1995ல் நடைபெற்றது அந்த விபத்து.ஒரு பெரிய லாரிவிபத்தில் பெங் ஷுலினின் உடல் இரண்டு துண்டுகளாகிப் போனது. ஆனால் அந்த மனிதர் உயிர்பிழைத்து டாக்டர்களையே அதிசயப்படுத்தினார். விந்தை நிகழ்வு இத்துடன் நின்றுபோகவில்லை. அந்த “அரை” மனிதர் இப்போது நடக்கத் தொடங்கிவிட்டார்!
20 டாக்டர்கள் தங்களுடைய சலிப்பறியா உழைப்பைக் கொடுத்து பெங் ஷுலினின் உயிரைக் காப்பாற்றினார்கள்.
வெட்டுப்பட்ட கீழுடலை காப்பாற்ற முடியாமல் போனது. பெங் ஷுலினுக்கு மிஞ்சிய உயரம் வெறும் 78 செண்டிமீட்டர்கள்தான். துண்டிக்கப்பாட்ட உடல்பகுதியை மூடுவதற்காக தலைப்பகுதியில் இருந்து தோல் வெட்டி எடுக்கப்பட்டது.
ஆண்டுக்கணக்கில் படுக்கையில் இருந்துவிட்டார் பெங் ஷுலின். ஆனால் சீன டாக்டர்கள் இன்னும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். பெங் ஷுலினுக்கு சாதாரண வாழ்க்கையை கொடுத்துவிட முடியும் என்கிற நம்பிக்கைதான் அது.
கைகளுக்குப் பயிற்சியளித்து வலிமையேற்றிக் கொண்டார் பெங். இப்போது அவரால் முகத்தைக் கழுவிக்கொள்ளவும், பல்துலக்கவும் முடியும்.
பெய்ஜிங்கில் உள்ள சீன புனர்வாழ்வு ஆய்வு மைய மருத்துவர்கள் பெங்கின் முயற்சியால் உற்சாகமடைந்திருக்கிறார்கள். அவரை மீண்டும் நடக்க வைக்க இப்போது முயற்சிகள் தொடங்கியுள்ளன.
முட்டையின் ஓடு போன்ற ஒரு அமைப்பை டாக்டர்கள் உருவாக்கியிருக்கின்றனர். இந்த அமைப்பு அவருடைய உடலை தாங்கிப்பிடித்துக் கொள்கிறது. கிண்ணப்பகுதியில் அமைந்த செயற்கைக் கால்களின் உதவியால் மருத்துவமனையின் உட்புறம் தன்னுடைய முதல் சில அடிகளை பெங் எடுத்து வைத்துவிட்டார்.
தகவல்: மு.குருமூர்த்தி
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- கருவறைத் தீண்டாமையை உறுதிப்படுத்தும் நீதிமன்றத் தீர்ப்புகள்
- தமிழ்வழிப் பள்ளிகள் கூட்டமைப்பின் நிலையும் வேண்டுகையும்…
- மீனவர்களின் இடத்தை அத்துமீறிப் பறித்துக் கொண்டு மீனவர்களையே அத்துமீறுகிறார்கள் என்பது ஞாயமா?
- விடுதலை - திரைப்படத் திறனாய்வு
- மலையாள கப்பக்கிழங்கே
- தோழர். ஆர். கே. ஷண்முகம்
- தமிழ்நாடு மே 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- புதிய இட ஒதுக்கீட்டுக் கொள்கை நியாயத்தின் பாற்பட்டதா?
- ஜனநாயகத்தின் சவக்குழியில் நடப்பட்ட செங்கோல்
- தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் வ.உ.சி. அவர்களின் தொல்காப்பியப் பதிப்புகள்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தகவல் - பொது