இன்று தமிழகத்தின் தென் கோடிப் பகுதியான ராமேஸ்வரத்தில் நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10.08.2009 அன்று அந்தமான் தீவில் ரிக்டர் அளவில் 7.6 அளவிலான நிலஅதிர்ச்சி ஏற்பட்டது. அப்பொழுது சென்னையிலும் அதிர்ச்சி உணரப்பட்டது. னால் இன்று அந்தமான் தீவில் நில அதிர்ச்சி எதுவும் ஏற்படாத நிலையில் ராமேஸ்வரத்தில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம்

இதே போன்று இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான அசாம் மேகாலாயா மிசோரம் பகுதியில் நேற்று ரிக்டர் அளவில் 4.9  அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கும் இந்தியாவின் தென் கோடிப் பகுதியான ராமேஸ்வரத்தில் இன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் தொடர்பு இல்லை.

குறிப்பாக இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு அந்தந்த இடங்களில் பூமிக்கு அடியில் உள்ள பாறைகளில் ஏற்படும் மாற்றங்களே காரணம். பூமி தோன்றிய காலத்தில் முழுவதும் பாறைக் குழம்புக் கோளமாக இருந்தது. அதன் பிறகு கோடிக் கணக்கான ஆண்டுகளாக படிப் படியாகக் குளிர்ந்து இறுகியதால் புற ஓடு உருவானது. இந்தப் புற ஓடு அடர்த்தி குறைவானதாக இருப்பதால் அவைகள் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பின் மேல் மிதக்கிறது.

இன்றும் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகிக் கொண்டிருப்பதால் பூமிக்கு அடியில் புதிய பாறைத் தட்டுகள் உருவாகின்றன. பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகிப் புதிய பாறைத் தட்டுகள் உருவாகும் பொழுது அதிலிருந்து நீரும் வாயுக்களும் பிரிவதால் பூமிக்கு அடியில் இருக்கும் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் பாறைத் தட்டுகளின் கன அளவும் அதிகரிக்கின்றன. இதனால் அந்த இடத்தில பூமிக்கு அடியில் இருந்து பாறைத் தட்டுகள் உயருகின்றன.

இவ்வாறு பூமிக்கு அடியில் புதிதாக உருவாகி உயரும் அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் அப்பகுதியில் ஏற்கனவே உருவாகி இருக்கும் பழைய பாறைத் தட்டுகளை மேல் நோக்கி தள்ளுகின்றன. இதனால் அந்த இடத்தில பூமிக்கு அடியில் இருந்து பாறைத் தட்டுகள் உயருகின்றன. இவ்வாறு ஒரு இடத்தில பாறைத் தட்டுகள் உயரும் பொழுது உயரும் பாறைத் தட்டுகளின் விளிம்புகள் அப்பகுதியில் உள்ள மற்ற பாறைத் தட்டுகளின் விளிம்புகளுடன் உரசுவதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

மற்றபடி சில ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போல் பாறைத் தட்டுகள் பக்கவாட்டில் நகருவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பது உண்மையென்றால் இந்தியாவில் எல்லா இடத்திலும் ஒரே நாளிள் நில அதிர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும்.

தமிழகத்தில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகள்

1679   ஜனவரி 28  அன்று சென்னை கோட்டையில் சிறு நில நடுக்கம்.

1807 டிசம்பர் 6 அன்று ஆவடி பூந்த மல்லி பகுதியில் சிறு நில நடுக்கம்.

1807 டிசம்பர் 10  அன்று சென்னையில் நில நடுக்கம்.

1816 செப்டம்பர் 16  அன்று சென்னையில் லேசான நில நடுக்கம்.

1822 ஜனவரி 29 அன்று வந்தவாசியில் நில நடுக்கம்.

1823  மார்ச் 2 அன்று ஸ்ரீ பெரும்புதூரில் நில அதிர்ச்சி.

1859 ஜனவரி 3 அன்று கடலாடி போரூர் ஆகிய இடங்களில் நில நடுக்கம்.

1867 ஜூலை அன்று விழுப்புரம் வளவனூர் பகுதியில் நில நடுக்கம்.

1881 டிசம்பர் 31 அன்று அந்தமானில் நில அதிர்ச்சி ஏற்பட்டபொழுது சென்னையிலும் லேசான நில அதிர்ச்சி.

1882 பிப்ரவரி 28  ஊட்டியில் நில நடுக்கம்.

1900 பிப்ரவரி அன்று கோவையில் நில அதிர்ச்சி.

1841 ஜூன் 26  அந்தமானில் ஏற்ப்பட்ட நில அதிர்ச்சியைத் தொடர்ந்து சென்னையிலும் லேசான நில அதிர்ச்சி.

1972 ஜூன் 26  அன்று கோவையில் நில அதிர்ச்சி.

1988 ஜூலைஅன்று கேரளத்தில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதியில் பாதிப்பு.

1993 டிசம்பர் 6 மன்னார் வளைகுடாவில் நில நடுக்கம்.

2000 டிசம்பர் 12  அன்று கேரளத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் லேசான நில நடுக்கம்.

2001  ஜனவரி அன்று தமிழகத்தில் தென் மாவட்டங்களில் லேசான நில அதிர்ச்சி.

2001 ஜனவரி 26  குஜராத்தில் ஏற்ப்பட்ட கடுமையான நில நடுக்கத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் லேசான நில அதிர்ச்சி.

2001 செப்டம்பர் 26  அன்று புதுவை கடலோரத்தில் லேசான நில நடுக்கம்.

2001  செப்டம்பர் 26 அன்று சென்னையில் இரண்டு முறை நில நடுக்கம்.இரண்டு பேர் பலி.

2001 அக்டோபர் 28 அன்று கேரளத்தில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தால் நாகர்கோவிலில் லேசான நில அதிர்ச்சி.

-மூலம்: இணையம்.

மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு என்ன காரணம்?

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் கிராமத்தில் இரவில் திடீரென்று நில அதிர்ச்சி ஏற்பட்டது பாத்திரங்கள் உருண்டன, டிவி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினார்கள்.(தினத்தந்தி-19.07.2009)

தமிழகத்தின் மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அந்த இடத்தில மட்டும் பூமிக்கு அடியில் உள்ள பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததே காரணம். எனவே நில அதிர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஏற்படுகின்ற ஒரு இயற்கை நிகழ்வு என்பது புலனாகும். சில சமயங்களில் ஒரு இடத்தில் பெரிய அளவில் நில அதிர்ச்சி ஏற்படும் பொழுதுதான் அதன் அதிர்ச்சி மற்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மற்றபடி பாறைத் தட்டு பக்கவாட்டில் நகர்கிறது என்று கூறுவது அடிப்படை ஆதாரமற்ற கருத்து.

- விஞ்ஞானி.க.பொன்முடி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 

Pin It