periyar 288கும்பகோண மாமாங்கம் பார்ப்பனர்கள் புரட்டு என்றும், அவர்களது விளம்பரங்களுக்கும் பெருமைக்கும், லாபத்துக்கும் ஆதாரம் என்றும் நாம் சொன்னோம். இப்போது அது சரியா? இல்லையா? பாருங்கள்.

தோழர்கள் ரங்கசாமி ஐயங்கார் பொருட்காட்சியை திறந்தார். சி. ஆர். சீனிவாசய்யங்கார் சங்கீத மகாநாட்டைத் திறந்தார், விசாலாட்சி பாடினார். முத்தையா பாகவதர் கதை செய்தார். டி.பி. கல்யாணராம சாஸ்திரிகள் வரவேற்பு தலைவர். ராமசாமி அய்யர், டைகர் வரதாச்சாரியார், கணபதி சாஸ்திரி, அலமேலு ஜெயராமய்யர், மற்றும் குமரய்யர், சுப்பைய்யர், ராமசாமி சாஸ்திரி, ரங்காச்சாரி, சுந்தரகனபாடி, சிங்கார கனபாடி, ஆச்சாரிய ஸ்வாமிகள் என்றெல்லாம் பார்ப்பன நபர்களே எங்கும் தோன்றுவதும் ஏதோ இரண்டொரு பார்ப்பனரல்லா முண்டங்கள் இவர்களுக்கு வால் பிடிப்பதுமாய் இருப்பதை அவர்களது (பார்ப்பனர்களது) பத்திரிகைகளிலேயே காணலாம். ஆகவே மாமாங்கம் பார்ப்பனர் சூட்சி என்றும், அவர்களது வாழ்வுக்கே ஏற்பட்டதென்றும் சொல்லுவதில் என்ன பிழை இருக்கிறது. இதை பார்ப்பனரல்லாத சோணகிரிகள் உணர வேண்டாமா?

(குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 19.02.1933)

Pin It