தேவையான பொருட்கள்:

கறுப்பு திராட்சை - 1 கிலோ
சர்க்கரை - முக்கால் கிலோ
சோடியம் பென்சோனேட் - ஒன்றரை ஸ்பூன்
சிட்ரிக் அமிலம் - 1 ஸ்பூன்
கிரேப் எஸென்ஸ் - சிறிதளவு

செய்முறை:

ஒரு கிலோ திராட்சைக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு பதினைந்து நிமிடம் கொதிக்க விடவும். பிறகு மத்தால் கடையவும். பிறகு வடிகட்ட வேண்டும். மீதம் தங்கியதில் மீண்டும் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். இப்படி நான்குமுறை செய்யலாம். சூடாக இருக்கும்போதே அதனுடன் சிட்ரிக் அமிலம், சோடியம் பென்சோனேட் எஸென்ஸ் கலந்து தனியாக வைக்க வேண்டும்.
முக்கால் கிலோ சர்க்கரையை ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு, ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து ஆற வைக்க வேண்டும். இதை வடிகட்டி ஏற்கனவே கலந்து வைத்துள்ள திராட்சை திரவத்துடன் கலந்து விடலாம். திராட்சை சிரப் தயார் ஆகிவிட்டது. இதை தேவையான அளவு தண்ணீர் கலந்து குடிக்கலாம்.

Pin It