தேவையான பொருட்கள்:

பிரியாணி அரிசி - 250 கிராம்
முட்டை - 6
குடை மிளகாய் - 2
கோஸ் - 50 கிராம்
நெய் - 1 மேசைக் கரண்டி
வெங்காயம் - 50 கிராம்
கேரட் - 50 கிராம்
கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு


செய்முறை:

முட்டையை எடுத்து அதனுடன் மிளகுத் தூள், உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, நெய் போட்டு காய்ந்ததும் முட்டை கலவையை தோசை போல் ஊற்ற வேண்டும். 

இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை விரல் நீள அகலத்திற்கு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். கேரட், கோஸ், குடமிளகாய் ஆகியவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், கொத்துமல்லியை பொடியாக நறுக்க வேண்டும். 

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் நெய்யை ஊற்றி கேரட், கோஸ், குடமிளகாய் போட்டு புரட்ட வேண்டும். நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வேகவைத்த அரிசி சாதத்துடன் வதக்கி எடுத்ததையும், ஆம்லேட் துண்டுகளையும் சேர்த்து மெதுவாக கிளறி மூடி வைக்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து சூடான ஆம்லேட் அரிசியை பறிமாறலாம்.

Pin It