அரைக்கத் தேவையானவை :

துவரம் பருப்பு 100 கிராம்
பச்சை மிளகாய் 2
தேங்காய் 2 சில்
பூண்டு 3 பல்
சோம்பு 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி – பெரியது 1

சமைக்க :

எண்ணெய் – தேவையான அளவு
சின்ன வெங்காயம்– 4நறுக்கியது
கடுகு உளுத்தம்பருப்பு– சிறிது,
கறிவேப்பிலை – சிறிது
உப்பு தேவையான அளவு
தண்ணீர் 2கப்
கொத்தமல்லி– சிறிது

அரைக்கும் முறை :

துவரம் பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்து, பின்னர் பச்சை மிளகாய், தேங்காய், பூண்டு, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து பின்னர் அதில் தக்காளியைச் சேர்த்து ஒன்னும் பாதியுமாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

சமைக்கும் முறை :

வாணலியில் எண்ணெயை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தையும் தாளித்து மிக்ஸியில் அரைத்து வைத்ததை வாணலியில் கொட்டி தண்ணீரையும் சேர்த்து அடிப்பிடிக்காமல், அரைப்பாகம்(தயிர்பாகம் போல) கெட்டியாகும்வரை கிளறவும். பருப்பு வெந்த வாசம் வந்தவுடன் கொத்தமல்லியை பிய்த்து தூவிவிட்டு இறக்கிசூடாக இட்லி அல்லது தோசையுடன் பரிமாறினால் உங்க வீட்டு குழந்தைகள், உறவுகள் பாராட்டைப் பெறலாம்.நோயாளிகளுக்கு இந்த வகை சட்னி சிறந்ததும்கூட.

- க.ப்ரியா யாழி, குழந்தைகள் சமையல் பயிற்றுனர்

Pin It