தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - 750 கிராம்
பட்டாணி - 50 கிராம்
தேங்காய் விழுது - 3 மேசைக்கரண்டி
வெங்காய விழுது - 2 மேசைக் கரண்டி
கசகசா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
கொத்துமல்லி - 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை - 1
தனியா தூள் - 1 மேசைக்கரண்டி
உருளைக்கிழங்கு - 50 கிராம்
பட்டை - 6
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
கிராம்பு - 4
பச்சை மிளகாய் விழுது - 1 மேசைக்கரண்டி
தக்காளி விழுது - 1 மேசைக்கரண்டி
பொரிகடலை மாவு, உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:

கோழிக்கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கர் பாத்திரத்தில் போட வேண்டும். அதனுடன் தேங்காய், உப்பு, கசகசா, மஞ்சள், ஊறவைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு வாசனைப்பூ, பட்டை, கிராம்பு ஆகியவற்றை வறுக்க வேண்டும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சிப் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். வெந்த கறிக் கலவையைக் கொட்டி தனியாத் தூள், தக்காளி விழுது, பொரிகடலை மாவு சேர்த்து கலக்க வேண்டும். கொதித்த பின் கொத்துமல்லி தூவி இறக்கினால் கோழி குருமா தயார். சிறிது ஆறியதும் எலுமிச்சை சாறு கலந்து உபயோகிக்க வேண்டும்.


Pin It