தூக்கத்தில் நடக்கும் பழக்கம் ஒருவித மனநோயின் வெளிப்பாடாக வருகிறது. இது தூக்கத்தில் தோன்றும் கனவு நிலையில் சாத்தியப்படுகிறது. எப்படி கனவு என்பது நம் ஆழ்மனதில் அடக்கிவைக்கப்பட்டிருக்கும் நிறைவேறா ஆசைகளின் வடிகாலாக அமைகின்றதோ, அந்த மாதிரியே ஆழ்மனதில் நீண்ட காலமாக பதிந்திருக்கும் கசப்பான அனுபவங்கள், எண்ணங்கள், ஆசைகள், இச்சைகள், ஆவேச உணர்ச்சிகள் போன்றவற்றை நிறைவேற்றீக்கொள்ளும் முயற்சிதான் ‘துயில் நடை’. தூக்கத்தில் கனவுக்கு அடுத்த கட்டம் துயில் நடை. தூக்கத்தில் நடப்பதற்கும் அந்தக் கணத்தில் அவர் காணும் கனவுக்கும் தொடர்புண்டு. கனவில் தோன்றும் உணர்வுகளுக்கு ஏற்ப அவர் அசைவு கொடுக்கிறார். புரிந்துக்கொள்ள முடியாத சில வார்த்தைகளையோ, வாக்கியங்களையோ சொல்வார், எழுந்து நடப்பார், தண்ணீர் குடிப்பார், கதவைத் தட்டுவார். எல்லாம் ஓரிரு நிமிடங்கள்தான். அதற்குள் அவர் சுய உணர்வுக்கு வந்துவிடுவார். ஆனால் நடந்தது, கதவைத் தட்டியது எல்லாமே அவருக்கு மறந்துவிடும் கனவு மாதிரி.

Pin It