நல்லது தான்

---------------------

வறுமையை விரட்டுவோம் என

ஜவஹர்லால் நேரு சொன்னார்.

வறுமையை விரட்டுவோம் என

இந்திரா காந்தி சொன்னார்.

வறுமையை விரட்டுவோம் என

ராஜீவ் காந்தி சொன்னார்.

வறுமையை விரட்டுவோம் என

நரசிம்மராவ் சொன்னார்.

வறுமையை விரட்டுவோம் என

இப்போது மன்மோகன் சிங் சொல்கிறார்.

நாட்டில் இருந்து

வறுமையையோ, காங்கிரசையோ

விரட்டினால் நல்லது தான்.

 

---------------------------

* பிச்சைக்காரர்களைப் போலிருக்கிறார்கள்

பணக்காரர்கள்.

எப்போதும்

இல்லையென்றே கூறுகிறார்கள்.

 

* குண்டோதரன் கை வைத்த

வைகையில்

தற்போது கால் கூட

நனைக்க முடியவில்லை.

 

* முக்கண் இருந்தும்

விட்டுவிட்டானே

கருவறை சேட்டையை.

 

*வீதிகளில்

வன்முறை தாண்டவமாட

வீடுகளில்

மானும்,மயிலும் ஆட

- ப.கவிதா குமார்

 

Pin It