கடந்த 09.04.2011 அன்று வெளியான தினமலர் இதழில் "இஸ்லாமியர்கள் இதயத்தில் இடம் பிடித்தது யார்?' என்ற தலைப்பிட்டு, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவரின் பேட்டி வெளியாகி இருந்தது. அதை நன்றியுடன் மக்கள் ரிப்போர்ட் வாசகர்களுக்குத் தருகிறோம். - ஆசிரியர்

நான்தான் முஸ்லிம்களின் முதல் நண்பன் என்றும், சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்றும் சொல்லிக் கொள்ளும் கருணாநிதியால் நேரடியாக முஸ்லிம்களுக்கு சென்றடையும் திட்டம் ஏதுமில்லை. உலமாக்களுக்கு முதலில் எம்.ஜி.ஆர்., தான் பென்ஷன் வழங்கினார்.

வக்ஃபு போர்டுக்கு கட்டடம் கட்ட எம்.ஜி.ஆர்.தான் நிலம் கொடுத்து உதவினார். ஜெயலலிதா கட்டடம் கட்டிக் கொடுத்தார். முஸ்லிம்களுக்கு ஜீவாதார பிரச்சினையான இட ஒதுக்கீடு குறித்து, 1997ம் ஆண்டு லத்தீப், சட்டசபையில் கருணாநிதியிடம் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டதற்கு, "லத்தீப் பாய்! என்னை குழப்பப் பார்க்கிறீர்கள். முடியாது என்று உங்களுக்கு தெரியாதா' என்று கேட்டவர்தான் கருணாநிதி.

ஜெயலலிதா முதல்வராக இருந் தபோது, 2006ம் ஆண்டு சிறுபான்மை நல பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் புதுப்பிக்கப்பட்டு, அதில் திருத்தம் கொண்டு வர, ஓராண்டு காலம் நிர்ணயம் செய்யப்பட்டது. கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோது, ஆணையத்தை கலைத்துவிட்டு, சிறுபான்மை மக்கள் நல ஆணையம் அமைத்து, வரைமுறைகளை ஏற்படுத்த இரண்டு ஆண்டு அவகாசம் அளித்தார். ஆணையத்தில் முஸ்லிம்கள் யாரும் இடம்பெறவில்லை.

"நாங்கள், 156 ஜாதியில் ஒரு ஜாதியாக இருக்கிறோம். அதிலி ருந்து எங்களை தனியாக பிரித்து விடுங்கள்' என்று கேட்டதற்கு, முடியாது என்று கருணாநிதி சொல்லி விட்டார். முஸ்லிம்களுக் கான இடஒதுக்கீடை 7 சதவீதம் ஆக்க வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தினோம். பயன் ஏதுமில்லை.

தி.மு.க., அரசில், முஸ்லிம்கள் எத்தனை பேர் பயனடைந்துள்ள னர் என்று வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை. தேர்தல் நெருங்கியதும், 5 சதவீத இட ஒதுக்கீடு தருகிறேன் என்கிறார். இது முஸ்லிம்களை ஏமாற்றும் வேலை.

வக்ஃபு போர்டுக்கு சொந்தமான ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அன்னியர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன என்று வக்ஃபு போர்டு தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

திருச்சியில், தி.மு.க., அறிவால யம் கட்டியுள்ள இடத்தில் வாகன நிறுத்தம் உள்ள இடம், வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானது. அதை, அந்த இடத்தை வைத்தி ருந்தவரிடம் எழுதி வாங்கியுள்ளனர்.

ஜெயலலிதா, சிறுபான்மையினரை அடக்கி ஆள நினைக்க வில்லை. ஆனால், தி.மு.க.,வின் சிறுபான்மை பிரிவாக முஸ்லிம் லீக் மாற்றப்பட்டுள்ளது. தி.மு.க., அரசின் மிகப்பெரிய சாதனை, முஸ்லிம்களை தீவிரவாதி என 1996ம் ஆண்டு கருணாநிதி சொன்னதுதான்.

1996ம் ஆண்டு கோவையில் நடந்த கலவரத்தில் 19 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்க ளின் குடும்பங்களுக்கு கருணாநிதி வந்து ஆறுதல் சொல்லவில்லை. 1998ம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு நடந்தது. கருணாநிதி வந்து ஆறுதல் சொல்லியிருந்தால் அனைவரிடமும் சமாதானம் நிலவியிருக்கும்.

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 164 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 12 பேரை தவிர மற்றவர்கள், 14 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் சிறையில் எத்தனை துன்பங்களை அனுபவித்திருப்பர் என்று கருணாநிதிக்கு தெரியாதது இல்லை.

Pin It