தேவையானவை : (4 நபருக்கு)

நாட்டுக்கோழி கறி – 1/2 கிலோ (எலும்பு நீக்கியது)
[பிராய்லர் சிக்கனிலும் செய்யலாம்]
சின்ன வெங்காயம் – 8 பல்
பச்சை மிளகாய் – சிறியது 2
பூண்டு 4 பல்
இஞ்சி – சிறிது
சோம்பு – சிறிது
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
கரி மசாலா தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 3/4 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப

சமைப்பதற்கு முன்:

சிக்கனை நன்றாக கழுவி விட்டு குக்கர் அல்லது பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிக்கன், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி 6 விசில் விட்டு வேகவைக்கவும். பின்னர் சூடு ஆறிய கறியை மிக்சியில் போட்டு மைய்ய அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

சமைக்கும் முறை :

வாணலியில் எண்ணெயை விட்டு சோம்பை பொன்னிறமாக தாளித்து நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் தாளித்து மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள சிக்கனை போட்டு தனியாக பிரிந்து வருமாறு கிளறவும். பின்னர் மிளகுத்தூள், சீரகத்தூள், கரி மசாலா தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து மசாலா காரம் நன்றாக, சிக்கனில் சேரும்படி கிளறி கறிவேப்பிலையை போட்டு சிறிது நேரம் கிளறிவிட்டு இறக்கவும்.

அனைத்து உணவுடனும் சேர்த்து சாப்பிடலாம். ஆனாலும் பள்ளிகளில் குறுகிய உணவு இடைவேளையில் சத்தான உணவு குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை என வருத்தப்படும் பெற்றோர், சப்பாத்தியுடன் பேபி சிக்கன் பொடிமாஸை தொட்டு சாப்பிட கொடுத்தால் சத்தான உணவு உண்ட திருப்தி கிடைக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

குறிப்பு:

காரம் சேர்க்கும் அளவு தேவைக்கேற்ப (வயது, சீசன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு) மாற்றிக் கொள்ளலாம். குழந்தைகளுக்கான சமையல் என்பதால் தான் “பேபி சிக்கன் பொடிமாஸ்” எனும் பெயர். ஆனால் பெரியவர்களும் சாப்பிடலாம்.

- க.ப்ரியா யாழி, குழந்தைகள் சமையல் பயிற்றுனர்

Pin It