சீனியர் புஷ்-ம் ஜூனியர் புஷ்-ம் விமானத்தில் போய்க்கொண்டிருந்தார்கள். விமானத்தை ஓட்டிக் கொண்டிருந்த சீனியர் புஷ், விமானத்தில் இருந்த ஒரேயொரு பாராசூட்டை எடுத்துக் கொண்டு, கீழே குதித்துவிட்டார். ஜூனியர் புஷ்க்கு விமானம் ஓட்டத் தெரியாது. பயந்துபோய், கண்ட்ரோல் ரூமைத் தொடர்பு கொண்டார். நிலைமையைச் சொன்னார். கண்ட்ரோம் ரூம் அதிகாரி கேட்டார், “எந்த இடத்துலே இருக்கீங்க? எவ்வளவு உயரத்துலே இருக்கீங்க?”

ஜூனியர் புஷ் சொன்னார், “முன்சீட்லே உட்கார்ந்திருக்கேன், ஐந்து அடி 11 அங்குல உயரத்துலே நான் இருக்கேன்”

Pin It