதிப் படுத்துங்கள். பொது விநயோகமுறை. உள்ளிட்ட எல்லா உணவுப் பாதுகாப்பு முறைகளையும்  எல்லா தானியங்கள் மற்றும் எண்ணெய்விதைகளை உள்ளடக்கும் முழுதளாவிய மற்றும் வட்டார உற்பத்தியின் பன்முகப்படுத்தும் அமைப்புகள், தரகுப்படுத்துதல், சேமிப்பு, விநியோக முறைகளுக்குள் மறுசீரமைப்பு செய்யுங்கள். இவை எல்லாமே  பலவருடங்களாக இந்திய கிராமங்களை நலிந்து போகச் செய்த தொடர்ந்த விவசாயத் தொழில் மீது நிலவிவரும் தாழ்வான மதிப்பீட்டுப் பிரச்சனையை முன்வைக்கவேண்டும்

6. தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பெண்கள் தலைமையிலான விளிம்பு நிலை மற்றும் சிறிய நிலம் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து வேளாண்மை குடும்பங் களுக்கும் குறைந்தபட்ச குடும்ப வருமானத்தை உத்திரவாதம் செய்து வழங்கு.

7. எல்லா விவசாயப்பணியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பணி ஓய்வுகாலத் தொகை மற்றும் உடல்நலம்/விபத்து/உயிர்க் காப்பீட்டுக்கான மிகவும் தாமத்தப்பட்டுப்போன புரிந்துணர்வு சமூகப் பாதுகாப்பு சட்டமியற்றுதலை ஆணையிடுவதுடன் செயல்படுத்துங்கள்

8. இந்தியாவில் வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் உள்ளடங்கிய அனைத்து மான்சான்டோ மற்றும் இதர விவசாய பன்னாட்டு நிறுவனங்களின் ஒப்பந்தங்களை நீக்குங்கள். விவசாயத்தில் இந்திய - ஐக்கிய நாடுகளின் அறிவுத் தொடக் கத்தை நீட்டிக்காதீர்கள்.

9. எல்லாபங்குதாரர்களையும் இணைத்து  விவசாயிகளுக் கான முழுமையான செயல்பாடுகள் புரிந்துணர்வு மதிப்பை கணிக்கும் வரை விவசாயத்தில் எல்லா சர்வதேச இலவச வியாபார ஒப்பந்தங்களையும் நிறுத்துங்கள்.

10. சிறப்பான பாரம்பரிய அறிவு மற்றும் விரிவாற்றலுடைய அமைப்புகளை அடிப்படையாகக்கொண்டு நிலைத்த விவ சாயத் திற்கு ஊக்கமளித்து  பருவமாறுபாடுக்கான பங்களிப்பை மட்டுப் படுத்துவதுடன் இந்தப் பருவமாறுபாடுகளுக்குத் தகவமைத்துக் கொள்ள விவசாய சமூகத்திற்கு உதவுங்கள்!

11. கிராமப்புறங்களில் விவசாயிகள் நடத்தும் விவசாய பதனஞ்செய்யும் முறைகள், சேமிப்பு மற்றும் விற்பனை செய்தல் போன்றவற்றிற்குத் தேவையான விரிவான வசதிகளை நிறைவுற வளர்த்தெடுத்து, விவசாயிகளின் வருமானங் களை மேம்படுத்தும் ஆக்கப்பூர்வமானதொரு கிராமப் பொருளா தாரத்தைக் கட்டியெழுப்புங்கள்!

Pin It