1. "ரசம் மோர் எல்லாம் வந்துட்டுப் போயாச்சு..
நீங்க இன்னும் சாம்பார்லேயே இருக்கீங்களே"

"என்ன பண்றது..அதையும் முடிச்சுட்டு அடுத்த பந்திக்குத்தான் எழணும்!"
.............................................................................................................
"மொய் வைக்கும்போது ஒரு டோக்கன் கொடுத்துருப்பாங்களே ..அதை குடுங்க சார்!"

"டோக்கனா"

"ஆமாம்! அதப் பாத்துத்தான் உங்களுக்கு முழுச் சாப்பாடா, அளவுச் சாப்பாடான்னு நாங்க முடிவு பண்ணனும்!"

2. "என்ன சார், இப்படி ஓரமா வந்து உக்காந்துருக்கீங்க இங்கேயிருந்து பார்த்தா மேடை தெரியலையே"

"முதல் பந்திக்கு கதவு திறக்கறது தெரியுமே சார்!"

3. "சாப்பாடு ஒண்ணும் சரியில்லே..என்ன கல்யாணம் பண்றான் இவன்..ச்சே!"

"...எவ்வளவு மொய் வச்சீங்க சார்"

"மொய்யா இவனுங்க எனக்கு பத்திரிகையே தரலே...நான் மானங்கெட்டுப்போய் எதுக்கு மொய் வைக்கணும்"
....................................................................................................
"இன்னும் தாலிகட்டி முடியலையே
..அதுக்குள் எங்கே கிளம்பிட்டீரு"

"பக்கத்து மண்டபத்துல முதல் பந்திக்கு இலை
போட்டாச்சாமே!"
.....................................................................................................

- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி

Pin It